Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

குறள் 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
[பொருட்பால், குடியியல், பெருமை]

பொருள்
ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான.

வெறுக்கை- அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின் ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இறந்து - இறந்துபடுகை; சாவு

வாழ்தும் - வாழ்வது

எனல் -  என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
ஒருவனுக்கு பெருமை (நன்மதிப்பு, புகழ்) எனப்படுவது மற்றவர்களுக்கு நல்லது பயக்கும் கடினமான ஒரு செயலை என்னால் முடியும் என்று எடுத்துக்கொண்டு அதற்கு தேவையான மன ஊக்கத்தை வாழ்வின் ஆதாரமாய் (வெறுக்கை) கொண்டு செயலை செய்து வாழ்வது ஆகும். இப்படி பட்டவர்களை விதிசமைப்பவர்கள் என்றுக்கூட சொல்லலாம்.

ஆனால் வாழ்வில் அத்தகைய உயரிய சிந்தனைகள், கொள்கைகள் ஏதும் இன்றி பயனற்று வாழ்ந்து இறப்பது என்பது ஒரு இழிந்த வாழ்க்கையாகும்.

இதையே பாரதியும்” தேடிச் சோறுநிதந் தின்று” என்று கூறினான்
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
            - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

மேலும்: விதிசமைப்பவர்கள் (ஜெயமோகன்)
மேலும்: தேர்வு செய்யப்பட்ட சிலர் (ஜெயமோகன்)
மேலும் அஷோக்  உரை

ஒப்புமை

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.” (மூதுரையில் )

பரிமேலழகர் உரை
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கேதுவான ஊக்கமுமின்றி எளிதாய் வாழக்கடவோம் என்றெண்ணுவதே.

ஒருவன் பெயரை விளங்கச் செய்வதால் அவன் பெருமையை 'ஒளி' என்றும், அப்பெருமைக்குக் காரணமாகிய அருஞ்செயற்கு ஏதுவான ஊக்கமிகுதியை அதன் மும்மடிக் கருமியமாகிய ஒளியொடு சார்த்தியும் கூறினார். ஒளி,இளி என்பன இங்கு ஒன்றிற்கொன்று எதிராகவந்த சொற்கள் "செயற்கரிய" என்று முற்கூறியது (குறள். 26) துறவு பற்றிய தென்றும், இங்குக் கொள்வது புரவு பற்றிய தென்றும்,வேறுபாடறிக. வெறுக்கை- செல்வம். அது இங்கு மிகுதியைக் குறித்தது. வெறுத்தல் செறிதல், புரவு பற்றிய அருவினைகள் ஈகையும் ஒப்பரவும், 'வாழ்தல்' என்னும் பன்மை நெஞ்சோடு கிளத்தல்பற்றிய எண் வழுவமைதி, இக்குறளாற் பெருமைக்கு ஏது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

சீரினும் சீரல்ல செய்யாரே

குறள் 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
[பொருட்பால், குடியியல், மானம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சீர் செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

சீரினும் - புகழ், செல்வம், பெருமை தரும் செயல்களை காட்டிலும்
சீர்  அல்ல - இகழ்ச்சி தருகின்ற செயல்களை
செய்யாரே - செய்ய மாட்டார்கள்
சீரொடு -  புகழ், செல்வம், பெருமை முதலியனவும்
பேராண்மை - அரியவீரச்செயல்; மிக்கவீரம்; மானம்.
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
வேண்டுபவர் - விரும்புவர்

முழுப்பொருள்
மானத்தை விரும்பி போற்றி வேண்டுபவர் புகழ் செல்வம் பெருமை ஆகியவற்றையும் வேண்டுபவர் தான் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பார். அத்தகையவர் பெருமை தரக்கூடிய செயல்களை செய்கிறாரோ இல்லையோ இகழ்ச்சி தரக்கூடிய செருக்கு விளைவிக்கக்கூடிய செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். புகழ் தரும் செயல்களை செய்யாவிட்டாலும் இகழ்ச்சி தரும் செயல்களை செய்யாது இருப்பதே இருக்கும் கொஞ்சம் புகழையும் பெருமையையும் செல்வத்தையும் குன்றாமல் காக்கும்.

ஆதலால் இகழ்ச்சி தரக்கூடிய செயல்களை செய்தால் மானம் போய்விடும்.

பேராண்மை என்ற சொல் 
குறள் 148
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு” என்ற குறளிலும் மிக பொருத்தமாக வருகிறது. பிறன்மனையை நோக்குகின்றவர்கள் மானம் அற்றவர்கள் என்பதையும் உணரலாம்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ரொடு பேராண்மை வேண்டுபவர்- புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; சீரினும் சீர் அல்ல செய்யார்- புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார். ஏகாரம் தேற்றம்.

எந்நிலைமையிலுந் தளராத மனத்திண்மை யுடைமையால் மானம் பேராண்மை யெனப் பட்டது. சீரினுஞ் சீரல்ல செய்தல் அன்முறையாய்க் கொள்ளையடித்து அறச்சாலை நிறுவுதல் போல்வது.

மணக்குடவர் உரை
தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.

மு.வரதராசனார் உரை
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who wants respect and want to be known as an person of integrity as well as a person who has respect/fame and known for his integrity will be very careful and not do anything dishonest, that brings ill effects, that brings bad reputation. A person of integrity may not do activities that brings fame but at least he will do not dishonest and bad reputation stuffs. 

Questions that I ask to the kid
What does a person of integrity and who wants fame won't do?

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்

குறள் 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
ஒழுக்கமும் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

வாய்மையும் - வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

நாணும் - நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்
நாணால் - நாணத்தினால் - வெட்கபடவைக்கும் உணர்வால்

இம் மூன்றும் - இவை மூன்றும்

இழுக்கார் - இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்

முழுப்பொருள்
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் அவச்சொல்லுக்கு அஞ்சி வெட்கபடுகின்ற செயல்களை செய்ய மாட்டார்கள். ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய முன்றும் குறையும் எந்த ஒரு செயலையும் செய்ய வெட்கப்பட்டு செய்ய மாட்டார்கள்.

ஆக ஒரு குடும்பம் நல்ல குடும்பம் என ஆவது கல்வியினாலோ, பொருள் செல்வத்தினாலோ மட்டும் அல்ல. அவை ஒழுக்கம் (ஒழுக்கமுடைமை), வாய்மை (வாய்மை), நாணம் (நாணுடைமை) ஆகிய பண்புகளின் அடிப்படையில் ஆகும்.

ஒழுக்கம் (ஒழுக்கமுடைமை), வாய்மை (வாய்மை), நாணம் (நாணுடைமை), முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

நாலடியார்ப் 142 பாடலொன்று, பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடித்தல் என்னும் இவை மூன்றும் உயர்வு பொருந்திய குடியிற் பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டான காலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா என்று கூறுகிறது. அப்பாடல்:

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது – வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (நாலடி.142)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடிப்பிறந்தார்- நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்முன்றும் இழுக்கார்- ஒழுக்கம் மெய்ம்மை பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார்.

ஒழுக்கம் முதலிய முன்றும், முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

மணக்குடவர் உரை
ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.

மு.வரதராசனார் உரை
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்

குறள் 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இழிவு - தாழ்வு; இகழ்ச்சி, நிந்தை குறைவு குற்றம் கேடு பள்ளம் தீட்டு
அறிந்து - தெரிந்து, உணர்ந்து, நினைத்து, மதித்து

உண்(ணு)-தல் -- சாப்பிடுதல், உட்கொள்ளுதல், அனுபவித்தல்
உண்பான்கண் - சாப்பிடுகின்றவனுக்கு

இன்பம்போல் - இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

நிற்கும் - நிலைத்திணைப் பொருள், எஞ்சுதல்
கழி - கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு
கழி-தல் - இயலுதல்,  மிகுதல், அழிதல், ஒழிதல், சாதல், வருந்துதல்

பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.
பேர்தல் - சிதைதல்; பிரிதல்; போதல்; அழிதல்; பிறழ்தல்; அசைதல்; குறைதல்; பின்வாங்குதல்; நிலைமாறுதல்; முறைபிறழ்தல்.

இரை - ஒலி; பறவை, விலங்குமுதலியவற்றின்உணவு; உண்டஉணவு; நாக்குப்பூச்சி பூமி நீர் கள் வாக்கு
இரையான்கண்
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

முழுப்பொருள்

இழிவறிந்து என்றமையின், குறைவாகச் சாப்பிடுவதால், வாதம், பித்தம், சிலேட்டுமம் என்கிற மூன்று ஒரு சமச்சீர் நிலையில் இருப்பதையும், அதன் காரணமாக நோய்முதலியன அண்டாமையும் குறிக்கப்படுகிறது.

ஆதலால் குறைவாக உண்ணுவது, தேவையான அளவு உண்ணுவது கெடுதல் ஏதும் விளைவிக்காது என்று அறிந்து, உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று அறிந்து அளவாக உண்ணும் ஒருவருக்கு நோயற்ற நல்ல ஆரோக்கியம் என்னும் நற்பயன் நிலைத்து நிற்கும்.  அதுப்போல தேவைக்கு அதிகமாக, மிகுதியாக உண்ணும் ஒருவருக்கு நோய், துன்பமே வந்து சேரும்.

“உண்டிச் சுருங்குதல் பண்டிக்கழகு” என்றொரு சொலவடை இருக்கிறது; இதைத் தவறாகப் பெண்டிர்க்கழகு என்று ஔவையார் சொன்னதாகச் சொல்வதுமுண்டு. அவ்வாறு ஒருதலைப் பட்சமாக, ஒளவையைப் போன்ற பெண்கவி கூறியிருப்பார் என்பது ஐயத்துக்குரியது, உண்டி சுருங்குதல் வயிற்றுக்கு அல்லது உடலுக்கு அழகு என்பதே பொருந்துவதாம் . பண்டி என்ற சொல் உடலையும், வயிற்றையும் குறிப்பது; குறிப்பாக “தொந்தியைக்” குறிப்பது. இப்பொழுது அந்த சொலவடை இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும். (அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல்- குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்பதுபோல்; கழிபெரு இரையான்கண் நோய்நிற்கும்- மிகப் பேரளவாக வுண்பவனிடத்து நோய் நிலைத்து நிற்கும்,

இழிவென்றது இன்றியமையாத அளவிற்கு மேற்பட்டதின் நீக்கத்தையே. இன்பமாவது உணவுச்சுவை மிகுதலும், எளிதாயியங்கி வினை செய்தலும், ஊதை பித்த கோழைகள் தத்தம் அளவில் நிற்றலால் ஒருவகை நோயுமின்மையும், ஏனையின்பங்களையும் நுகர்தலும், மனமகிழ்ச்சியுமாம். 'கழிபெரு' மீமிசைச் சொல். 'இரை' யென்பது விலங்கினுந் தாழ்ந்த பறவை யூரிகளின் உணவைக் குறிக்குஞ் சொல்லாதலால், இங்கு இழிவு குறித்து நின்றது. 'கழிபேரிரையான்' என்பதை மிடாவிழுங்கி என்பது போலக் கொள்க. 'நோய்' வகுப்பொருமை. அளவூணின் நன்மையும் மிகையூணின்  தீமையும் இங்கு ஒருங்கு கூறப்பட்டன. மிகையூண் என்பது அளவு மிகுதியையன்றி வேளை மிகுதியையுங் குறிக்கும்.

ஒருபொழு துண்பானே ஓகியொரு நாளில்
இருபொழு துண்பான்நன் றாகி-வருபொழுது
முப்பொழு துண்பானேல் நோகியாம் நாற்பொழுது
கப்புவான் சாகி கடிது.

மணக்குடவர் உரை
அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.

மு.வரதராசனார் உரை
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

Thirukkural - Management - Health - Counsel for Individuals
Kural 946 contains a simile. Simile is an indirect comparison. Resorting to similes to drive home messages was second nature to Valluvar. Good and evil do not coexist. Similarly, happiness remains everlastingly in a person who eats a little, in moderation, and disease remains everlastingly in a person who eats a lot. Therefore, one thing, either happiness or disease, always remains in a person. Happiness and disease are mutually exclusive, as they cannot remain together in a person at the 
same time. If there is happiness in a person, there cannot be disease in  the body. On  the contrary, if there is disease in the body, there cannot be happiness in him. Our choice decides whichever remains inside us.

As Health to a moderate eater 
So disease sticks to a glutton.

We know that the number of people who died of overeating is more than the number of people who died of starvation. However, longevity, lifespan, has increased by ten plus years, living with disability has also increased by  ten percent. If you want happiness to remain long in you, eat in moderation. If you want disease to find secured shelter in your body, feed your stomach as you dump a garbage bin. If you want to be healthy, eat healthful food. Do not meaninglessly  feed your stomach and make that a disease-breeding machine. Just eat, but do not cheat your stomach. If you please your eyes, you will plague your health.

English Meaning - As I taught a kid - Rajesh
Consumption of food in excess results in bad effects on the body because the vata, pita, kapa balance is lost. Hence, when a person who understood this and consistently consuming food in moderation would lead a healthy and happy life. Whereas when a person consumes food in excess, then, it would lead to disease. Happiness and disease are mutually exclusive. Hence, do not meaninglessly feed your stomach (as your dump a garbage bin) and make that a disease breeding machine. 

Just take an example of a day when you overeat - you had one of the following 1) excessive gas and bloating 2) stomach upset 3) difficult in sleeping etc. Also, we know that, We know that the number of people who died of overeating is more than the number of people who died of starvation. 

Questions that I ask to the kid
What does consumption of food in moderation and in excess lead to respectively?

பழகிய செல்வமும் பண்பும்

குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல்.
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
பழகிய  செல்வமும் - கற்ற கல்வியும், சான்றோர்கள் / பெரியோர்கள் நட்பும் (உறவும்)

பண்பும் - பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

கெடுக்கும்- கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

கழகத்துக் - கழகம் - கல்விபயிலும்இடம், கல்விச்சங்கம்; படை, மல்முதலியனபயிலும்இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர்கூடியசபை.

காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை.

புகின் - அடைதல், தொடங்குதல், தாழ்நிலை யடைதல், உட்படுதல், அகப்படுதல்

முழுப்பொருள்
ஒரு மனிதனுக்கு செல்வம் எனப்படுவது தான் கற்ற கல்வியும், உறவாடிய நண்பர்களும், சான்றோர்களும், பெரியோர்களும் ஆகும். அது மட்டும் இன்றி அவனது இயல்பான குணமும் அவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றை பேணி காப்பது அவனது கடமையாகும்.

ஆனால் ஒருவன் சூதாடினால் அல்லது சூதில் பொழுதை கழித்தால் அது அவனுக்கு அழிவை கொடுக்கும், தாழ்நிலையை கொடுக்கும், அவனுடை செல்வங்களான கல்வி, நண்பர்கள், சான்றோர்கள் மற்றும் தன்னுடைய நற்குணத்தை இழப்பான். ஆதலால் சூதில் பங்கேற்க கூடாது.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலை கழகத்துப் புகின் - ஒருவன் அறம் பொருளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அது தொல்வரவாகிய பழஞ் செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும்.

களம் என்றே பொருள்படும் கழகம் என்னும் பொதுச்சொல், இங்கு இடம்பற்றிச் சூதாடு களத்தைக் குறித்தது, 'பழகிய' என்னும் அடை பண்பையுந் தழுவும், ஆதலால் பண்பென்றது இங்கு வழிமுறைப் பண்பை. முன்னோர் தேட்டு முதுசொம் எனப்படும். தான் புதிதாகச் செய்துகொள்ளும் அறம்பொருளே யன்றிமுன்னோரிடமிருந்து வழிவழி வந்த செல்வமும் நற்பண்பும் இல்லாமற்போ மென்பதாம்.

மணக்குடவர் உரை
சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.

மு.வரதராசனார் உரை
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.