Skip to main content

Posts

Showing posts with the label Index 083 கூடாநட்பு

083 கூடாநட்பு

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - கூடாநட்பு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 821 சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு குறள் 822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் குறள் 823 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது குறள் 824 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் குறள் 825 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று குறள் 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் குறள் 827 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் குறள் 828 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து குறள் 829 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று குறள் 830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் பதிவு வரிசை