Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

குறள் 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

வாழ்தல் -  இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழாதான் - வாழாதவன் 

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

உள - உள்ள - uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது  

போல - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

இல்லாகி - இல்லாமல்

தோன்றுதல் -  கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

தோன்றாக் - தோன்றாமல் 

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
வரவுக்கு ஏற்ற அளவு தான் செலவு இருக்க வேண்டும். கையில் செல்வத்தின் இருப்பு என்னவோ அதற்கு ஏற்ற அளவு தான் செலவு செய்ய வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு (உணவு, கல்வி, மருத்துவம்)  தான் முதன்மை தரப்படவேண்டும். நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் பயனுள்ளவற்றில் மட்டும் செலவு செய்யவேண்டும். ஆடம்பர அனாவசியமான செலவுகளில் செலவு செய்யக்கூடாது. 

அப்படி அளவு அறிந்து செலவுகளை செய்யாதவன், வாழ்வை வாழாதவன் வாழ்க்கையில் மனதில் செல்வம் இருப்பது போன்ற பொய் தோற்றம் இருந்துக்கொண்டே இருக்கும். செலவு செய்யும் பொழுது எல்லாம் நாம் வாழ்வை முழுமையாக வாழ்கிறோம் சந்தோஷமாக வாழ்கிறோம் என்று தோன்றும். இருப்பதையெல்லாம் செலவு செய்து முடித்தப்பின்பு தான் தோன்றும் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று. எல்லா செல்வமும் வீணாக அழிந்த பின்பு துன்பமே எஞ்சும். 

ஆதலால் திட்டமிட்டு அளவு அறிந்து நிகழ்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ்வை வாழ்க. அதுவே வலிமை தரும். திட்டுமிட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழவில்லை என்றால் எல்லாம் இருப்பதுப்போன்று பொய்யாக தோன்றி அழிந்து வலிமையற்றுக்கிடப்போம். 

மஹாத்மா காந்தி அவர்கள் சொன்னதாக (காந்தியோடு பேசுவேன் சிறுகதையில்) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி எழுதியிருப்பார் - தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்துகொள்கிறான் என்பதில்தான் அவனது வாழ்கை துவங்குகிறது. காந்தி தனது தேவைகளை குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார். தேவைகளை உருவாக்கிக்கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
(அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

English Meaning - As I taught a kid - Rajesh
If one' does not live optimally or spend within the budget, then all his assets will get ruined because money will give an hallucination/illusion that there is lot of money in hand but it will evaporate through expenses in no time. Once all assets are lost, one will go through suffering. Not only it applies to money but it also applies to time (utilize it wisely, do not procrastinate, do things on time, don't things for granted), health (eat well, exercise regularly, maintain your health) etc.

Hence, one should be conscious of his strengths, assets, wealth etc. Based on that, one should live his life, utilize his skills, spend his wealth, maintain his health etc. One should not spend more than what he is earning and what he is having while also considering upcoming expenses. 

Questions that I ask to the kid
What happens when one doesn't live a life without estimation and acting according to the limits? 
When illusion or hallucination happens and what it leads to ?

No comments:

Post a Comment