Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Thursday, September 12, 2019

உள்ளம் இலாதவர் எய்தார்

குறள் 598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்
ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு.

இலாதவர் - இல்லாதவர்

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தார் - அடையமாட்டார்கள்.


உலகத்து - உலகத்தினுடைய

உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

வள்ளியம் - வள் - வளம்; பெருமை; நெருக்கம்; கூர்மை; வாள்; வார்; வாளுறை; கடிவாளம்; காது; படுக்கை; வலிமை; வலிப்பற்றிரும்பு

என்னும் - என்கிற

செருக்கு -  cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
வள்ளியம் என்றால் பெருமை, வளம். இந்த பெருமையை, தான் என்னும் தற்பெருமையை, தன்னிடம் இருக்கின்றது என்ற செருக்கை  மயக்கத்தை ஆண்மையை ஒருவர் அடையலாம். அதனை தவறு என்று வள்ளுவர் கூறவில்லை. ஆனால் மிக எச்சரிக்கையாக ஒரு வார்த்தையை சேர்கிறார். அது உலகத்து வள்ளியம். உலகத்து வள்ளியம் எனப்படுவது உலகில் உயர்ந்தோர் உலகில் ஒழுக்கம் உடையவர்கள் வானம் அளவு உயர் குணம் கொண்டவர்கள் என்று பொருள். அத்தகையவர்கள் கொண்டுள்ள முக்கியமான குணம் ஊக்கம் எனும் மனத்திட்பம். 

ஆதலால் ஊக்கம் என்னும் உள்ளம் சார்ந்த பண்பினை இல்லாதவர்கள் உலகத்தில் வானம் அளவு உயர்ந்த குணத்தை உடையவர்கள் கொண்ட கர்வத்தை அது தரும் இனிய மயக்கத்தை களிப்பை என்றும் அடையமாட்டாரகள்.  

சுருங்க சொன்னாலால் ஊக்கம் இல்லாதவர்கள் உயர் குணத்தை அது தரும் களிப்பை என்றும் அடைய முடியாது. 

மேலும்: அஷோக் உரை

படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.
‘ஊக்கம் இல்லாதவர் இந்த உலகத்தில் பெருமிதமாக நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பைபெறமாட்டார்’ என்ற எளிய நீதிக் கருத்தைச் சொல்லும் குறள் இது. குறளின் மென்மையான நீதிக்கூற்று முறைக்குச் சிறந்த உதாரணம். ஊக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் வருவது இக்குறள்.
நான் வலியேன் என்ற செருக்கு என்பது பெரும்பாலும் எல்லா நீதிநூல்களிலும் கடிந்து விலக்கப்பட்டிருக்கக் காணலாம். ஆனால் தண்டனைகளைப் பற்றிப் பேசும் நீதிநூல்கள் அதை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக முன்வைக்கின்றன. சமயச் சார்புடைய நூல்கள் அதை ஒரு பாவமாக கூறுகின்றன. இறைவனால் தண்டிக்கப்படக்கூடிய ஒரு பிழையாக அதைச் சொல்கின்றன. குறைந்தபட்சம் வள்ளியம் என்னும் செருக்கு நம்மை அழித்துவிடும் என்ற கடும் எச்சரிக்கையாவது அதில் இருக்கும்.
ஆனால் ஊக்கம் உடையவர்களுக்கு கிடைக்கும் ஒரு வெகுமதியாகவே வள்ளுவர் அதைச் சொல்கிறார் என்பது வியப்புக்குரியது. ஆனால் இக்குறளை ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் தொடர்ச்சியில் வைத்து நோக்கும்போது இதன் பொருள் மேலும் விரிவதைக் காண்கிறோம். ‘ஊக்கம் உடையவரே உடையவர்கள், பிறர் எது இருந்தாலும் இல்லாதவரே’ என்று தளர்விலாத செயலூக்கத்தைச் சொல்லி மேலே பேச ஆரம்பிக்கிறது இந்த அதிகாரம். ‘ஊக்கம் கொண்ட உள்ளம் உடைமையே உடைமை ,பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்’ என்று மேலும் விளக்குகிறது. இவ்வாழ்க்கையில் வாழவேண்டுமென்ற ஊக்கமும் வெல்லவேண்டுமென்ற துடிப்பும் கொண்டவர்களுக்கே செல்வமும் வெற்றியும் அமைகிறது என்று வலியுறுத்திச் செல்கிறது வள்ளுவரின் கூற்று. செல்வமும் வெற்றியும் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும்.

பரிமேலழகர் உரை
உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

சாலமன் பாப்பையா உரை
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

060 ஊக்கமுடைமை

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - ஊக்கமுடைமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று

குறள் 592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை 
நில்லாது நீங்கி விடும்

குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்

குறள் 594


குறள் 596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

குறள் 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

குறள் 598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு



உடையர் எனப்படுவது ஊக்கம்

குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

எனப்படுவது - என்று என்பது

ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இல்லார் - இல்லாதவர்கள்

உடையது - செல்வமாக கொண்டது

உடையரோ - ஊக்க கொண்டவர்கள் உடையதாக நினைக்காத

மற்று - மற்ற எல்லா செல்வங்களும்

முழுப்பொருள்
எவரிடம் செல்வம் உண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்? எவரிடம் ஊக்கம் என்னும் செல்வம் இருக்கிறதோ  அவரே செல்வந்தர். அவரே செல்வம் உடையர். அப்படி ஊக்கம் இல்லாதவர்கள் செல்வமாக கருதுவது ஊக்கம் உள்ளவர்கள் செல்வமாக கருதாத நிலையில்லா பொருட்ச்செல்வம். ஏனெனில் பொருட்ச்செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகும். ஆனால் ஊக்கம் என்பது நமக்கு உள்ளே உள்ள செல்வம். உள்ளே உள்ள செல்வதை வைத்து வெளியே உள்ள பொருட்ச்செல்வத்தை ஈட்டலாம். ஆனால் வெளியே உள்ள பொருட்ச்செல்வத்தை வைத்து உள்ளே உள்ள ஊக்கத்தையும் ஈட்டமுடியாது பொருளையும் ஈட்டமுடியாது. இவ்வாழ்க்கையில் வாழவேண்டுமென்ற ஊக்கமும் வெல்லவேண்டுமென்ற துடிப்பும் கொண்டவர்களுக்கே செல்வமும் வெற்றியும் அமைகிறது என்று வலியுறுத்திச் செல்கிறது வள்ளுவரின் கூற்று. செல்வமும் வெற்றியும் ஊக்கமுடையவனை நோக்கி வழிகேட்டுச்செல்லும்

உதாரணமாக ஒரு தொழிலை தொடங்கியவர் பல சந்தை காரணங்களால் தொழிலை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார். அவருக்கு ஊக்கம் இருந்தால் அதே தொழிலை முன்னுக்கு கொண்டுவந்தோ அல்லது புதிய தொழிலை முன்னுக்கு கொண்டுவந்தோ இழந்த செல்வதை ஈட்டிவிடுவார். ஆனால் ஊக்கம் இல்லாதவர் ஒரு தடவை பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்ட  பிறகு மறுபடியும் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல் எவ்வித முதலீடும் செய்யாமல் இருப்பார். அவருக்கு தன்னிடம் இருக்கும் செல்வம் மட்டுமே செல்வம். நம்பிக்கை இல்லாதவர். அதற்கு தேவையான ஆக்கம் இல்லாதவர். இது தொழில் என்று இல்லை விளையாட்டு, கலை, மருத்துவம் ஆராய்ச்சி என்று எல்லாவற்றிருக்கும் பொருந்தும்.

ஊக்கம் கொண்டவரே செல்வம் கொண்டவர்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வித ஒரு செல்வத்தையும் கொள்ளாதவர்கள் என்று பொருள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஊக்கமது கைவிடேல்” (ஆத்திசூடி)

பரிமேலழகர் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.

மு.வரதராசனார் உரை
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

சாலமன் பாப்பையா உரை
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.

English Meaning - As I taught a kid - Rajesh
A person is considered to own something(wealth) only if he has and owns perseverance, motivation/drive. If one doesn't not possess perseverance and motivation then despite having money and other financial assets one is not considered owning wealth. Because all these financial wealth can leave us anytime and we can earn them back if we have perseverance/motivation. But if we lose motivation and perseverance, we can get the financial wealth and can't protect it too. Also, wealth goes to the person who has motivation and perseverance. 

Questions that I ask to the kid
Who is considered as a person who has wealth? 
When he is not considered to be not owning wealth despite having money in bank?

Monday, September 9, 2019

059 ஒற்றாடல்

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - ஒற்றாடல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்

குறள் 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

குறள் 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்

குறள் 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் 
உகாஅமை வல்லதே ஒற்று

குறள் 586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று





ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா

குறள் 583 
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்
ஒற்றினான் - வேவு பார்த்தான் / தூது பார்த்தான்

ஒற்றி - ஒற்றிவை-த்தல் - oṟṟi-vai-   v. tr. ஒற்று³-+. [T. ottu.] 1. To place out of the way;தூரவைத்தல். 2. To adjourn, as a hearing தவணை தள்ளிவைத்தல்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

தெரியா - அறியாத

மன்னவன் - அரசன்

கொற்றம் - வெற்றி; வீரம்; வலிமை; வன்மை; அரசியல்.

கொளகொளத்தல் - தளர்தல்; இளகியிருத்தல்.

கொளக் கிடந்தது - வெற்றியும், சிறப்பும் பெறுவதற்கு எவ்வொரு வழியுமே

இல் - இல்லை

முழுப்பொருள்
ஒரு நாட்டிற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை ஒரு அரசன் அறியவேண்டும். ஏனெனில் ஒரு நாட்டிற்கு வெளியே அந்த நாட்டிற்கு எதிராக சதிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.  அதனை ஒற்றர்கள் துணை கொண்டு அறிந்துணர்ந்து தன ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தெரியாத அரசனுக்கு ஒற்றை அறிந்துகொண்டு செயல்படுவதை தவிர வேறு வழியில்லை.

அதுமட்டும் இன்றி மற்றநாடுகளில் உள்ள நல்லவைகளிலும் தீயவைகளிலும்  பாடம் கற்று அதனை தனது நாட்டிலும் பின்பற்றலாம். (அதற்கு ஒற்று தேவை என்று இல்லை. மற்றவர்களை கவனித்தாலே போதும்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன்னினிதே” (இனியவை 36)

பரிமேலழகர் உரை
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

Friday, May 10, 2019

058 கண்ணோட்டம்

பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - கண்ணோட்டம்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)


கண்ணோட்டத் துள்ளது உலகியல்

குறள் 572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]

பொருள்
கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;)

உள்ளது - இருப்பது, உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

உலகியல்  உலகு + இயல் ; உலகநடை; உலகவழக்கம் உலகியற்கை

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அஃதிலார் -  அப்படி இல்லாதவர்கள்

உண்மை - உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ்

நிலக்கு - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
இவ்வுலகின் இயல்பென்பது கண்ணோட்டம் என்னும் தாட்சிணியம் அன்பு பரிவு அறம் என்பனவற்றை உண்மையாய் கொண்டது. அதுவே உலகின் ஆத்மா. அந்த கண்ணோட்டம் இல்லாத மனிதர்கள் உயிரினங்கள் இவ்வுலகத்திற்கு பாரம் என்கிறார் திருவள்ளுவர். இங்கே உலகின் இயல் என்று கூறி கண்ணோட்டம் இயற்கையான ஒன்று. அதனை இழப்பவன் இல்லாதவன் செயற்கையானவன் ஒவ்வாதவன் என்பதை விளங்கலாம். இத்தகைய ஒவ்வாதவர்களை பயனற்றது என்று கூறி இருக்கலாம். ஆனால் பொறை என்கிறார் ஏனெனில் இவ்வுலகின் வளங்களை அனுபவித்து இம்மக்களின் உழைப்பை அனுபவித்து அவர்களிடம் கண்ணோட்டம் இல்லாத இவர்கள் மற்றவர்களுக்கு பாரமே.

நாலடியார் கடுஞ்சொல் கொண்டு, அருள் நோக்கு இல்லாது, பிறர் துன்பத்தில் உவப்பவர்களை “கீழ்மக்கள்” என்றே கூறும்.

“கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்”

நான்மணிக்கடிகை, “கண்ணோடார் செற்றன்னர்” என்று அவர்களை இரக்கமற்றவர்கள் என்கிறது. மற்றொரு பாடலில், “யார் கண்ணும் கண்ணோட்டம் இன்மை முறைமை” என்றும் சொல்கிறது. ஆனால், இங்கு கண்ணோட்டம் இன்மையென்பது, ஒருதலையாக, நடுவு நிலையோடு இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது. இவ்வதிகாரம், கண்ணோட்டத்தைக் கருணயுள்ள பார்வை என்னும் உயர்பொருளிலேயே சொல்கிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.

மு.வரதராசனார் உரை
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...