Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

  

குறள் 576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்
[பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்]

பொருள்
மண் - நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

மண்ணொடு - மண்ணுடன் 

இயைந்த - இயைதல் -  பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்

மரத்துப்போதல் - கால்முதலியனஉணர்ச்சியற்றுப்போதல்; விறைத்தல்; திகைத்தல்.

மரத்து  - மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons

கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணொடு - கண்ணுடன் 

இயைந்து - இயைதல் -  பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்

கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;)

கண்ணோடாதவர் - கண்ணோட்டம் இல்லாதவர்

முழுப்பொருள்
உடலில் ஒரு உறுப்பான கண் என்பது பிறர் துன்பங்களை பார்த்து அவற்றை உணர்ந்து அருளுடனும் தாட்சிணியத்துடனும் இருப்பதற்காகும். அத்தகைய கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர்கள் மண்ணில் வளர்ந்து மண்ணுடனேயே இயைந்து இருக்கும் மரங்களுக்கு ஒப்பர். அதாவது அங்கும் இங்கும் நகராமல் தேங்கி நிற்கும் மரங்களை போன்றவர்கள். 

ஏன் மரங்களை கூறுகிறார் திருவள்ளுவர் செடிகளை கூறவில்லை? ஏனெனில் செடிகளின் வாழ்நாள் மரங்களை விட மிக சிறியது. பெரும்பாலும் சில வாரங்கள் முதல் சில ஆண்டுகள் தான். ஆனால் மரங்கள் பல ஆண்டுகள் இருக்கும். குறைந்தது ஒரு 40 ஆண்டுகளாவது இருக்கும். இவை உலகில் உள்ள மற்ற இயற்கை வளங்களை பறவைகள் போன்றோ மிருகங்கள் போன்றோ கண்டு ரசிக்க முடியாது. இருக்கிற இடத்திலேயே உணர்வற்று தேங்கி நிற்க வேண்டியது தான் அதன் கதி. நின்று கொண்டு இவை ஒரு தவம் (தபஸ்-உம்) செய்யவில்லை. வீடுபேறுமில்லை. 

தேவதேவனின் கீழ்க்காணும் இந்த கவிதையை எடுத்துக்கொண்டால் மரங்களை பற்றி இன்னும் ஆழமாய் புரியும். 

நிர்வாண கோபியராய்,
கரையொட்டிய மரங்கள்,
கால்களில் மோகம் வளர்த்து,
நதிநீர் நோக்கி ஓடும்.,
மண்டையில் மோகம் வளர்த்து,
வானத்தை நோக்கி இறைஞ்சும்,
மோக நிழலுக்குள் திளைத்தபடி,
மனிதர் வருவர் போவர்,
குளித்துக் கரையேறியவர்தான் யாரோ?’
(தேவதேவன்)
பொருள்: மரங்கள் மண்ணுடன் வேராலும் விண்ணுடன் சிரத்தாலும் மோகம் வளர்த்து நித்தியமான அலைக்கழிப்பில் நிற்கும் கோபிகைகளாக உருவம் கொள்கின்றன. நித்திய காமினிகளாகிய கோபியர். ஒருபோதும் அடங்காத மோகத்தின் தூலமாகவே தேவதேவன் முன் எல்லாத் தருணத்திலும் இயற்கை காட்சி தருகிறது.

இப்பொழுது இக்குறளுக்கு பொருள் விளங்குவது இன்னும் எளிது, கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர்கள் மண்ணோடு வேராலும் விண்ணுடன் சிரத்தாலும் மோகம் வளர்த்து நித்தியமான அலைக்கழிப்பில் கரையை கடக்காமல் நிற்கும் மரங்களுக்கு ஒப்பர் ஆவார். 




“கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும்” என்ற சிலப்பதிகாரவரிகளுக்கு அடியார் நல்லார் உரையில், சுதையால் பாவையுள்ளிட்டன பண்ணுவார் என்று “மண்ணீட்டாளருக்குப்” பொருள் வகுத்துள்ளார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.).

மணக்குடவர் உரை
சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

Thirukkural - Management - Managing Emotions
Valluvar uses yet another simile in Kural 576 to differentiate trees and people with regard to compassion. A person's eyes that cannot read others' emotions and do not move by someone's sufferings are like trees that cannot move as they are rooted to the earth. 

Life trees earth-bound which cannot
Are eyes unmoved by pity.

A tree cannot move as it is fixed firmly to earth by its roots. A tree will damage itself, if it tries to move from its place. Though a tree does not move physically, it moves emotionally as many studies have established that plants vibrate to show their empathy when a nearby plant is harmed. Human beings, unlike trees, are not physically fixed. But some of us are psychologically tough that we find moving at the sight of someone's suffering very difficult.

No comments:

Post a Comment