Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறனறிந்து மூத்த அறிவுடையார்

குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
அறன் - aṟaṉ   n. அறம்; தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).  
மூத்த - மூத்தோர்; முதியோர்; அறிஞர்
mūttōr   n. மூ-. 1. Aged persons; elders; முதியவர். விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22). 2. Learned persons;பண்டிதர். (திவா.) 3. Ministers; மந்திரிமார்.(திவா.)
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
உடையார் - செல்வர் 
கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.
திறன் -  திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.
அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognise, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).  
தேர்ச்சி, v. n. investigation; 2. learning discernment; 3. progress, proficiency.
தேர்ந்துபார்க்க, to deliberate, to examine in the mind.
tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்; அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்; அவர்க்ளின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
வாழ்வை வாழ வகுக்கப்பட்டுள்ள நெறிகளை கூறும் பல நூல்களை, வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை கற்று தேர்ந்து வாழ்வில் அன்றாடும் பயின்று ஞானமாய் உடைய அறிஞர்களுடன் நட்பு பாராட்டி அவர்களுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது அவர்களுடைய திறமையை ஒழுக்கத்தை வலிமையை கற்று அதில் தேர்ச்சி பெற உத்தேசங்களை பெற்று அவற்றை வாழ்வில் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றவற்றை வாழ்வில் பயின்றால் நம் வாழ்வு மேம்பட ஏதுவாக இருக்கும். 

சம்பந்தர்.வீழிமிழலை(3) தேவாரம் ஒன்று, “சிறியவர் அறிவினில் மிக்க விருத்தரை அடிவீழ்ந்திடம் புகும்”. ஆட்சிமுறையிலே, தலைமைப் பொறுப்பிலே இருப்பவருக்கு அறிவில் சிறந்த அமைச்சர் குழாமும், பெரியோர்களின் நட்பும் தேவை என்பதை எல்லா ஆட்சிமுறைகளுமே இந்திய துணைகண்டத்தில் உணர்த்தியிருக்கின்றன. தம் கட்டிலில் களப்பின் காரணமாக அயர்ந்து தூங்கிவிட்ட மோசிகீரனாருக்கு, சாமரம் வீசிய மன்னன், அவரது புலமைக்கும் அறிவுக்கும், அதன்காரணமாக ஏற்பட்ட நட்புக்கும் மதிப்பு கொடுத்ததாலன்றோ அவ்வாறு செய்தான்?

”பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே” என்ற புறநானூற்றுப் பாடல் சொல்லும் கருத்து: வயதில் முதிர்ந்ததற்காக மட்டும் ஒருவரை வியப்பதும், சிறியவர் என்பதனால் அறிவில் சிறந்தோரை இகழ்தலும் இல்லாதது தமிழர் பண்பாடு. இதை “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

பெரியோரின் பெருநட்பைக் கொள்ளவேண்டியது ஏன்? அவர்கள் தாம் செய்யும் பிழைகளைப் பொறுப்பதால்தானே? தவிரவும் நல்லன உணர்த்தி நல்வழி நடத்துவதால்தானே? குற்றங்கள் தவிர்த்து நல்லன செய்வோர் அத்தகு நட்பு அடைதல் அரிதா? இல்லை, என்கிறது நாலடியார் பாடலொன்று.
“பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ – அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்”

மூதுரை பாடல் ஒன்றில் ஔவையார் பெரியோருடன் இணங்கி இருத்தலை பற்றி கீழ்கண்ட வாறு கூறுகிறார்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , மூவிருகுற்றமும் முறைமையின் கடிதலின் ,காவற் சாக்காடு உகைத்தற்கு உரியனாய அரசன் , தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பேரறிவுடையராவார்: அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்.]

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
(அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).

மணக்குடவர் உரை
அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அற வழிதான் வாழ்க்கைக்கு ஆக்கங்கள் தரும் என்று
அவ்வழியைத் தம் வழியாய்க் கொண்டொழுகும் பெரியோரை
உறவாக்கி அவர் காட்டும் உயர் வழிகள் தனில் நடத்தல்
உற்றாராய் ஆட்சியிலே இருப்பாரின் பெருங் கடமை
திறமாக இதைக் கொண்டு தெளிவாக ஆளுபவர்
தெய்வமென ஆவார்கள் மக்களுக்குப் புரிவாரா?
அறமெல்லாம் தெளிவாக ஆக்கிவைத்த வள்ளுவனாம்
அப்பெரியார் துணை கொள்ளல் அழகான நல் வழியே

Thirukkural - Management - Mentoring
Mentoring has been practiced for ages. Many writers consider the origin to be that of the mentoring done to the son of the great Greek warrior Ulysses. So far, the practices were of general nature. Now, the practice of mentoring has gained a strong footing in organizations. Mentoring helps mentees improve their personal and professional productivity. Hence, organizations are investing to establish effective mentoring systems. 

Kurals show that 1) Mentoring has existed for a long period, 2) The practices of mentoring will be more professional, and 3) The needs for mentoring will increase because of organizational changes and challenges.

Mentoring is defined as, “...a relationship between two individuals, usually a senior and a junior employee, whereby the senior employee takes the junior employee ‘under his or her wing' to teach the junior employee about his or her job, introduce the junior employee to contacts, orient the employee to the industry and organization, and address social and personal issues that may arise on the job,” (Tammy, Lisa, and Mark, 2009).

Kurals that highlight the relevance of the practice of mentoring  for increased personal and professional productivity. Kural 441 advises a young person to relate with a senior person who has knowledge, wisdom, skills, and positive qualities so that the younger person will gain a lot of knowledge from the senior person.

Value and Secure the friendship
Of the virtuous, mature, and wise.

There is a belief that one conversation with a learned person is worth a month's study. So, a series of conversations in the process of mentoring will be worth years' study for a younger employee. However, Valluvar cautions us to carry out a thorough research to find a knowledgeable person. There are cases in medical history that cures become worse than diseases. A wrong mentor is worse than a disease. He will become, instead of a mentor, a tormentor. This is one of the reasons that mentoring has not gained a strong footing across industries. 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

குறள் 431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செருக்கும் - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.
சினமும் - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை (கடுமை).
சிறுமையும் - சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
இல்லார் - இல்லாதவர்
பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு.
பெருமித - பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை.
நீர்த்து - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.


முழுப்பொருள்
தான் என்னும் அகந்தை, மயக்கம் ஆகிய செருக்ககளும்; கோபம், கடுமை ஆகிய சினங்களும், கீழ்மை, பிறர் மனத்தை வருத்துகை, கயமை, அளவிற்கு மீறிய காமம் (பிறர் மனைவியை விரும்புதல், விரைவன்மகளிருடன் உறவுக்கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்) ஆகிய சிறுமைகளும் இல்லாத ஒருவரிடம் வாழ்வில் கடல் அளவு மேம்பாடு (செல்வம்) உண்டாகும், (மனம்) நிறைவு தரும். இந்த மேன்மையான செல்வம் நல்வழிகளில் செலவிடப்பட்டு, நிலையான பேற்றினை அளிக்கவல்லது. ஆதலால் அறுவகை உட்பகைகளாகக் கூறப்படும், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் இவையாவும் அறுதல் எல்லோருக்குமே நல்லதுதான். 

பிறன்மனை நயத்தலால் கெட்டான் இராவணன். வெகுளியால் கெட்டான் சனமேசயன். நுகர்ச்சியால் கெட்டான் சசந்தான்.

ஒருவிதத்தில் பார்த்தால் இராவணனுக்கு பிறன் மனைவி சீதையின் மீது கொண்ட மோகமே(இச்சை) அவனை சிறுமை செய்யவைத்தது. ஆனால் அதற்கு அவனுடைய அகந்தையும் ஒருவிதக்காரணம். பிறன் மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

சினம் குரோதத்தால் வருதல். சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும் சூதும் கள்ளும் வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல். இதனை வடநூலார் இந்திரிய சயமின்மை என்பர். இவை பெரியாரால் கடியப்படுதலின் சிறுமை என்றார்.

செருக்கு, சினம், சிறுமை ஆகிய இம்மூன்று குற்றங்களை மனிதன் கவனத்தை சிதைக்கும். சலனங்களை உண்டுப்பன்னும். ஆக்கப்பூர்வமான செயல்களில் இருந்தும் குறிக்கோள்களில் இருந்தும் திசைத்திருப்பும். கேடு வரும். ஆதலால் இம்மூன்று குற்றங்கள் இல்லாதவர்கள் ஆக்கம் உடையவர்கள் ஆவர். 


உரையாசிரியர்கள் சிறுமை என்பதை அளவிறந்த இச்சையென்று கூறுகிறார்கள். அதுவும் சரியே. ஏனெனில் இச்சையே மற்ற இழிகுணங்களின் பிறப்பிடம். திருமூலர் சொல்லிய வாக்கு, “ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” எல்லோருக்கும் பொருந்துவது,  குறிப்பாக ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானது. சனகராஜனைப் போல் பற்றற்று ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும் என்பார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
(மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

மு.வரதராசனார் உரை
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who does not have ego, anger and attachment to trivial and bad things would be able to focus on improving his or heath greatness and wealth to the same extent as the sea. Because ego, anger and attachment will create distractions in one's mind, deplete one's energy and will not let one to focus on his or her work or goals.

Questions that I ask to the kid
What (Are the 3 things) one should overcome in order to achieve greatness and wealth? Why are those 3 things act as hurdles to greatness/productivity?

அறிவற்றங் காக்குங் கருவி

குறள் 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை
காக்கும்
கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்
செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்; கொல்லு
செறுவார்க்கும் - கோபப்படுவோர்;  உள்ளத்துறுதியைக் குலைக்கும் பகைவர்களான ஐம்புலனாசைகள்
உள்  - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை
அழிக்கல் - அழிக்க முடியாதபடி காக்கின்ற
ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.
அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்


முழுப்பொருள்

நூல்களில் இருந்து கற்கும் அறிவு என்பது நம்மை துன்பத்தில் இருந்து காக்கும் சிறப்பு வாய்ந்தது. அத்தகைய அறிவென்பது ஒரு அழியா சொத்துமாகும். ஒருவரின் ஐம்புலனாசைகளால் உள்ளத்து உறுதியை குலைக்க முடியும். ஆனால் அறிவை குலைக்க முடியாது. ஆதலால் அது அழிக்க முடியாத அரணாகும். ஒருவர் மிகுந்த நெருக்கடியால் ஐம்புலன்களிடம் சறுக்கியமையால் துன்பத்தில் இருப்பார். ஆனால் அதுவே இறுதி கிடையாது. அதில் இருந்து அவரால் மீண்டு வர முடியும். அப்பொழுது அறிவே உறுதுணையாக இருக்கும்.

எவ்வளவு அறிவிருந்தாலும், அவாவிற்கு இடம் கொடுத்தால் அது நம்மை வஞ்சித்து வாழ்வில் சறுக்கலை உண்டாக்கும். ஆகவே தான் "நிற்க அதற்கு தக" என்று முன்னர் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் போலிருக்கு.

உதாரணமாக
நாம் எல்லோரும் தேனீயிடம் இருந்து தேனை திருடுகிறோம். ஆனால் இதனால் தேனீ துவண்டு போவதில்லை. ஏனெனில் தேனீக்கும் மட்டுமே பூவில் இருந்து தேன் உருவாக்கும் வித்தை தெரியும். அதுவே அறிவின் சிறப்பு என்று சொல்லலாம். 

Image result for honeycomb forest
Image result for honeycomb forest

மேலும்: அஷோக் உரை

அறிவின் விளைவா உறுதிப்பாடு? - ஜெயமோகன்

உன் படைக்கலம் உனது மூன்றாவது கரமும் இரண்டாவது மனமும் முதல்தெய்வமும் ஆகட்டும்

பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம்.

எங்கிருந்து எங்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார் என்னும் திகைப்பும் நிறைவும் உருவாகிறது.

உங்கள் செயற்களத்தைக் கண்டுகொண்டால் உங்களிடமும் இந்த விலக்கமும், தயக்கமும் இருக்காது. உங்கள் நிறைவை நீங்களும் அடையக்கூடும். வாசிப்பு அதை கண்டடைவதற்கான வழி மட்டுமே.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மையறிவு உடையன் ஆதல் , அதிகார முறைமையும் இதனானே விளங்கும். ]


அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.
(காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

Thirukkural - Management - Knowledge
A protective weapon for a person is his knowledge. “Knowledge,”  according to Oxford Advanced Learner’s Dictionary, “is the facts, information, understanding and skills that a person has acquired through experience or education.” Knowledge is not only a possession but also a weapon of defense as it protects a person from destruction.  Others can destroy a person but they cannot destroy the knowledge possessed by that person. This Practice presents seven Kurals in defense of knowledge. 

Knowledge is similar to the fortress of a King that protects him from the intrusion of enemies. Knowledge gives not only an external protection but also an internal defense to the possessor. One's knowledge is always helpful for one especially during  the times of crises. Kural 421 supports the view that knowledge is a fortress.

Wisdom is a weapon of defense, 
An inner fortress nor foe can raze.

இருவகை அறிவு (இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்)
அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிதாக்குவதற்கு உலகிலுள்ள பொருள்களை எவ்வளவு விதமாகப் பயன்படுத்தலாமென்பதை அறிவது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும் இந்த உலகமுமே எதற்காக என்பதை அறிவதே இரண்டாவது வகை.  இந்த இரண்டாவது வகை அறிவின் விரிவே தத்துவ ஞானம் எனப்படுவது. முதலாவது அறிவுக்கு உலகிலுள்ள பொருள்களும் உலகின் பகுதிகளும் விஷயமாக, இரண்டாவது வகை அறிவு, உலகம் முழுவதையுமே தனக்கு விஷயமாக்கி, இந்த உலகம் எதிலிருந்து, எங்ஙனம், எதற்காக உற்பத்தியானது என்பதை ஆராய்கின்றது. ஆகவே, இந்த இரண்டாவது வகையே அடிப்படையாவது. இந்த அடிப்படை அறிவை நமக்குத் தருவன என்ற காரணத்தால்தான், அறிவு நூல் என்ற கருத்தையுடைய பெயர் வேதங்களுக்கு ஏற்படலாயிற்று.

English Meaning - As I taught a kid - Rajesh
Knowledge, that we gain from books and from listening to others, is the tool that helps us to come out from pain, difficult times, danger, suffering, poverty, loss, falsehood, darkness etc. Such a knowledge is an indestructible asset for anyone. The five sensory pleasures can destruct a person's focus however the knowledge cannot be destructed. Hence, knowledge is an indestructible fort within ourselves. When one has hit rock bottom, it is not the end. Using knowledge, one can recover and do wonders in life.

Questions that I ask to the kid
Knowledge is a tool. Explain
Knowledge is an indestructible fort. Explain

எனைத்தானும் நல்லவை கேட்க

குறள் 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
[பொருட்பால், அரசியல், கேள்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனை - eṉai   adv. என் What, why;என்ன.  , eṉai   எ³. adj. All; எல்லாம் சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62).--adv. However much;எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207).
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

எனைத்தானும் -  எவ்வளவு சிறிதாயினும்

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக
அனைத்தானும் - அந்த அளவில்

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.
பெருமை - மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை
தரும் - ஈன்றும்

முழுப்பொருள்
எவ்வளவு சிறிதாயினும் சிறிது நேரமாயினும் எவ்வளவு சிறிது பயன் பயக்குமாயினும் நல்லவற்றை செவி வழியாவது கேட்டு கற்தல் வேண்டும். எல்லா நல்ல நூல்களையும் ஒருவரால் கற்க முடியாது. ஆதலால் சிலவற்றை செவி வழியாவது கேட்க வேண்டும்.  இதில் வள்ளுவர் பெரியோர் என்று வயதில் பெரியவரை குறிப்பிடவில்லை ஏனென்றால் எவ்வளவு வயதில் சிறியவர் ஆயினும் அவரிடம் கற்க ஏதாவது இருந்தால் அவரிடம் கற்கலாம். அப்படி சிறிதாயினும் ஒருவர் செவி வழியாக கற்றால் அது அவருக்கு மிகுந்த வல்லமையையும் பயனையும் ஈன்றுத் தரும். 

அது மட்டுமின்றி இங்கே நாம் நோக்க வேண்டிய மற்றோன்று நல்லவை கேட்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்கிறார். தீயவை என்றால் காது கொடுத்துக் கூட கேட்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.

உதாரணமாக
திருவருட்செல்வர் திரைப்படத்தில், மன்னர் (மன்னராக வருபவர் சிவாஜி கணேசன்) அவர்களுக்கு உள்ள சந்தேகத்தை போக்க ஒரு குழந்தை (குழந்தையாக குட்டி பத்மினி) வந்து பதில் கூறும். அதனை ஏற்றார் அரசர். ஆதலால் அவரால் கேள்விகளுக்கு விடைக்காண முடிந்தது. 

Image result for thiruvarutchelvar kutty padmini


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.).

மணக்குடவர் உரை
எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Thirukkural - Management - Listening
Though listening has its own benefits, we will not become wise just by listening to everything we come across. What gives us an advantage is the things that we listen to. We need to be choosy in our listening. The Kural 416 educates us of what we need to listen.

Listen to the good however little 
And gain that much.

Whatever little we listen to, let that be relevant  so that that will make us learned and wise. That sort of listening will help you learn things better and give you a deep fulfillment.

English Meaning - As I taught a kid - Rajesh
No matter how big or small irrespective of the size of learning,  or its impact, or from whomever we can learn, one should listen and learn from others. Through such numerous small learnings, its cumulative and compound effect would be have a bigger impact in our life and career. Listening and learnings from others is important because 1) We can learn only limitedly from books because we have only limited time 2) We can learn diverse perspectives, experiences, fine-tuning tips, pitfalls from others 3) We don't have to re-invent the wheel, we can build on existing things and move the needle. 

Questions that I ask to the kid
1) Why should listen to and learn from others? What are the benefits?
2) Can we learn everything from books? Why? So, what should we do ?

அரங்கின்றி வட்டாடி யற்றே

குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அரங்கு - araṅku   * n. raṅga. 1. Stage,dancing hall; நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79). 2. Assembly hall;சபை. (சூடா.) 3. Gambling house; சூதாடுமிடம் அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).4. Place or board chequered with squares;சூதாடுவதற்கு வகுத்த தானம் அரங்கின்றி வட்டாடியற்றே (குறள், 401). 5. Womb; கருப்பம் அரங்கிலவனென்னை யெய்தாமற் காப்பான் (திவா. இயற். நான் 30).  
இன்றி - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல். 
வட்டு - சூதாடுங்கருவி; திரட்சி; திரண்டபொருள்; நீர்வீசுகருவிகளுள்ஒன்று; ஒருவிளையாட்டுக்கருவிவகை; அப்பளஞ்செய்யுமாறுஉருட்டிவைக்கும்மாவுருண்டை; முள்ளிச்செடி; சிறுதுணி; கண்டசருக்கரை; குடையில்கம்பிகள்கூடுமிடம்.
ஆடியற்றே - ஆடுவதுபோலாம்
நிரம்பிய - பெருகிய, நுண்ணிய அறிவினைத் தரும்
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை
இன்றிக் - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல். 
கோட்டி - துன்பம்; பைத்தியம்; பசுடி; நிந்தை; சபை; குழு; கூட்டம்; பேச்சு; அழகு; ஒருவரோடுகூடியிருக்கை; கோபுரவாயில்; மனைவாயில்; கிட்டிப்புள்; விகடக்கூத்து.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்; அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்; அவர்க்ளின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
ஒரு விளையாட்டை விளையாட வேண்டும் என்றால், அவ்விளையாட்டிற்கு தேவையான அறிவை பெற்றிடுதல் வேண்டும். அதற்கு தேவையான அரங்கினை அமைக்க வேண்டும். ஒரு சூது விளையாட்டானாலும் அதற்கு தேவையான கட்டங்களை வரைய வேண்டும். அப்படி ஒரு விளையாட்டிற்கு தேவையான வற்றை கட்டமைக்காமல் அவ்விளையாட்டை விளையாட முடியாது.

அதுப்போல சான்றோர்கள் அறிவுடையோர் நிறைந்த சபையில் ஒருவர் பேசவேண்டும் என்றால் நூல்கள் பல கற்று ஆயுத்தமாக இருக்க வேண்டும். அப்படி கற்காமல் பேசுவது என்பது கட்டங்களை வரையாமல் விளையாடுவது போல் ஆகும். இது நகைக்க தக்கது.  கல்லாமை எவ்வளவு மடமையானது என்பதை உணர்த்துகிறது.

உதாரணம்
இந்த எடுத்துக்காட்டுக்கு, வள்ளுவர் காலத்திய பகடை ஆட்டம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. பாண்டவர்களின் மூத்தவரான தருமர் கௌரவர் அமைத்த சூதாட்டகளத்தின் தன்மையை முற்றிலுல் ஆராயாது சூதாட புகுந்ததினால்,  எல்லாவற்றையும் இழந்து, எதைவைத்து இழக்கக்கூடாதோ, அதாவது தங்களின் மனைவியான பாஞ்சாலியயும் இழந்து அவமானப்பட்டு, வனவாசம் புகநேர்ந்ததைச் சுட்டிக்காட்டி கல்லாமையினால் வரும் இழப்புகளையும், அவமானங்களையும் சுட்டிக்காட்டுகிறார் முதற்குறளிலேயே வள்ளுவர்.

Image result for mahabharatha game

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வல்லான் ஆடிய மணிவட்டு” (சீவக.983)
“இன்னா, கல்லாதான் கோட்டி கொளல்” (இன்னா.29)

பரிமேலழகர் உரை
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.).

மணக்குடவர் உரை
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If person plays a game without knowing its rules and regulations, without practice without constructing the basic playfield for the game, then the person's ignorance of the game will be come obvious to whoever watching the game. Similarly, if a person goes to a stage or conference or meeting or gathering without preparation without knowledge, then it would become obvious and people would laugh at him. Hence, not learning is looked upon very low.

Questions that I ask to the kid
What happens if we don't know the rules of game? What happens when a person goes to stage or to a discussion or interview without preparation or knowledge?