நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
குறள் 998 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை [பொருட்பால், குடியியல், பண்புடைமை] பொருள் நண்பு - அன்பு; உறவு; நட்பு. ஆற்றார் - செய்யாது இருப்பவர்; இல்லாதவர் ஆகி - ஆகுதல் - ஆதல். நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை. இல - இல் - இல்லை, வறுமை செய்வார்க்கும் - செயலை செய்பவர் / நடத்துபவர் பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை. ஆற்றாராதல் - இல்லாமல் இருத்தல் கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி. முழுப்பொருள் பிறர் நம்மிடம் அன்பல்லாதவராக இருப்பினும் நட்பும் உறவும் பாராட்டாதவராக இருப்பினும் நன்மைகளும் செய்யாது தீயவை செய்தவராக இருப்பினு...