Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

செய்தக்க அல்ல செயக்கெடும்

குறள் 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செய்தக்க - செய்யவற்றிற்கு
அல்ல - அல்லாதவற்றை
செயக் - செய்தால்
கெடும் - கெடும்; கேடு விளைவிக்கும்
செய்தக்க - செய்யவற்றிற்கு / செய்ய வேண்டியவற்றை
செய்யாமையானும் - செய்யா திருத்தாலும்
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்

முழுப்பொருள்
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பல செயல்களை செய்கிறோம். ஒரு செயல் என்பது பல்வேறு விதமான வளங்களை எடுத்துக்கொள்ளும். உதாரணமாக பொருள், விலைமதிப்பிடமுடியாத நேரம், நிகரில்லா மானுட ஆற்றல் (உடல் அளவிலும், மூளை அளவிலும்), இயற்கை வளங்கள் என்று பல வளங்களை எடுத்துக்கொள்ளும். அப்படி எடுத்துக்கொண்டு அது அளிக்கும் பயன் என்பதும் உண்டு. அப்பயனால் ஒருவருக்கு செல்வமும் நன்மதிப்பும் கூடும் அல்லது குறையும். இதில் ஒரு செயல் நன்றாக போகவில்லை என்றால் அது தீப்பயனை உண்டாக்கும். நாம் மறுபடியும் பொருள் கொண்டு அச்செயலை செய்யலாம். ஆனால் நாம் முன்பு செலவிட்ட நேரம் மறுபடியும் கிடைக்காது.

ஆகவே ஒரு செயலை செய்யும் முன்பு அதை பற்றி நன்கு ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனைப் பற்றி பரிப்பூரணமாக தெரிந்து இருக்க வேண்டும். ஏனெனில் நாம் செய்யப்போகும் ஒரு செயல் இந்த சமூதாயத்திற்கோ நமக்கோ எவ்வித பலனும் அளிக்காது அல்லது தீங்கு விளைவிக்கும் (உதாரணமாக பிறர் மனதிற்கோ அல்லது உடலிற்கோ துன்பம் விளைவிக்கும், இயற்கைக்கு கேடு விளைவிக்கும், இயற்கை வளங்களை சூறையாடும்) என்றால் அது செய்யதகாத செயலாகும். ஆகவே செய்யதகாத செயல்களை செய்வது நமக்கு கேடு விளைவிக்கும். ஆதலால செய்யக்கூடாது.

”குறள் 431


என்பதை செய்யக்கூடாதவைக்கு நினைவில் கொள்க

அதுப்போல பல பயன் விளைவிக்கும் நற்செயல்களை கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். உதாரணமாக நேரம் கடைப்பிடிப்பது, ஒரு செயலுக்கு தேவையான தற்காப்பை எடுத்துக்கொள்வது ( ஒரு அணுமின்நிலையத்தில் தேவையான பாதுக்காப்பை எடுக்கவில்லையென்றால் அது திருத்தமுடியாத பேரழிவை வகுக்கும்), அறிவை வளர்த்துக்கொள்வது. வேலையில் சோம்பேறியாய் இருப்பது, அலுவலகத்தில் கொடுத்த வேலையை செய்யாது இருப்பது, படித்து முடித்து மாணவர்கள் வேலை தேடாமால் வீட்டில் வீணாக பொழுதை போக்குவது என்று தன்னை மேன்மைபடுத்தக்கூடிய மாட்சி சேர்க்க கூடிய எந்த ஒரு செயலையும் செய்யாது இருத்தல் கேடு விளைவிக்கும்.

இதனால் உன் கடமையை (தன்னறம் என்ற செயலை) தள்ளிப்போடாதே என்று முன்மே காலதாமதம் செய்யாதே என்றார் திருவள்ளுவர். கடமையை காலத்தால் செய்தால் அது உன்னை காக்கும்.  

ஆகவே செய்ய கூடாதவற்றை செய்தாலோ செய்ய கூடிய வற்றை செய்யாதிருந்தாலோ அது நமக்கு கேட்டையே விளைவிக்கும்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்.
(செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.).


மணக்குடவர் உரை
செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.
இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

Thirukkural - Management - Decision Making
Doing a task, venture or an event that should not be done will spoil the purpose of the task. Executing an unwanted task will not bring the expected result. Also not doing a task, venture, or an event that should be done will be a missed opportunity,  suggests Kural 466.

It is ruinous to do what should not be done 
And ruinous to leave undone what should be done

The objective of any decision making is to decide between things that should be done and should not 
be done. This advice from Valluvar is not only for carrying out a task, but also for finding the suitability of a person for the intended task and for selecting one's career. Let us remember Aristotle's wisdom, “If
a good teacher becomes a soldier, the society will lose a good teacher and  get a bad soldier.” Health, harmony, and happiness are challenges as most of the time there is a gap between what people want to do and what they actually do. Incompatibility between personal preferences and professional expectations is very high. Look around there are incidents of people who work reluctantly. Those people cannot dedicate themselves to the jobs that they execute.



English Meaning - As I taught a kid - Rajesh
When a task ought not be done is done (or partly done) then it is disastrous. Similarly, a task (or part of a task) to be done is not done (or only partly done) then it is disastrous as well. 1) Because each task takes huge amount of resources and time. If we don't do the task well on time,  then it would give bad consequences. We lose time and resources. We can perhaps rebuild the resources, but the time lost cannot be earned back. There are ways to learn why a task not be done should not be done. But, executing such a task could be disastrous as well as taking away resources and time. 2) Also, a task we do would benefit our family or society or an organization. If we don't do our task then it will affect our family, society, organization. Hence, we must do the work without procrastinating.  

Questions that I ask to the kid
Why you should do a task that has to be done?
Why you should not do a task that should not be done?
Should we do a task and learn why it should not be done? Why or Why not?

No comments:

Post a Comment