குறள் 599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
பரியது - பெரிய உடம்பு பெற்றது
கூர்ங் - மிகுதி; கூர்மை; கூர்நுனி; குயவன்சக்கரத்தைத்தாங்கும்ஓர்உறுப்பு; இலையின்நடுநரம்பு; கதிர்க்கூர்; காரம்; குத்துப்பாடானபேச்சு; மிக்க; சிறந்த.
கோட்டது - கோட்டம் - வளைவு; வணக்கம்; நடுநிலைதிறம்புகை; மனக்கோணல்; பகைமை; பொறாமை; நாடு; நகரம்; தோட்டம்; கரை; யாழ்; மாக்கோலம்; உண்பன; பசுக்கொட்டில்; பசுக்கூட்டம்; குளம்; வயல்; நீர்நிலை; குரங்கு; வெண்குட்டம்; அறை; கோயில்; ஒருமணப்பண்டவகை; மாறுபாடு; சிறைச்சாலை; இடம்; வாசனைச்செடிவகை; குராமரம்; பாசறை; பச்சிலை.
கூர்ங்கோட்டது – கூரிய கொம்புகளை (தந்தங்களை) கொண்டது
ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.
யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்.
வெரூஉம் - வெரூஉ - அச்சம்
வெரூஉதல் - மருண்டஞ்சுகை; verūutal n. id. Beingafraid, startled; மருண்டஞ்சுகை. அலமர லரயிடைவெரூஉத லஞ்சி (குறிஞ்சிப். 137).
புலி - ஒருவிலங்குவகை; ஒருமுனிவன்; வேங்கைமரம்; சிங்கம்; சிம்மராசி'நால்வகைச்சாந்தினுள்ஒன்று; மயிர்ச்சாந்து; உண்ணாக்கு; சூதுகருவியுள்ஒன்று.
தாக்குறின் - தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்பெருக்கல்; குடித்தல்; சரிக்கட்டுதல்; உறைத்தல்; கடுமையாதல்; பழிவாங்குதல்; தலையிட்டுக்கொள்ளுதல்; பலித்தல்; பெருகுதல்; பாரமாதல்; நெளித்துப்போதல்.
முழுப்பொருள்
மிக பெரிய உடலை கொண்டிருந்தாலும், கூரிய தந்தங்களை கொண்டிருந்தாலும் ஒரு யானையினை ஒரு மிக சிறிய புலி கண்டு அஞ்சுவதில்லை. ஏனெனில் புலி தனது உறுமலால் யானையை அச்சம் கொள்ள வைக்கமுடியும் என்று நம்புகிறது. புலி பின்வாங்கவில்லை. புலி உறுமினால் யானையை அச்சம் கொள்கிறது.
புலியிடம் உள்ள அந்த ஊக்கமே ஒருவருக்கு வேண்டும். நம் முன் ஒரு யானை போன்ற பெரிய பிரச்சனையோ அல்லது கூரிய அபாயம் கொண்ட ஒரு பிரச்சனை இருந்தால் அதனை கண்டு அஞ்சாமல், பின்வாங்காமல் போராட வேண்டும்.
அளவு வலிமை ஆயுதங்களை விடவும் உள்ளத்து ஊக்கமும் முயற்சியும் மிக அவசியம் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும், பல உரைகள் யானைக்கு ஊக்கம் இல்லை ஆதலால் யானையால் புலியை வீழ்த்த முடியாது என்று கூறியுள்ளனர். அது தவறு என்பதே எனது பணிவான கருத்து. ஏனெனில் பெரிய யானையிடம் புலியின் ஒரு பாகம் சிக்கினாலும் புலி யின் மீது தன் காலை வைத்து நசுக்கிவிடும். ஆயினும் இறக்கும் முன் புலி தனது போர் குணத்தால் யானையை பிராண்டியோ கடித்தோ யானைக்கு பலத்த காயம் ஏற்படுத்திவிடும். மேலும் அந்த காயங்கள் சீழ்ப்பிடித்து யானை அல்லல் பட (சிகிழ்ச்சை கிடைக்கவில்லை என்றால் இறக்க) வாய்ப்பு இருக்கிறது.
An elephant would win in a tiger vs elephant fight. The tiger is undoubtedly a fierce beast, and it might stand the best chance out of all other land-dwelling animals of successfully hunting an adult elephant. Yet, the elephant’s size and power are simply indomitable.
Let’s imagine that the tiger stalks the elephant, which can smell and hear the tiger but not until the tiger has already leaped onto its back and dug in with its claws and teeth. The tiger is strong, but a lone cat can’t deal fatal damage to an elephant before the elephant ends the right.
An elephant can shake the tiger off and withstand the initial slam of the tiger into its body. Yet, the elephant will knock the tiger over or run it through at some point. Tigers are not agile enough to avoid an elephant forever.
All it takes is a piece of the tiger’s body to get caught under the elephant’s weight and the fight is over. The tiger will be crushed or stabbed to death. However, the chances are good that the elephant will be in bad shape after the fight. Enough deep gashes could leave them open to infection and lingering disabilities. A tiger could kill a juvenile elephant, though.
யானைகள் ஏன் இப்படி புலிகளுக்கும் மற்ற சிறிய உயிரினங்களுக்கும் பயப்படுகின்றன? என்பதை கீழே காணலாம்
Source: Encyclopedia
It’s actually because they are a mammal. Most mammals have brains that are programmed to jump back or be startled by critters that scurry by in a hurry. Elephants, regardless of how big they are, are also startled by things that move by them fast, like mice. According to elephant behavior experts, they would be scared of anything moving around their feet regardless of it’s size..
Elephants are not alone in their fear of mice and other rodent like creatures. Most animals jump back or appear startled when they happen upon something they weren’t expecting. Just like a human, an elephant may be frightened if a mouse runs right by them, but so would any other animal. Animals are usually startled by the presence of another animal unless they have been tracking them or already know they are there. Humans do this too. After seeing evidence of a mouse, the human is less likely to be startled by seeing it scurry by.
சாந்தி பாஸ்கரசந்திரன் அவர்கள் "குழந்ததைகளின் பேருலகம்" என்ற ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் "விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்" என்ற ஒரு கட்டுரையில் விடாமுயற்சி எவ்வளவு முக்கியம் என்று கூறியுள்ளார்.
மாணவ மாணவிகள் எப்போதும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு வெற்றியை நோக்கி உழைக்க வேண்டும். நம்மால் முடியாது என்ற எண்ணமோ, சுயப்பச்சாதாபமோ ஒருபோதும் வந்துவிடக் கூடாது. எத்தனை முறை தோற்றாலும் அடுத்த முறை வெற்றி பெற்றுவிடலாம் என்ற தன்னம்பிக்கையோடு முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், எவ்வளவு திறமை இருந்தும் பயன் இல்லாமல் போய்விடும்.
உருவத்தில் மிகப்பெரிய, பலம் மிக்க யானையை ஒரு சிறு கயிறு அல்லது சங்கிலியைக் கொண்டு ஒரே ஒரு காலில் மட்டும் கட்டி வைத்து எப்படிக் கட்டுப்படுத்த முடிகிறது என்று யானைப் பாகனிடம் கேட்டார்களாம். அதற்கு அந்த பாகன் சொன்னது இதுதான்; ‘யானை குட்டியாக இருக்கும்போது கயிற்றைக் கொண்டு ஒரு காலில் கட்டிவைத்துவிடுவோம். அப்போது அது முண்டியடித்து கயிற்றை அறுக்கப் பார்க்கும்... ஆனால், அது குட்டியாக இருப்பதால் கயிற்றை அறுக்க முடியாது. தினந்தோறும் அதேபோல் முயற்சி செய்து பார்த்து முடியாமல் தோற்றுப் போய்விடும்.
ஒரு கட்டத்தில் நம்மால் இந்தக் கயிற்றை அறுக்கவே முடியாது என்ற மனநிலைக்கு யானை வந்துவிடும். அதுவே வளர்ந்து பெரிய யானையாக ஆன பிறகு அந்த எண்ணம் மாறாமல் அப்படியே இருப்பதால் கயிற்றை அறுக்க யானை ஒரு சிறு முயற்சிகூட செய்யாது. அதுதான் மனிதர்களுக்கு சாதகமாக ஆகிவிடுகிறது. அவ்வளவு பெரிய யானையையும் மனிதர்களால் அடக்கி ஆள முடிகிறது என்றால், அது மனிதனின் பலமல்ல.. முயற்சியைக் கைவிட்ட யானையின் பலவீனம்!’
எவ்வளவு திறமையும், பலமும் இருந்தாலும் நம்மால் முடியாது என்ற எண்ணத்தோடு முயற்சி செய்யாமல் தன்னம்பிக்கை இழந்து கிடந்தால் வெற்றி பெற முடியாது என்பதற்காகச் சொல்லப்படும் கதை இது.
அதேநேரத்தில் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும் என்பதற்கு நம் கண் முன்னால் பார்க்கும் ஓர் உதாரணம் .. கலோனல் ஹார்லன் சான்டர்ஸ் ( Colonel Harland Sanders) கதை. .. உலகம் புறக்கணிக்கிறது என்பதற்காக நம்முடைய முயற்சிகளை நிறுத்தக் கூடாது. வெற்றிகிட்டும் வரை முயற்சிக்களை கைவிடக் கூடாது. அப்படிச் செய்தால் வெற்றிகிட்டும் என்பதற்கான உதாரணம்தான் கே.எப்.சி (KFC - Kentucky Fried Chicken) உரிமையாளரின் கதை
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை
நனவில் தான்செய்தது மனத்த தாகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇ” (கலி.49:1-4)
“அரண்தரு திரள்தோள் சால உளவெனின் ஆற்ற லுண்டோ
.....
திரண்டதோள் வனத்தை யெல்லாம் சிறியதோர் பருவம் தன்னில்
இரண்டுதோள் ஒருவ னன்றோ மழுவினால் எறிந்த தென்றான்” (கம்ப.சடாயு உயிர் 63)
பரிமேலழகர் உரை
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
(பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.).
மணக்குடவர் உரை
யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.
மு.வரதராசனார் உரை
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
சாலமன் பாப்பையா உரை
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
Thirukkural - Management - Motivation
Staying motivated is not in the size of the person. The art of staying motivated is in the heart of the person who faces hardships and challenges. Kural 597 is an appreciation of the determination of an elephant in a battlefield. However, the same determined elephant may fumble, stumble, and tremble when it faces a tiger, as in Kural 599. A tiger very small compared to the mammoth size of an elephant, attacks the elephant confidently.
Huge and sharp-tusked though he be
An elephant fears a tiger.
Though a tusker has a huge physique and powerful tusks, will be afraid of a tiger that is fearless. Therefore, just external size does not matter to stay motivated.
What matters for motivation is internal stuff. Recollect Mark Twain's motivation and stay motivated, “It's not the size of the dog in the fight; it's the size of the fight in the dog.“ How big is the size of your fight?
English Meaning - As I taught a kid - Rajesh
Elephant is big in size, it has two long sharp tusks. However, with Tiger has to combat an elephant, Tiger doesn't run away easily. Tiger has self belief and perseverance to fight. Hence, a tiger's terrifying roar will send elephants (and other animals) scampering before a fight begins.
Hence, like a tiger, a person should have perseverance and self belief that he/she can combat big(elephant) sized problems and come out of danger.
There is a wrong interpretation for this kural that elephant that doesn't fight with tiger. Any day if an elephant catches a part of the tigers' body, then it the fight is over. But chances are that elephant will be in a bad shape. after the fight. Enough deep gashes could leave them open to infection and lingering disabilities. A tiger could kill a juvenile elephant, though.
Questions that I ask to the kid
A tiger doesn't fear an elephant. Why? Explain
No comments:
Post a Comment