Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

குறள் 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்
சிதை - கீழ்மை
சிதைவு - அழிகை, குற்றம்; கேடு; அழிய; தவற 
இடத்து - இடம்; வாய்ப்பு,  இடம் கொடுத்தால்; தருணம்;  கொடுத்தால்
சிதைவிடத்து - (கவனம்) சிதைய,அழிய வாய்ப்பு, இடம்,தருணம் கொடுத்தல்

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

உரவு - Strength, force, firmness, hardness, வலி
உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons)

புதை - சரீரம்

அம்பு - அத்திரம்; மூங்கில்

பட்டு- (அம்பினால்) அடிப்பட்டு

பாடு - நிலைமை, பெருமை, உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

ஊன்றும் - சார்பு, இறுகப்பிடி,  தாங்கு, நிலைபெறு

களிறு - யானை

  Related image 

முழுப்பொருள்
போர்களத்தில் ஒரு யானைக்கு அம்பினால் உடம்பில்(புதை) அடிப்படும்.  துன்பம் நேரும். அத்தகைய துன்பத்தினால் யானை தளராது. அடிப்பட்டு விட்டோமே என்று களத்தை விட்டு வெளியே வராது. தன் கனத்த கால்களால் ஊன்றி உழைத்து தன்னை நிலைநிறுத்துக்கொள்ளும். தொடர்ந்து அஞ்சாமல் போர்களத்தில் போராடும்.  அதுவே அதனுடைய குணமாகும்.

குறிப்பு: அக்பரின் ஒரு யானை 82 அம்புகளை தாங்கிக் கொண்டது.
[Snippets from Page 218 of War Elephants : According to Akbar's biographer, one of his elephants survived eighty-two arrow strikes and another beast with fifty-five].

அத்தகைய யானை போன்று ஒருவன் தன் வாழ்வில் வரும் துன்பங்களை எதிர்க்கொள்ள வேண்டும். ஒருவன் வாழ்வில் முன்னே செல்லும் பொழுது பல இடர்களும், சோதனைகளும் வரும். நமக்கும் இப்படி வந்துவிட்டதே என்று எண்ணுவோர் கீழோர். அவர்கள் நீலிகண்ணீர் வடித்துக்கொள்வர். தன் கடமையில் இருந்து விலகிவிடுவர். ஆனால் வலியவர்களோ (ஊக்கம் உடைய உள்ளம் உடையவர்களோ) பிர்ச்சனையை கண்டு மனம் தளரமாட்டர்கள். மனம் தளர வாய்ப்பு தரமாட்டார்கள். அதில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்று பார்ப்பார்கள். அஞ்சாமல் முன் நகர்ந்து செல்வார்கள்.  அப்படிப்பட்ட ஊக்கத்துடன் முன்செல்பவர்களே அறிஞர்கள்.  வெற்றியை காண்பர்.

Guitar ப்ரச்சன்னாவுடன் ஒரு நேர்காணல் [நன்றி: NDTV Hindu]
Obviously it is difficult to bring the vocabulary of Carnatic music into the Guitar. But at the same time it was challenging and interesting because I was playing guitar anyways before playing Carnatic music... I don't know if it is difficult or easy .. I don't think about in those terms. I only think about the music. Can I communicate the essence of this music in the instrument? What all do I have to do to make sure it sounds like Carnatic music.


எழுத்தாளர் ஜெயமோகன் உரை (நன்றி)
‘தன் தசையின் அம்பு புதைந்தபோதும் அஞ்சாமல் முன்னால் பாயும் மதயானையைப்போல நெஞ்சுரம் கொண்டவர் வீழ்ச்சியிலும் கூட அஞ்சாமல் முன்செல்வார்’ என்று சொல்லி அதற்கு அடுத்தபடியாகவே முதலில் சொல்லபப்ட்ட குறளை முன்வைக்கிறார் வள்ளுவர்.

ஊக்கத்தின் எல்லையில்லாத வல்லமையைச் சொல்லிவந்த அதிகாரம் இது. மானுடவாழ்க்கை என்பது மன ஊக்கம் என்னும் நீரில் மிதக்கும் மலர் மட்டுமே என்ற மென்மையான உவமைக்குப் பின்னர் உயிர்கொல்லும் தாக்குதலுக்கு ஆளாகியும்கூட கொம்புகுலுக்கி, துதிக்கை சுழற்றி, பிளிறி அம்பு எய்தவனை நோக்கியே பாய்ந்துசெல்லும் யானையின் மூர்க்கத்தையும் வேகத்தையும் உவமையாக ஆக்குகிறார். அந்த உச்சகட்டச் சித்தரிப்புக்குப் பின்னர்தான் இவ்வரி வருகிறது. ஊக்கம் இல்லாதவர்களுக்கு வலியவன் என்னும் நிமிர்வு கிடையாது.

மேலும் அஷோக் உரை (நன்றி) 

பரிமேலழகர் உரை
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.' (புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல.
இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
களிறு புதை அம்பிற் பட்டுப் பாடு ஊன்றும்-போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும் ; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் -அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர்.

உவமமும் பொருளுங் கொண்ட அடைகள் இரண்டிற்கும் பொதுவாதலின், ஒல்காமை களிற்றுடனும் பாடூன்றுதல் உரவோருடனுஞ் சென்றியைந்தன. தாம் மேற்கொண்ட வினைக்குத் தடையாகப் பேரிடுக்கண் நேரினும், தளராது தாம் கருதியதை முடிப்பர் என்பது ,உவமத்தாற் பெறப்படும்.முந்தின குறள் ஊழால் தடைப்படும் வினையையும், இக்குறள் இடையூற்றால் தடைப்பட்டு விடா முயற்சியால் வெல்லப் படும் வினையையும் குறித்தன வென வேறுபாடறிக.

மூ.வ உரை
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார். 

சாலமன் பாப்பையா உரை
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

No comments:

Post a Comment