Posts

Showing posts with the label Index 105 நல்குரவு

105 நல்குரவு

பால்  - பொருட்பால் இயல்  - குடியியல் அதிகாரம்  - நல்குரவு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது குறள் 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் குறள் 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் குறள் 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் குறள் 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் குறள் 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் குறள் 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு குறள் 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது குறள் 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று பதிவு வரிசை