Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நல் - நல்ல; வறுமை; நன்மையான; மிக்க; கடுமையான.
நல் - nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).

இனத்தின் - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

ஊங்கும் - ஊங்கு-தல் - ūṅku-   5 v. intr. [T. ūgu.]To swing; ஆடுதல் பூங்க ணாய மூக்க வூங்காள்(நற். 90).  

ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம்.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

இனத்தின்- இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

அல்லற்படுப்பதூஉம் - அல்லல் - துன்பம்

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
ஒருவனுக்கு நல்ல இனத்தைப் போன்று நல்ல நட்பு சுற்றத்தைப் போன்று மிக சிறந்த துணை வேறு இல்லை. ஏனெனில் நல்ல நட்பு சுற்றம் நம்மை தீவழிகளில் இருந்து அகற்றி நல்வழிப்படுத்தும். நமக்கு துன்பத்தில் தோள்க்கொடுக்கும். உரிமையுடன் நம்மை ஒரு அதட்டு அதட்டி சரி செய்யும். நாமும் சான்றோரின் (நல்ல சுற்றத்தின்) அவப்பெயரை பெறாமல் இருக்க நல்வழியில் செல்வோம். இல்லையில் அவர்களின் உறவை விரைவில் இழப்போம். அந்த உந்துதலாலும் நாம் நல்வழியில் செல்வோம். சோர்வுற்று இருந்தாலும் விரைவில் வெளியே வந்துவிடுவோம். நாம் நல்வழியில் சென்றுகொண்டு இருக்கும் பொழுது அதில் நமது ஆற்றலை வளத்துக்கொள்ள நமது சுற்றம் உதவும் பங்காற்றும். நம்மை மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்ல நமது சுற்றமும் உற்சாகமூட்டும்.

ஆனால் தீய சுற்றம் போன்று வேறு ஒரு துன்பம் ஒருவனுக்கு இல்லை. ஏனெனில் அவா, ஆசை என்னும் துன்பம் எப்படி இன்பம் போன்று தலைத்தூக்குமோ அதுப்போல தீய சுற்றமும் இன்பம் போல் பழகுவதற்கு இருக்கும். ஆனால் இவையெல்லாம் துன்பத்துள் எல்லாம் துன்பமாகும். நாம் முன்னேறி நல்வழியில் சென்றாலும் நம் மனதில் சலனத்தை உண்டாக்கி நமது செயலை நமது தவத்தை கலைக்கும். நமது பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்து நம்மை மழுங்கடித்து நம்மை சோம்பலில் ஆழ்த்தும். இவை எதனையும் உணரும் முன்னர் காலம் வெகு நேரம் சென்று இருக்கும். துன்பம் அப்பட்டமாய் தெரியும் பொழுது மிக மிக வலிக்கும்.

அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் படித்த, “அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு” என்ற குறளைப் போன்றதே இக்குறள். அறத்திற்கு பதில் நல்லினம், தீயினம் இவை பயன்பட்டிருக்கின்றன.

ஒருவருக்கு நல்லோர், பெரியோர் இனத்தைச் சார்ந்திருப்பது போல துணையாயிருப்பது வேறு எதுவுமில்லை. அதேபோல, தீயோரைத் தம்மினமாகக் கொண்டு ஒழுகுதலைப்போல துன்பத்தைத் தருவதும் வேறு எதுவுமில்லை. இக்கருத்தினை ஒட்டிய நாலடியார் பாடல் இது:

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய். (நாலடி.247)

நாம் மனத்தில் நினைத்தைக் குறிப்பால் உணரும் அறிவாற்றல் உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பமும், நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும், உணராத அறிவற்றோரை நண்பராகக் கொள்வோமானால், துன்பமும் உண்டாகும்; அத்துன்பமும் அத்தகையோரை விட்டுப் பிரிந்தால் தானே நீங்கும்.

”தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட தன்மையை மாற்றுவர்” (கம்ப.வரைக்காட்சி.8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

Thirukkural - Management - Personality Development - Environment
A good, supportive, and influential company provides all the support a person needs to succeed in his life, substantiates Kural 460. No other support is greater than the support provided by a community of positive people. On the contrary, a bad company brings all the misery to a person. No other misery is worse than the misery caused by a mean or bad company.

There is no greater aid than good company
Now worse affliction than bad

Friends are fortune. Remember the old saying, “A friend in need is a friend indeed.” Right companionship brings you all the wealth and benefits. We always need the supports of others to achieve greater things. There is no such person as a self-made man. 

English Meaning - As I taught a kid - Rajesh
There is no greater support or good than a healthy, safe, good, supportive, positively influential environment/friends/mentors in order to progress and succeed in life. Also, there is no other bad /misery than a unsafe, unhealthy, bad environment/friends/acquaintances which can harm us, spoil us, slowly ruin us that brings us miseries, difficulties, pain etc., 

Good relations guide us, advise us and even scold us when we do bad things. However bad acquaintances/companionship slowly ruin us and enjoy our downfall.

Right companionship brings you all the wealth and benefits.

Questions that I ask to the kid
What is a great support? What is a bad support?

No comments:

Post a Comment