குறள் 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
பொருள்
உள - உள்ள - uḷḷa adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது
வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.
தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல்.
தூக்காத - உயர்த்தாத, நிறுத்தாத, ஆராயாத, மனத்திற்கொள்ளாத, உதவி செய்யாத
ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.
ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
வள - வள் - வளம்; பெருமை; நெருக்கம்; கூர்மை; வாள்; வார்; வாளுறை; கடிவாளம்; காது; படுக்கை; வலிமை; வலிப்பற்றிரும்பு.
வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.
வல்லைக் - வலிமை; பெருங்காடு; மேடு; கோட்டை; வயிற்றுக்கட்டிவகை; வருத்தம்; மரவகை; புனமுருங்கை; வட்டம்; விரைவு.
கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
முழுப்பொருள்
ஒருவன் தன்னிடம் இருக்கும் செல்வத்தின் அளவை ஆராயாமல் மனதிற்கொள்ளாமல் பிறருக்கு (அளவின்றி) உதவிப் புரிந்தால் அவனுடைய செல்வத்தின் வளம் மிக அதிகமாக இருப்பினும் அதன் எல்லைவரை வளத்தை வலிமையை குறைத்து அழித்துவிடும். தமக்கு விஞ்சிதான் தானமும் தருமமும் என்பதை மனதில் கொண்டு பிறருக்கு உதவுக.
வள்ளுவரே இக்குறளை மறுத்ததாகக் கூறும் குறள்களுமுண்டு. “ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்லிற்றுக்கோட் டக்க துடைத்து” என்றும், “சாதலின் இன்னாத தில்லை யினிததூஉம்ஈத லியையாக் கடை” என்றூம் ஒப்புரவு ஒழுகுதல், மற்றும் ஈகை அதிகாரங்களில் வள்ளுவர் கூறியுள்ளார். முரண்பட்ட கருத்துக்களைப் போல் தோன்றினாலும், மேற்கண்ட குறள்கள் தனிமனிதர்களுக்கு விதிக்கப்பட்டவை என்றும், இவ்வதிகாரத்தின் குறள் ஆளுவோருக்கும் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.
('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல்வத்தினளவு விரைவிற் கெடும். மேல் முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறினார்.
மு.வரதராசனார் உரை
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
சாலமன் பாப்பையா உரை
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.
No comments:
Post a Comment