Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
பல்லார் - pallār   pron. பல்¹. Many persons; பலர்
முனியப் - முன் + இய
முன் - முன்பு
இய - இயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை, இணக்கம்; பொருத்தம் 
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
இல - இல் - இல்லை
சொல்லுவான் - பேசுவான்
எல்லாரும் - கூட்டத்தில் கூடியுள்ள எல்லோராலும்
எள்ளல் - இகழ்தல்; நிந்தித்தல்; இழிவாகப்பேசல்; தள்ளல்; சிரித்தல்.
எள்ளப்படும் - சிரிப்புக்குள்ளாகி இகழப்படுவான்

முழுப்பொருள்
ஓர் இடத்தில் ஒருவருக்கு-இருவருக்கு மேல் கூடும் பொழுது அது பெரும்பாலாக ஒரு நிகழ்விற்காக இருக்கும். பலர் கூடும் இடங்களில் பலருடைய நேரம் அடங்கி உள்ளது. இருவர் மட்டும் சந்தித்து ஒரு மணி நேரம் (அல்லது ஒரு நாழிகை) பேசினால் அங்கே இரு மனித மணி நேரங்கள் செல்வாகிறது. அதுவே 20 பேர் கூடினால் ஒரு மணி நேரத்தில் 20 மணி நேரங்கள் செல்வாகும். எத்தனை பெருஞ்செல்வம் அந்த மணித்துளிகள்! அத்தகைய கூட்டு நேரத்தை மிகவும் விவேகமாக செலவிட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பலர் கூடி இருக்கும் இடத்தில் தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களை ஒருவன் சொல்வான் என்றால் அத்தகையவன் கூட்டத்தில் கூடிய எல்லோராலும் நகைப்புக்குள்ளாகி இகழப்படுவான்.

ஒப்புமை
பயனில மொழிவாயோ (கலி.69:11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.)

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

மு.வரதராசனார் உரை
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

Thirukkural - Management - Communication - Meaningful Speech
The message in Kural 191 provides additional knowledge to the view expressed in Kural 196. A person who speaks unwanted, meaningless, and out of place words will be laughed at, criticized, and looked down by learned people. People who give importance to meaningful words or speeches will despise the person who appreciates meaningless conversations.

To disgust people with empty words 
Is to be despised  by all.

அறங்கூறான் அல்ல செயினும்

குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறம் - aṟam   n. அறு-. 1. Happiness;சுகம். (சம். அக. Ms.) 2. That which is salutary; இதம். அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி(சிலப். 14, 28).
அறம்புறமாகப்பேசு-தல் aṟam-puṟam-āka-p-pēcu-, v. intr. அறம் + புறம் + ஆ- +. Tospeak disrespectfully, vulgarly; மரியாதையின்றித் தாழ்வாகப் பேசுதல். (J.)

கூறான் - கூறாதவன், பேசதாவன்

அல்ல - அறத்திற்கு புறம்பான பாவங்களைச்

செயினும் - செய்தாலும்

ஒருவன் - அத்தகையவன்

புறம் வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.

கூறான் - கூறாதவன், பேசதாவன்

என்றல் - என்றால்

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
உலக நூல்கள் அனைத்தும் எந்தெந்த காரியங்கள் அறம் என்று சொல்கின்றன. அத்தகைய அறச்செயல்களை செய்தால் நன்மை பயக்கும் மற்றும் வீடு அடைய ஏதுவாக இருக்கும்.  இவ்வுலகலில் எல்லோரும் அறத்தை பின்பற்றி வாழ்வதில்லை. ஆனால் புறம் பேசுவோர் பெரும்பான்மையில் உண்டு என்று திருவள்ளுவருக்கு தெரியும் போலிருக்கு. 

ஒருவன் வாழ்வில் செய்யவேண்டிய அறச்செயல்களை செய்யாமல் இருந்தாலும், அறச்சொற்களை பேசாமல் இருந்தாலும், (அறம் என்ற சொல்லுக்கு நேர்மை என்றும் பொருள்) நேர்மையான சொற்களை நேர்பட பேசாமல் இருந்தாலும், முகத்திற்கு நேராக நேர்மையான கருத்துக்களை பேசாமல் இருந்தாலும், முகத்திற்கு நேராக (முகஸ்தூதியோடு) வஞ்சனையாக பேசினாலும் (வஞ்சமாய் பேசினால் மனிதன் அறிந்துக்கொள்ள முடியும்), அறம் அல்லாதாவற்றை செய்தாலும், நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்டாலும் பரவாயில்லை அக்தொருவன் முதுகிற்கு பின்பு நின்று புறம் பேசாமல் இருந்தால் என்று. அக்தொரு அறமற்றவன் புறம் பேசாமல் இருந்தால் அவனுக்கு அது நன்மையே பயக்கும் என்கிறார் திருவள்ளுவர். 

இங்கே புறம் பேசுவது என்றால் நாம் இல்லாத போது நமது உற்றாரிடம் நம்மை பற்றி நேர்மையற்ற சொற்களை கூறுவது, நம்மை பற்றி அன்னியர்களிடம் கூறுவது நாம் இல்லாத பொழுது ஆகும். 

இங்கே திருவள்ளுவர் புறம் பேசாமல் இருந்தால் போதும் அறமற்றவற்றை செய்யலாம் என்று சொல்லவில்லை. அறமற்றவருக்கே புறம் பேசாமல் இருந்தால் நன்மை பயக்கும் என்றால், அறத்துடன் இருப்பவர் புறம் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

பாரதியாரும் தன்னுடைய பாப்பா பாட்டிலே, “இளமையில் கல்” என்பதற்கு ஏற்றவாறு “புறஞ்சொல்லாலாகாது பாப்பா” என்பார்.

உலகநாதர் தன்னுடைய உலகநீதி என்ற நூலில் “போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்”,  “காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம், புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம், புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்” என்று சொல்லுகிறார்.

வள்ளாலார் சுவாமிகள் “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று சொல்கிறார்.

எல்லா நீதி நூல்களும் புறங்கூறாமையை இழிந்து உரைப்பதோடு, புறங்கூறுவாரோடு சேருவதையும் வேண்டாமென்கின்றன.

பெரியோர் பெருமையைப் பற்றி பேசும் அதிகாரத்தில், நாலடியார், “பிறர் மறையின்கட் செவிடாய் திறனறிந்து ஏதிலாரிற்கட் குருடனாய் தீய புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு” என்னும். அதாவது தீமைதரும் புறங்கூற நேரின் ஊமையாகிவிட வேண்டுமென்ற குணமுடையவரே மேலோர் என்கிறது இப்பாடல்.  “இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் பழிப்புறம் சொல்லாப் பண்பினன்” என்று புறங்கூறுதலை பழித்து, கூறாததை பண்பு என்றும் சொல்கிறது பெருங்கதையில் வரும் இவ்வரிகள்.

ஒப்புமை
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு (நாலடி 158)

இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்
பழிப்புறம் சொல்லாப் பண்பினன் (பெருங் 1.36:9-10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

Thirukkural - Management - Avoiding Backbiting
One of the limiting and self-injuring habits is talking the negatives of people behind their backs. “Backbiting,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 74), “is unkind and unpleasant talk about somebody who is not present.” A universally damaging habit is unknowingly practiced by most of us. An employee complains to his spouse against his superior and complaints to his colleagues against his spouse. Ironically, neither his spouse can influence the behavior of his boss, nor his colleagues can influence the behavior of his spouse. This situation must sound familiar to you.

Rarely there are exceptions to this condescending, if that is the right word, practice. One person commented, “Backbiting is lubrication for our gossips. Without backbiting, we cannot continue our conversations here. We cannot pass time.” People, for sure, cannot pass their time without getting into it. Though everyone talks against talking behind other people, everyone enjoys doing that.

People spend considerable time talking against others and suddenly they become philosophical or enlightened and say ‘there is no point in backbiting as it is meaningless and waste of time.' They get into backbiting again and become philosophical again. Gossiping and regretting are regular practices for some people. 

Valluvar anticipated the irrelevance of talking against people in their absence and relevantly devoted a chapter to the ills of backbiting. Kurals that warn us of the negative consequences of backbiting and educate us to avoid resorting to that practice. Though a person does not do any virtuous act, he will be considered a pleasant person, if he does not talk ill of others in their absence, as in Kural 181. Not talking ill of someone in someone's absence is better and more pleasant than doing any positive act.

Even to ignore virtue and to sin
Is not so bad as to earn a slanderer's name 

English Meaning - As I taught a kid - Rajesh
Even if one does not speak positive things or truth, people will still consider him better or fine if he doesn't gossip or talk behind the back. Because gossiping or backbiting is considered characterless as it is unproductive, destructive and creates a negativity.

Questions that I ask to the kid
When will this world get consider you a better person even if you don't do speak positive things? Why gossiping is considered bad?

நடுவின்றி நன்பொருள் வெஃகின்

குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை;

நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி; equity, justice, impartiality.

இன்றி - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96,30, உரை).

நன் - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வெஃகின் - வெஃகு-தல் -  veḵku-   5 v. tr. 1. To desire ardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174).

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பொன்றி - அழியும்

குற்றமும் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

ஆங்கே - அங்கே

தரும் - ஈன்றும்

முழுப்பொருள்
நடுவு என்றால் நீதி. நீதி என்றால் அறம். நடுவின்றி என்றால் நேர்மையில்லாத, அறமில்லாத, உழைப்பில்லாத, நேர்மையான உழைப்பில்லாத என்று பொருள். 

நாம் ஒரு பொருளின் மீது விருப்பம் கொள்கிறோம் என்றால் அதன் மீது ஒரு நியாயம் வேண்டும். அப்பொருளை விரும்புவதற்கான நேர்மையான எண்ணங்களும் உழைப்பும் வேண்டும். இல்லையென்றால் அது அறமாகது. 

இங்கே திருவள்ளுவர் ஒரு பொருளை உடைமையாக்கிக்கொள்வது தவறு என்று மட்டும் சொல்லவில்லை. அறமில்லாமல் ஒரு பொருளை விரும்புவதுக் கூட தவறு என்கிறார் திருவள்ளுவர். 

அப்படி ஒருவர் நேர்மையான உழைப்பில்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் ஒரு பொருளை விரும்பினால் அஃது அவருடைய புகழையும் அவரது குடும்பத்தின் புகழையும் அழிக்கும். அது மட்டும் அல்லாது குற்றங்களையும் (குற்றங்கள் செய்யத் தூண்டும்) தரும் என்கிறார் திருவள்ளுவர்.


Image result for ravana sita

(Ravana Abducting Sita)

உதாரணம்:
இச்சைக்கு ராவணனே நல்ல உதாரணமாகும். சீதா மீது கொண்ட இச்சையினால் தான் அவன் எல்லா தவறுகளை செய்தால். பிறர் (ராமரின்) மனைவி சீதா என்று தெரிந்தும், பிறர் மனைவி மீது இச்சைக்கொள்வது தவறு என்று தெரிந்தும் இச்சைக்கொண்டான். அதுவே அவனை பல குற்றங்களை செய்ய வைத்தது. அதுவே அவனது அனைத்து புகழையும் (சிவ பக்தன், வீணை வித்வான், நல்ல ஆட்சியாளன் என்ற பல புகழ்கள்) அழித்தது. ஆதலால் தான் கம்பர் இராமாயணத்தில் சொல்லி இருப்பார்  "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி எத்தனை உயர்ந்தது என்று கீழே காணவும்.

மேற்சொன்ன கம்பராமாயண வரிகளின் ஜெயமோகனின் விரிவுரை கீழே

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.

இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.


பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.

மேலும்:
இன்னா நாற்பது பாடலொன்று, “அடைக்கலம் வவ்வுதல் இன்னா” என்று பிறரிடம் அடைக்கலமாகிய பொருளைக் கவருதல் துன்பம் தரும் என்கிறது. மாவலி வானகத்தையும் வையகத்தையும் பறித்து என்ற பொருளிலே கம்பர் “திறல் மாவலி என்பான் வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்” என்பார். மாவலி என்பான் திறமுடையவந்தான் ஆனால் தேவருக்கு உரிய வானகத்தையும், மனிதருக்குரிய வையகத்தையும் அவன் முறையற்று கவர்ந்ததை “வவ்வுதல்” என்ற சொல்லிலே கம்பர் உணர்த்துகிறார்.
அபிராமி பட்டரோ உமை சிவனாரின் இடப்பாகம் பற்றியதை உணர்த்துவிதமாக இருபாடல்களில் வவ்வுதலைக் குறிக்கிறார். இக்குறள் கருத்துக்கு மாறாக இருந்தாலும், பற்றினை நல்விதமாகக் கூறுதலுக்கும் வவ்வுதல் பயனாகியுள்ளது. “வவ்வியபாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே” என்பார் பட்டர்.  அந்தாதியானதால், முந்தைய பாடலில், “மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?” என்ற வினாவோடு முடித்திருப்பார்.
மற்றொரு முத்தொள்ளாயிரப்பாடல், தலைவனிடம் மயங்கி அவனிடம் மனதை பறிகொடுத்த பெண்கள் அதனால், அழகு குன்றினராம். அவ்வாறு பெண்களின்  அழகைத் திருடிகொண்டு போனமன்னன் எப்படி செங்கோல் செலுத்தும் மன்னனாக இருக்கமுடியும் என்கிறது. கவிதை நயத்தில் தலைவனை ஏற்றிச் சொன்னாலும் வவ்வுதல் என்ற சொல் “திருடலுக்கு ஒப்பானதாகவும், அது செங்கோல் ஏந்தும் தகுதியை மன்னனுக்கு அளிக்காது” என்றும் சொல்வது கவனிக்கத்தக்கது. அப்பாடல்:

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! – நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.).

மணக்குடவர் உரை
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

பொறுத்தல் இறப்பினை என்றும்

குறள் 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொறை பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.
பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

இறப்பு - அதிக்கிரமம்; மிகுதி போக்கு இறப்பு உலர்ந்தபொருள்; வீடுபேறு வீட்டின்இறப்பு; இறந்தகாலம்; ṟappu   v. n. & s. (இற), death, மரணம்; 2. excess, too much in quantity, மிகுதி; 3. transgression, wrong; மீறு தல்; 4. the eaves of a house, இற வானம்; 5. past tense, இறந்தகாலம்; 6. that which is superior, உயர்ந்த பொருள்.  

இறப்பினை -  உயர்ந்தது, சிறந்தது

என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும் - என்று இருந்தாலும்

அதனை - அந்த செயலை (அந்த தவறை)

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

அதனினும் - அதனை விட

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று.

மன்னிப்பு கேட்காதவரிடம் நாம்  அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது. குற்றங்களை மறத்தல் நமக்கு இனிதே தரும். இங்கே நன்று என்ற வார்த்தைக்கு வாழ்வின்நோக்கம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் குற்றங்களை மறத்தல் என்பது நல்லவைக்கான வாழ்வின் நோக்கமாக கொண்டால் நன்மை நிச்சயம் என்று சொல்லலாம்.

ஏன் மறக்கவேண்டும்?
1) நம் மனதில் மற்றவரை பற்றிய தவறான ஒரு சித்திரம் ஆழ புதைந்திருந்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது நமது பேச்சிலோ அல்லது முகத்திலோ தெரிந்துவிடும் (அகத்தில் உள்ளது முகத்தில் தெரிந்துவிடும்). அது மற்றவருக்கு சங்கடத்தையே தரும். முன் செய்த தவறினை மனதில் கொண்டு ஒருவரை பின்னாளில் எடைபோடவும் கூடாது, அவரிடம் தரப்படும் செயல்களில் அச்சாயம் பூசி நோக்கக்கூடாது. முக்கியமாக குடும்பங்களில் (மற்றும் அலுவலங்களில்) நாம் மனிதர்களை இடைவிடாது சந்தித்துக்கொண்டே இருப்போம். பல நிகழ்ச்சிகளில், விஷேசங்களில் என்று சந்திப்போம். அப்போழுது எல்லாம் மனதில் கசப்பை வைத்துக்கொண்டு இருந்தால் அன்பு மலர ஏதுவாக இருக்காது. வெறும் முகஸ்துதியே மிஞ்சும். ஆதலால் அன்பு மலர வேண்டும் என்றால் தவறுகளை மறக்க வேண்டும்.

2) நம் மனம் என்பது ஒரு கோயில் போன்று சுத்தமாக இருக்க வேண்டும். அங்கே மாசு தனை நெருங்கவிடக்கூடாது.

3) ஃபஸ்புக் (Facebook)இன் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் (Mark Zuckerburg) என்பவர் எப்பொழுதும் ஒரே வகையான் சாம்பல் நிற டி-சர்ட்-களையே (grey color T-Shirt) அணிவார். அதற்கு காரணம் என்று சொல்வது என்னவென்றால் ஒவ்வொரு நாளும் நாம் என்ன சட்டை போடுவது என்று யோசிக்கும்பொழுது (முடிவு எடுக்கும் பொழுது) நாம் நமது ஆற்றலை பயன்படுத்துகிறோம். அவ்வாற்றலை நாம் வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் பயன்படுத்தினால் மிகவும் நன்று என்று சொல்வார். (திருக்குறளுக்கு வருவோம்). மனித ஆற்றல் என்பது வல்லமைவாய்ந்தது. அதனை (குற்றங்களை மனதில் வைத்துக்கொள்ளும் போன்ற) தேவையில்லாதவற்றில் அற்பவிஷயங்களைல் செலவு செய்யவேண்டாம்.

4) சிலர் செய்த தவறுகளை மற்றவர்களுக்கு ஞாபகம் படுத்துவர். அவர்களின் வாயை அடைப்பதுபோல பேசுவர். குற்றம் செய்ததனால் அவர் வாழவே தகுதி இல்லாதவர் போன்று பேசுவர். இது மனித தன்மை அற்றது. இது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். வேந்த புன்னில் வேலை பாச்சுவதற்கு சமம். ஆதலால் தான் மறத்தல் மன்னித்தலை விடவும் சிறந்தது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”...............நன்றல்ல
தன்றே மறப்பது நன்று” (குறள் 108)

பரிமேலழகர் உரை
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்).

மணக்குடவர் உரை
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

மு.வரதராசனார் உரை
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

சாலமன் பாப்பையா உரை
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

Thirukkural - Management - Tolerance
Valluvar resorts to a comparison to connect the power and benefits of tolerance in Kural 152.

Forgive transgressions always, better still 
Forget them.

A person of tolerance has to tolerate people who trouble him beyond a controllable limit. There is  nothing excess for a person with high tolerance for others as he can tolerate any trespassing by others. A person of intolerance has only excuses. Forgetting the troubles and the troublemakers is far better than just tolerating their insults and humiliations. If you retaliate to a person who troubled you, the thoughts of troubles remain deep inside and they trouble you a lot. If you want to take care of yourself, always forgive and forget people who have insulted, hurt, and humiliated you.

English Meaning - As I taught a kid - Rajesh
One should always tolerate a transgression/wrongdoing/offense. At the same time, it is even better to forget the transgression. A person might ask for forgiveness or realize his/her mistake and a person may not ask for forgiveness or realize his/her mistake. In both cases tolerating is a great quality. Forgetting that is even better because anything bad i.e., hatred, vengeance in our heart will prison us and kill us slowly. It will deplete our energy which can be used for productive stuffs. It can distract us from our goal. (remember kurals நகையும் உவகையும் கொல்லும் சினம், யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்)

Questions that I ask to the kid
What is better to forget than?
Forgetting Vs Tolerance - Which is better? Explain.

பிறன்பொருளாள் பெட்டொழுகும்

குறள் 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]

பொருள்
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

பொருளாள் - poruḷ-āḷ   n. id. +. Wife,as one's property; மனைவி

பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.
பெட்டு - peṭṭu   n. prob. பெள்-. 1. Lie, false-hood; பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொ. கோபப்பிர.). 2. Delusiveword; மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக்கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93).

ஒழுகும் - ஒழுகு - நெறிப்படி நடக்க; ஒழுகல் - v. noun. Flowing. 2. Leaking, dropping, a leak. 3. Behavior. 4.

பேதைமை - taimai   n. id. Folly;ignorance; credulousness; மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249).

ஞாலத்து - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை

கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār   n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

இல் - இல்லை

முழுப்பொருள்
காம மயக்கத்தினால் பிறருடைய மனைவி மீது பற்றுக்கொண்டு அவள் சொற்படி நடப்பது மடமை என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய மடமை உலகத்தின் அறம் பொருள் அறிந்தோரிடம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். அம்மடமை இருந்தால் அவர்களிடம் அறம் பொருள் இல்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.

உதாரணம் 2
சற்று தள்ளி நின்று பார்த்தால் இது பிறன்பொருளாளுக்கு மட்டும் பொருந்தாது. நமது இன்றைய தமிழக அரசியலுக்கும் பொருந்தும். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு இப்போதைய தமிழக அரசின் ஆட்சி (எடப்பாடி ஆகட்டும் சரி, பன்னீர்செல்வம் ஆகட்டும் சரி) மத்திய அரசின் (பாஜக - நரேந்திர மோடி-யின்) கண் அசைவிற்கு ஏற்றப்படி நடக்கிறது. இது மடமையே ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

மு.வரதராசனார் உரை
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.