Search This Blog

திருக்குறள்

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kura...

Thursday, May 8, 2014

அறவினை யாதெனின் கொல்லாமை

குறள் 321:  அதிகாரம்: கொல்லாமை.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந் தரும்



அறவினை - அறம் என்பது 
யாதெனின் - எது என்றால் 
கொல்லாமை - (உயிர்களை) கொல்லாமல் இருப்பது 
கோறல் - கொல்லுதல்
பிறவினை - மற்ற எல்லா பாவங்களையும் 

முழு  விளக்கம் :

பிற உயிர்களை கொல்லாமல் ,தீங்கு விளைவிக்காமல் வாழ்தல் என்பதே அறத்துக்கு உட்பட்ட செயலாகும். அவ்வாறு இல்லாம மட்டற்ற உயிர்களை கொல்வது என்பது எல்லா பாவங்களையும் நமக்கு வருவிக்கும் .

இக் குறளில் பொதுவாக உயிர்களை கொல்லுதல் பற்றி கூறி இருந்தாலும் ,இன்றைய கால கட்டத்தில் ,மனிதன் உண்பதற்காகவே உயிர்கள் கொல்லப்படுகின்றன . எனவே இக்குறள் மற்றும் அதிகாரம் புலான் மறுத்தல் அதிகாரத்தை ஒற்றியே அமைந்து இருக்கின்றது.

மனிதனாகிய நமக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை மற்ற உயிர்களிற்கும் உண்டு. இவ்வுலகம் ஒன்றும் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப் பட்டது அன்று . மற்றவர் பொருளை திருடுவது பாவம் எனக் கருதப்படுவது போல,நாம் படைக்காத ,நமக்கு உரிமை சிறிதும் இல்லாத உயிர்களை கொல்வதும் பாவமான செயலே ஆகும்.

பரிமேலழகர் உரை:
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.).

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அற வினை யாது என்னின் கொல்லாமை -அற செயல் யாது என்றால் (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல் ; கோறல் பிறவினை எல்லாம் தரும் -கொல்லுதல் மறச் செயல் எல்லாவற்றையும் கொடுக்கும்.

அகலம்: கொலையையே செய்யத் துணிந்தவன் மற்றைய பாவங்களை யயல்லாம் செய்வா னாகலான். கோறல் பிறவினை யயல்லாந் தரும் என்றார். பிற வினை எல்லாம் என்பதற்குப் பாவங்கள் எல்லாவற்றின் பயன்களையும் என்று உரைப்பாரும் உளர்.


கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே உயர்ந்த அறம்.

No comments:

Post a Comment