குறள் 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
பொருள்
அரிது - aritu n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.
அரிது - aritu n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.
அரியவற்றுள் - அருமையானவற்றினுள்
எல்லாம் - ellām n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.
அரிதே - அரிதானது; அருமையானது
பெரியாரைப் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.
பேணித் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.
தமராக் - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி
கொளல் - கொள்ள வேண்டும் ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.
முழுப்பொருள்
அரிதான செல்வங்கள் பல உண்டு ஆனால் நமக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கும் நல்வழியை காண்பிக்கும் உயர் எண்ணங்களை விதைக்கும் நல் சிந்தனைகளை கூறும் குரு இடத்தில் இருக்கும் பெரியோர்களும் சான்றோர்களும் மிக அரிதே. கல்வி, கேள்வி, அறிவு போன்ற செல்வங்களுக்கு எல்லாம் ஊற்றாய் அவர்களே இருப்பார்கள். பெரும்பாலும் அவர்களுடன் இருந்தாலே அவர்களின் மேன்மையை கண்டு நாம் அவர்களிடம் கற்றுக்கொள்வோம். அவர்களிடம் உரையாடுவது நமக்கு தெளிவைக்கொடுக்கும். ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். (எனக்கு பொதுவாக எனது பாட்டியுடனும், எனது நண்பர்களின் பெற்றோர்களிடமும் பாட்டி தாத்தாகளுடனும் உரையாடுவதில் அவர்களின் விவேகம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அன்று எனக்கு புரியவில்லை என்றாலும் பின்னாளில் அதை எண்ணிப் பார்க்கும் பொழுது எனக்கு அதில் இருக்கும் விவேகம் புரியும்). பெரியோர்களின் வாழ்வே நமக்கு பாடம்.
முற்றிலும் புதிதாய் சாலை (வழித் தடம், Road)போடுவதை விட அந்த சாலையில் சென்றவரிடம் கேட்டு அவர்கள் சந்தித்த இடர்களை கற்று அந்த சாலையில் செல்வதோ அல்லது அந்த பாடங்களை ஏற்று ஒரு புதிய சாலை போடுவது சிறந்ததாகும். முற்றிலும் புதிய சாலை போடுவது தவறில்லை. ஆனால் மற்றவரின் பாடம் நமக்கு உதவியாக இருக்கும் என்பது இங்கே கூற விரும்புவது.
ஆதலால் அத்தகைய பெரியோர்களை உபசரித்து போற்றி பாதுகாத்து அவர்களிடம் வாழ்க்கையை அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்களை நம்முடைய உறவினர்கள் என்று எண்ணி நம்மை அவர்களின் வட்டத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும்: அஷோக் உரை
‘‘பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான்-இலங்கைக்கே
போந்து இறைஆயதூஉம் பெற்றான்;பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்” (பழமொழி 92)
மேற்கண்ட பழமொழிப்பாடல் கூறுங்கருத்து இதுதான். இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன்இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான். பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகிவிட்டான். ஆகையால்பெரியாரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை

“தீர்வில் அன்பு செலுத்தலிற் செவ்வியோர்
ஆர்வ மன்னவற்காயுதம் ஆவதே” (கம்ப.மந்தரை 20)
பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.).
மணக்குடவர் உரை
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
மு.வரதராசனார் உரை
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
No comments:
Post a Comment