Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

ஒற்றும் உரைசான்ற நூலும்

குறள் 581 அதிகாரம்: ஒற்றாடல்.

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்ஒற்று- வேவு,உளவு 
உரை சான்ற - புகழ் கொன்ற 
இவையிரண்டும்  - இந்த இரு விஷயங்களும் 
தெற்றென்க மன்னவன் கண்- அரசனின் கண் போன்றது 

முழு விளக்கம் :
ஒற்றும் அதாவது தன்னையும் தன நாட்டையும் நோக்கி வரும் ஆபத்துக்களை ஒற்றறிந்து ,உளவு மூலமாக முன் கூற்றி தெரிந்து ,அதற்கு தயார் நிலையில் இருப்பது ,நாட்டை ஆழும் மன்னனுக்கு இன்றி அமையாதது ஆகும். நாட்டையும் நாடு மக்களையும் எவ்வாறு ஆழ வேண்டும் என நல வழி படுத்தும் அர நூல்களும் அதற்கு இணையான முக்கியம் பெரும்.
இவை இர்டண்டுமே ஒரு மன்னனுக்கு கண்களை போன்று மிக இன்றி அமையாதது எனக் கூறுகிறார் வள்ளுவர் .

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இராணுவங்களிலும் உளவுத் துறை என்று ஒன்று தனியாக இருக்கும்.இது சரியாக செயல் படாமல் போனால் நாம் ஆபத்துகளை சரி வர கணிக்க இயலாது .ஒற்றர்களும், தெளிந்த நூலறிவும் மன்னவனின் பார்வையைத் தெளிவாக்குகின்றன. நூலறிவு கண்போல் விளங்குகிறது என்றால், ஒற்றர்கள் தொலை நோக்கியாகவும் நுண்ணோக்கியாகவும் விளங்குகிறார்கள்.
இந்த ஒற்றர்களை நியமிப்பது குறித்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விரிவான செய்திகளைச் சொல்கிறது.
காபாடிகன், உதாதித்தன், கிருகபதிகன், வைதேகன், தாபதன் என்று ஒற்றர்களை பலவகையினராகப் பிரித்துக் கூறுகிறது.
ஆசிரியர்த் தொழில் செய்து கொண்டு ஒற்று வேலையிலும் ஈடுபடுபவன் காபாடிகன். பிறர் உள்ளத்தை எளிதாக அறிந்து கொள்ளும் சக்திவாய்ந்தவன்.
உதாதித்தன் துறவு வேடத்தில் வாழ்பவன். துறவு வாழ்க்கையில் தோற்றுப் போனவன். ஆசிரமங்களை அமைத்துக் கொண்டும், பல சீடர்களை வைத்துக் கொண்டும் வாழ்பவன். சமண, பௌத்த வேடங்களிலும் உதாதித்தர்கள் இருப்பதுண்டு.
கிருபாதிகன் என்பவன் அறிவும், தூய்மையும் உடையவன். விவசாயத் தொழிலில் நஷ்டத்துக்கு உள்ளாகி, அரசருக்கு ஒற்று வேலை செய்து, வசதியை அடைந்தவன்.
வைதேகன் என்பவன், வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒற்றன்.

தாபதன் என்பவன் அற்புதம் செய்யும் சாமியாராக வெளியே தோற்றம் தருபவன். சித்தர் என்று விளம்பரம் செய்து கொண்டவன். இவனுடைய மகிமையைக் கேள்விப்பட்டு, மக்கள் இவரிடத்தில் வந்து வழிபாடு செய்வார்கள். இவனோ தன்னை அண்டிவருகின்றவரை ஒற்று அறிந்து கொண்டிருப்பான்.
இவர்கள் அனைவரும் அரண்மனை வாழ்க்கையுடன் சம்பந்தப்படாதவர்கள் மாதிரி தோற்றம் அளிப்பார்கள். எவரும் சந்தேகப்பட முடியாது இவர்கள் ஒற்றர்கள்தாம் என்று.
இவர்களைத் தவிர, சத்திரிகள் என்னும் ஒருவகை ஒற்றர்களைப் பற்றியும் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.
ஆண்கள், பெண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கற்றவர்கள், சோதிடம், கைரேகை நிபுணத்துவம், பெற்றவர்கள். வசியம், இந்திரஜாலம், மறைதல், சகுணநூல், அறநூல், காமநூல் கற்றவர்கள் என்று இவர்களைப் பற்றி அந்நூல் கூறுகிறது.
ஒற்றர்கள் பல்வேறு வேடங்களில் அலைகிறவர்கள். அரண்மனைக்கு உள்ளும் அரண்மனைக்கு வெளியிலும் பிறநாட்டிலும் கூட வேவு பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.
இன்று அத்துறை நவீனமாகவும், வளர்ச்சி பெற்றும் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் உளவுத்துறை வைத்திருக்கிறது. விண்கோள்களும் வேவு பார்க்கின்றன. இது ஆட்சி செய்பவர்களுக்கு மிகவும் அவசியமும் கூட.


பரிமேலழகர் உரை: 
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

No comments:

Post a Comment