குறள் 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை ]
பொருள்
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.
பொருளாள் - poruḷ-āḷ n. id. +. Wife,as one's property; மனைவி
பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.
பெட்டு - peṭṭu n. prob. பெள்-. 1. Lie, false-hood; பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொ. கோபப்பிர.). 2. Delusiveword; மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக்கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93).
ஒழுகும் - ஒழுகு - நெறிப்படி நடக்க; ஒழுகல் - v. noun. Flowing. 2. Leaking, dropping, a leak. 3. Behavior. 4.
பேதைமை - taimai n. id. Folly;ignorance; credulousness; மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249).
ஞாலத்து - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை
கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
இல் - இல்லை
முழுப்பொருள்
காம மயக்கத்தினால் பிறருடைய மனைவி மீது பற்றுக்கொண்டு அவள் சொற்படி நடப்பது மடமை என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய மடமை உலகத்தின் அறம் பொருள் அறிந்தோரிடம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். அம்மடமை இருந்தால் அவர்களிடம் அறம் பொருள் இல்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
உதாரணம் 2
சற்று தள்ளி நின்று பார்த்தால் இது பிறன்பொருளாளுக்கு மட்டும் பொருந்தாது. நமது இன்றைய தமிழக அரசியலுக்கும் பொருந்தும். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு இப்போதைய தமிழக அரசின் ஆட்சி (எடப்பாடி ஆகட்டும் சரி, பன்னீர்செல்வம் ஆகட்டும் சரி) மத்திய அரசின் (பாஜக - நரேந்திர மோடி-யின்) கண் அசைவிற்கு ஏற்றப்படி நடக்கிறது. இது மடமையே ஆகும்.

மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
மு.வரதராசனார் உரை
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
No comments:
Post a Comment