Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மனத்து - மனதில் - மனது - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

உளது - இருப்பது, உண்மை.

போலக் - pōl   போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ.

காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

‘இனத்து’ - உறவாடும் மக்கள்

உளது - இருப்பது, உண்மை.

ஆகும் - ஆதல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
அறிவென்பது நமது மனதில் எண்ணங்களில் உள்ளது போல நமக்கு தோன்றும். ஆனால் உண்மையில் நமது அறிவென்பது நாம் பழகும் மக்களின் இயல்பு போலவே இருக்கும். 

இக்குறள் முதலில் ஏழை எளியவரிடம் படிப்பறிவு இல்லாதவரிடம் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்று தோன்றினால் அது மடமை. எல்லோருடனும் பழகலாம். ஆனால் அறிவாற்றலுக்கு, ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்கு அதனை போன்றே ஆற்றலும், ஆக்கமும், எண்ணமும் உள்ளோருடன் பழக வேண்டும். அவ்வாறு இல்லாத சோம்பித்திற்கின்ற, குறுக்குவழியில் செல்கின்ற, உயர்வான எண்ணங்கள் அல்லாத, எதிர்மரை எண்ணங்கள் கொண்ட மக்களிடம் தினம் தினம் உறவாடினால் அவர்களுடைய எண்ணங்களே நமக்கு வரும்.

உதாரணமாக மஹாத்மா காந்தி-ஜி அவர்கள் எல்லோருடனும் எவ்வித பாகுபாடின்றி பழகினார்கள். ஆனால் அவர் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அவரை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அதனை போன்றே எண்ணங்களும், அறிவும் கொண்டவர்களாக இருந்தது.

ஒரு நாலடியார் பாடல் ஒன்று:

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந் தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும், என்பதே இப்பாடலின் கருத்து.
இக்கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியது. அரிது என்று சொல்லி, இது இப்படித்தான் என்று உறுதியாகக் கூறாது, மாற்றுக்கருத்துக்கும் சிறிது விழுக்காட்டினை உள்ளுரையாக விட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. வள்ளுவர் காலத்தைச் சேர்ந்தவர்களும், பின்புவந்த புலவோர்களும், வேற்றுக் கருத்துக்களைக் கொண்டு, அவற்றைக் கூறவும் செய்தார்கள் என்பதைக் காட்டுவது. பின்னால் வந்தவர்கள் போல் குருட்டாம்போக்கிலே வள்ளுவர் வாக்கை கேள்வி கேட்காமல், ஒத்துக்கொள்ளவில்லை.

வள்ளுவர் குறளினை இவ்வாறு பொருள் செய்யலாம்.  சார்ந்திருக்கும் இனமே ஒருவரின் அறிவை உருவாக்குகிறது. அவரவர் மனம் அல்ல. அதனால் நல்லினம் சேரவேண்டும் என்று சொல்வதாகக் கொண்டால், பொருந்தி வருகிறது.

பரிமேலழகர் உரை
அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

Thirukkural - Management - Personality Development - Environment
The thought in Kural 454 is contrary to the thought, presented in Kural 373, that one's heredity or genetic factors have influences on one's personality. Even if a person displays, exhibits, or demonstrates that his mind is filled with rich knowledge, but that knowledge will be influenced much by the company to which that person belongs.

Wisdom which Seems to Come from the
Comes really from one's company.

A man is a reflection of his circumstances. Circumstances  shape a person's thinking, speaking, learning, and life style in general. Motivational speaker Jim Rohn meaningfully said, “We are the average of the five people we spend the most time with.” Is that observation true? Reflect on that. The quality of people you spend most of your time with influences whatever you read.

No comments:

Post a Comment