Friday, January 18, 2019

048 வலியறிதல்

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - வலியறிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)



வினைவலியும் தன்வலியும் மாற்றான்

குறள் 471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வலி  - vali   s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி.

வலியும் - வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப்பெறும் திரிபு

வலியும் - வலி 

மாற்றான் - பகைவன்; ஒட்டுப்பலகை; மாற்றுமருந்து.

வலியும் - வலி 

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

வலியும் - வலி 

தூக்கிச் - தூக்கிவிடுதல் - மேலுயர்த்தல்; தூண்டிவிடுதல்; உதவிபுரிந்துகாத்தல்; காண்க:தூக்கிலிடுதல்

தூக்கு - தொங்கவிடும்பொருள்; உறி; உயர்ச்சி; நிலைகோல்; துலாராசி; ஐம்பதுபலமுள்ளநிறை; பாட்டு; கூத்து; இசை; பாக்களைத்துணித்துநிறுக்கும்செய்யுளுறுப்பு; ஆராய்ச்சி; காண்க:தூக்கணங்குருவி; வாரடை; கனம்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வதற்கு முன்னர் நான்கு முக்கியமானவற்றை செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்

1. வினை வலி - செயலின் வலிமையை நாம் அறிய வேண்டும். செயல் விழையும் உழைப்பை பற்றியும் அதன் சாத்தியங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியும் அதன் ஆபத்துகள் பற்றியும் அச்செயல் விழையும் திறன்களை பற்றியும் அச்செயல் விழையும் முயற்சியை பற்றியும் நன்கு ஆராய வேண்டும். செயலை செய்யக்கூடிய இடம் நேரம் சூழல் போன்றவற்றை ஆராய வேண்டும். செயலின் நடுவே ஏற்படக்கூடிய தவறுகளையும் இடர்களையும் ஆராயா வேண்டும்.  இதுபோல் செயலை எல்லா கண்ணோட்டங்களிலும் ஆராய வேண்டும்.

2. தன் வலி - ஒரு செயலை செய்யும் பொழுது நம்முடைய ஆற்றலை நன்கு ஆராய வேண்டும். அச்செயல் விழையும் எல்லா திறனையும் நாம் கொண்டு இருக்கிறோமா என்று அறியவேண்டும். அச்செயல் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு, மனத்திட்பம், நேரம் என்று அனைத்தையும் ஆராய வேண்டும். அச்செயல் கெடுக்கும் உடல் வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

3. மாற்றான் வழியும் - ஒரு செயலை செய்யும் பொழுது அதற்கு எதிரிகள் இருக்கக்கூடும். அல்லது சூழ்நிலைகளும் இடர்களும் நமக்கு எதிரியாக வாய்ப்பு உண்டு. ஆதலால் அதனை பற்றியும் ஆராய வேண்டும். போர் அல்லது வணிகம் என்று வைத்துக்கொண்டால் எதிரியின் ஆற்றலை பற்றியும் ஆராய வேண்டும். எதிரியிடம் பணிபுரியும் மக்களின் திறன்களையும் ஆராயவேண்டும். வலிமையான எதிரியை எதிரியும் மதிப்பர்.

4. துணை வலி - நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை நம்முடைய முயற்சியால் மட்டும் செய்து விட முடியாது. அச்செயலை  செய்வதற்கு ஒரு ஆயுதமோ அல்லது மற்ற மக்களின் உதவி என்று பலதரப்பட்ட துணை அவசியம் ஆகிறது. ஆதலால் நாம் செயலில் பயன்படுத்தும் கருவி அல்லது ஆயுதத்தின் வல்லமையை முழுமையாக ஆராயவேண்டும். அந்த ஆயுதம் பழுது பார்க்க படவேண்டும் என்றாலோ அல்லது வேறு பொருத்தமான ஆயுதம் வேண்டும் என்றாலோ அதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும். மற்றவர்கள் செயலுக்கு தேவை என்றால் அவர்களின் திறனையும், மனதிட்பத்தையும், உழைப்பையும் நன்கு ஆராய வேண்டும்.

இவ்வாறு ஒரு செயலை பற்றியும் அது சம்மந்தமாக அனைத்தையும் பற்றி சீர்தூக்கி ஆராய்ந்து ஒரு செயலை செய்ய வேண்டும். தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறையும்.  அப்படி செய்தால் அதில் வெற்றியும் ஆக்கமும் உண்டாகும். 

வாணிப நிர்வாக மேலாண்மை பாடங்களில் வியூகம்/திட்டமிடல் பற்றிய பாடங்களில் ஆகியவற்றில் முதலாவதாக சொல்லித்தரப்படும் பாடங்களில் ஒன்று SWOT Analysis (Strength, Weakness, Opportunities, Threats) Analysis/ஆய்வு. SWOT Analysis இத்திருக்குறளுடன் ஒத்து இருப்பதை காணலாம்.

மேலும்: அஷோக் உரை

பழமொழிப் பாடல் (321)
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.

அறிவிற் சிறந்தோர், தம்மால் முடியக்கூடிய செயலா என்று முதலில் ஆராய்ந்து, பின் தனக்குத் துணையானவர்களையும் ஆராய்ந்து, செய்யக்கூடிய செயலில் உள்ள பயனையும் ஆராய்ந்து, மேற்கொள்வர்.அங்கனமின்றி, முறையறியாமல், ஏதேனும் செய்தால், தாம் நினைந்ததற்கு மாறான துன்பமே விளையும் என்கிறது மேற்கண்ட பாடல்.

பரிமேலழகர் உரை
வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க. 
(இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை
செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.


Thirukkural - Management - Decision Making
Besides time and place, the strength of the decision maker plays a critical role in deciding the outcome of one's decision. Kural 471 provides that a decision maker must acquire knowledge of four components before executing a task. The components are: 1) The challenges of the task, 2) The strengths of the decision maker,  3) The strengths of his competitor,  and 4) The strengths and resources of his supporters. Assess thoroughly all these four components before you venture into any task.

Weigh the strength of these before you act-
The deed's, your own, your enemy's and ally's 

English Meaning - As I taught a kid - Rajesh
Before one ventures into a work, one should assess these four components thoroughly and decide 1) The task at hand - the challenges of the task, value of the task, skills required, time, place of operation,  benefits of the task etc 2) Strengths of the self/decision maker - what are the strengths and skills of the self, is there any gap between the requirement?, what is the scope of learning it before starting the task 3)  The strengths of his competitor and 4) The strengths and resources of his supporters. Only after assessing and decide, one execute the task

Questions that I ask to the kid
What are the four components one should assess before decide upon a task?

Thursday, January 17, 2019

047 தெரிந்துசெயல்வகை

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - தெரிந்துசெயல்வகை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

குறள் 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

குறள் 468

குறள் 469

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு

குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

ஆற்றலுள்ளும் - ஆற்றல் இருப்பினும்

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

உண்டு உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

அவரவர் - ஒவ்வொருவரின்

பண்பு  - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

ஆற்றாக்கடை - செய்யாவிட்டால்

முழுப்பொருள்
ஆற்றல் என்பது ஒருவர் பெரும் கல்வி, அறிவு, அனுபவம் , முயற்சி, கடின உழைப்பு போன்ற பலவற்றில் இருந்து வருவது ஆகும். ஒருவருக்கு (அல்லது ஒரு நிறுவனத்திற்கு) அத்தகைய ஆற்றல் சிறப்பானதாக இருக்கக்கூடும். இருப்பினும் தவறு இழைப்பது மனித இயல்பாகும். இயற்கை, நேரம், சூழல் என்ற பலவற்றாலும் செயலின் விளைவை மாற்றக்கூடும். அது மட்டும் இன்றி ஒருவருக்கு ஆற்றல் இருந்தாலும் அது எல்லா செயலுக்கும் பொருந்தாது. உதாரணமாக சொன்னால் ஒரு நல்ல மருத்துவர் வீட்டில் எரியும் மின்சார சாதனத்தை சரியாக பழுதுபார்த்துவிடுவார் என்று சொல்ல முடியாது. அவர் மின்சார சாதனத்தில் தவறான ஒரு wire-ஐ தொட்டால் shock அடித்து உயிர் இழக்க கூடும். ஆதலால் தனது ஆற்றலை அறிந்து, தேவையில் வளர்த்துக்க்கொண்டு ஒரு செயலில் இறங்க வேண்டும்.

ஆதலால் ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது அவரின் ஆற்றலையும், செய்யும் செயலின் பண்பையும், செயல் கேட்கும் உழைப்பையும் பற்றி நன்கு ஆராய்ந்துத் தெளிவுப் பெற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒருவரால் நல்ல விளைவுகளை கொடுக்க முடியும். செயலை செம்மையாக செய்யலாம். ஒருவருக்கு நல்ல எண்ணங்களும் திறமையும் இருந்தாலும் அப்படி செய்யவேண்டியவற்றை செய்யாவிட்டால் அந்த செயல் தவறாக முடிவதற்கே வாய்ப்புகள் அதிகம். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இக்குறள் தனி நபருக்கும் பொருந்தும், நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒருவர் ஒரு செயலை செய்யும் போது தன்னுடைய ஆற்றலிலும் தன்னுடைய முந்தய சாதனைகளிலும் திளைக்காமல் முதல் முதலாக செய்வது போன்று ஒரு செயலை கவனமாய் செய்யவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.
(நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.).

மணக்குடவர் உரை
நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.
இதுவுமோரெண்ணம்.

மு.வரதராசனார் உரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

Wednesday, January 16, 2019

046 சிற்றினஞ்சேராமை

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - சிற்றினஞ்சேராமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)
குறள் 452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு

குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்

குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை

குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்




மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனத்து - மனதில் - மனது - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

உளது - இருப்பது, உண்மை.

போலக் - pōl   போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ.

காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

‘இனத்து’ - உறவாடும் மக்கள்

உளது - இருப்பது, உண்மை.

ஆகும் - ஆதல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
அறிவென்பது நமது மனதில் எண்ணங்களில் உள்ளது போல நமக்கு தோன்றும். ஆனால் உண்மையில் நமது அறிவென்பது நாம் பழகும் மக்களின் இயல்பு போலவே இருக்கும். 

இக்குறள் முதலில் ஏழை எளியவரிடம் படிப்பறிவு இல்லாதவரிடம் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்று தோன்றினால் அது மடமை. எல்லோருடனும் பழகலாம். ஆனால் அறிவாற்றலுக்கு, ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்கு அதனை போன்றே ஆற்றலும், ஆக்கமும், எண்ணமும் உள்ளோருடன் பழக வேண்டும். அவ்வாறு இல்லாத சோம்பித்திற்கின்ற, குறுக்குவழியில் செல்கின்ற, உயர்வான எண்ணங்கள் அல்லாத, எதிர்மரை எண்ணங்கள் கொண்ட மக்களிடம் தினம் தினம் உறவாடினால் அவர்களுடைய எண்ணங்களே நமக்கு வரும்.

உதாரணமாக மஹாத்மா காந்தி-ஜி அவர்கள் எல்லோருடனும் எவ்வித பாகுபாடின்றி பழகினார்கள். ஆனால் அவர் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அவரை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அதனை போன்றே எண்ணங்களும், அறிவும் கொண்டவர்களாக இருந்தது.

ஒரு நாலடியார் பாடல் ஒன்று:

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந் தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும், என்பதே இப்பாடலின் கருத்து.
இக்கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியது. அரிது என்று சொல்லி, இது இப்படித்தான் என்று உறுதியாகக் கூறாது, மாற்றுக்கருத்துக்கும் சிறிது விழுக்காட்டினை உள்ளுரையாக விட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. வள்ளுவர் காலத்தைச் சேர்ந்தவர்களும், பின்புவந்த புலவோர்களும், வேற்றுக் கருத்துக்களைக் கொண்டு, அவற்றைக் கூறவும் செய்தார்கள் என்பதைக் காட்டுவது. பின்னால் வந்தவர்கள் போல் குருட்டாம்போக்கிலே வள்ளுவர் வாக்கை கேள்வி கேட்காமல், ஒத்துக்கொள்ளவில்லை.

வள்ளுவர் குறளினை இவ்வாறு பொருள் செய்யலாம்.  சார்ந்திருக்கும் இனமே ஒருவரின் அறிவை உருவாக்குகிறது. அவரவர் மனம் அல்ல. அதனால் நல்லினம் சேரவேண்டும் என்று சொல்வதாகக் கொண்டால், பொருந்தி வருகிறது.

பரிமேலழகர் உரை
அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

Thirukkural - Management - Personality Development - Environment
The thought in Kural 454 is contrary to the thought, presented in Kural 373, that one's heredity or genetic factors have influences on one's personality. Even if a person displays, exhibits, or demonstrates that his mind is filled with rich knowledge, but that knowledge will be influenced much by the company to which that person belongs.

Wisdom which Seems to Come from the
Comes really from one's company.

A man is a reflection of his circumstances. Circumstances  shape a person's thinking, speaking, learning, and life style in general. Motivational speaker Jim Rohn meaningfully said, “We are the average of the five people we spend the most time with.” Is that observation true? Reflect on that. The quality of people you spend most of your time with influences whatever you read.

Tuesday, January 15, 2019

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

குறள் 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
அரிது - aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.  

அரியவற்றுள் - அருமையானவற்றினுள்
எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

அரிதே - அரிதானது; அருமையானது

பெரியாரைப் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேணித் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

தமராக் - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி

கொளல் - கொள்ள வேண்டும் ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
அரிதான செல்வங்கள் பல உண்டு ஆனால் நமக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கும் நல்வழியை காண்பிக்கும் உயர் எண்ணங்களை விதைக்கும் நல் சிந்தனைகளை கூறும் குரு இடத்தில் இருக்கும் பெரியோர்களும் சான்றோர்களும் மிக அரிதே. கல்வி, கேள்வி, அறிவு போன்ற செல்வங்களுக்கு எல்லாம் ஊற்றாய் அவர்களே இருப்பார்கள். பெரும்பாலும் அவர்களுடன் இருந்தாலே அவர்களின் மேன்மையை கண்டு நாம் அவர்களிடம் கற்றுக்கொள்வோம். அவர்களிடம் உரையாடுவது நமக்கு தெளிவைக்கொடுக்கும். ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். (எனக்கு பொதுவாக எனது பாட்டியுடனும், எனது நண்பர்களின் பெற்றோர்களிடமும் பாட்டி தாத்தாகளுடனும் உரையாடுவதில் அவர்களின் விவேகம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அன்று எனக்கு புரியவில்லை என்றாலும் பின்னாளில் அதை எண்ணிப் பார்க்கும் பொழுது எனக்கு அதில் இருக்கும் விவேகம் புரியும்).  பெரியோர்களின் வாழ்வே நமக்கு பாடம்.

முற்றிலும் புதிதாய் சாலை (வழித் தடம், Road)போடுவதை விட அந்த சாலையில் சென்றவரிடம் கேட்டு அவர்கள் சந்தித்த இடர்களை  கற்று அந்த சாலையில் செல்வதோ அல்லது அந்த பாடங்களை ஏற்று ஒரு புதிய சாலை போடுவது சிறந்ததாகும். முற்றிலும் புதிய சாலை போடுவது தவறில்லை. ஆனால் மற்றவரின் பாடம் நமக்கு உதவியாக இருக்கும் என்பது இங்கே கூற விரும்புவது.

ஆதலால் அத்தகைய பெரியோர்களை உபசரித்து போற்றி பாதுகாத்து அவர்களிடம் வாழ்க்கையை அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்களை நம்முடைய உறவினர்கள் என்று எண்ணி நம்மை அவர்களின் வட்டத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

‘‘பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான்-இலங்கைக்கே
போந்து இறைஆயதூஉம் பெற்றான்;பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்” (பழமொழி 92)

மேற்கண்ட பழமொழிப்பாடல் கூறுங்கருத்து இதுதான். இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன்இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான். பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகிவிட்டான். ஆகையால்பெரியாரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை

“தீர்வில் அன்பு செலுத்தலிற் செவ்வியோர்
ஆர்வ மன்னவற்காயுதம் ஆவதே” (கம்ப.மந்தரை 20)

பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.).

மணக்குடவர் உரை
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.

மு.வரதராசனார் உரை
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...