பால் - பொருட்பால் இயல் - நட்பியல் அதிகாரம் - பகைத்திறந்தெரிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 871 பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று குறள் 872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை குறள் 873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன் குறள் 874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு குறள் 875 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று குறள் 876 தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல் குறள் 877 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து குறள் 878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு குறள் 879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து குறள் 880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் பதிவு வரிசை
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.