Posts

Showing posts with the label Index 097 மானம்

097 மானம்

பால்  - பொருட்பால் இயல்  - குடியியல் அதிகாரம்  - மானம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் குறள் 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் குறள் 963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு குறள் 964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை குறள் 965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் குறள் 966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை குறள் 967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று குறள் 968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து குறள் 969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் குறள் 970 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு பதிவு வரிசை