குறள் 1296
பொருள்
தனியே - தன்னந்தனியே - taṉṉantaṉiyē adv. quite alone
தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி.
தனி-த்தல் - taṉi- 11 v. intr. தனி¹. 1.To be alone, single, solitary; ஒன்றியாதல்.(W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114).3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.4. To be deserted, forsaken, helpless, as by thedeparture or death of friends; உதவியற்றிருத்தல்.(W.)
இருந்து - இருந்துக்கொண்டு
நினைத்தக்கால் - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.
என்னைத் - என்னை
தினிய - தின்றுக்கொன்று இருக்கிறது
தினிசு - tiṉicu தினுசு, தினுசவாரி, s. kind, sort, வகை. தீ தீ , s. fire, நெருப்பு; 2. the elementary principle of fire; 3. hell, நரகம்.
இருந்தது- இருக்கிறது
என் - என்னுடைய
நெஞ்சு - நெஞ்சம்,மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
மு.வரதராசனார் உரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
சாலமன் பாப்பையா உரை
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]பொருள்
தனியே - தன்னந்தனியே - taṉṉantaṉiyē adv. quite alone
தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி.
தனி-த்தல் - taṉi- 11 v. intr. தனி¹. 1.To be alone, single, solitary; ஒன்றியாதல்.(W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114).3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.4. To be deserted, forsaken, helpless, as by thedeparture or death of friends; உதவியற்றிருத்தல்.(W.)
இருந்து - இருந்துக்கொண்டு
நினைத்தக்கால் - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.
என்னைத் - என்னை
தினிய - தின்றுக்கொன்று இருக்கிறது
தினிசு - tiṉicu தினுசு, தினுசவாரி, s. kind, sort, வகை. தீ தீ , s. fire, நெருப்பு; 2. the elementary principle of fire; 3. hell, நரகம்.
இருந்தது- இருக்கிறது
என் - என்னுடைய
நெஞ்சு - நெஞ்சம்,மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
முழுப்பொருள்
நான் எனது தலையாய காதலுக்கு பாத்திரமானவர் (பாத்திரமானவள்) உடன் இல்லாத பொழுது (பிரிவால ஏற்பட்ட தனிமை) தனியே வாடுகிறேன். அப்பொழுது அவருடன் (அவளுடன்) சேர்ந்து இருந்த பொழுதுகளை நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் என்னை தின்றுவிடுகிறது. அவரது நினைவுகள் என்னை கொல்கிறது. நினைவு என்னும் கோல் புண்களில் பட்டு ரணமாய் வலிக்கிறது.
மேலும் அஷோக் உரை
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
தனியே இருந்து நினைத்தக்கால்-காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் ; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது-என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ் செய்தற்கே என்உள்ளம் என்னொடுகூட இருந்தது.
என் நெஞ்சு என்னோடிருந்தது.அவர் செய்த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செய்தற்கேயன்றி , இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.

மணக்குடவர் உரை
என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.
மு.வரதராசனார் உரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
சாலமன் பாப்பையா உரை
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.