Skip to main content

Posts

Showing posts with the label Index 054 பொச்சாவாமை

054 பொச்சாவாமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - பொச்சாவாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த  உவகை மகிழ்ச்சியிற் சோர்வு குறள் 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு குறள் 533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு குறள் 534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு குறள் 535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும் குறள் 536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல் குறள் 537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின் குறள் 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் குறள் 539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து குறள் 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்  உள்ளியது உள்ளப் பெறின் பதிவு வரிசை கேள்வியும் பதில்களாக (ஒரு முழுமையான புரிதலுக்காக. தொகுத்தலுக்காக) மறதி (என்னும் சோர்வு) எத்தகையது? எவ்...