060 ஊக்கமுடைமை
பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - ஊக்கமுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று குறள் 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் குறள் 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் குறள் 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை குறள் 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு குறள் 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து குறள் 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு குறள் 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு குறள் 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் குறள் 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு பதிவு வரிசை