ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், ஒற்றாடல் குறள் 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல்
குறள் 583 
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]

பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்
ஒற்றினான் - வேவு பார்த்தான் / தூது பார்த்தான்

ஒற்றி - ஒற்றிவை-த்தல் - oṟṟi-vai-   v. tr. ஒற்று³-+. [T. ottu.] 1. To place out of the way;தூரவைத்தல். 2. To adjourn, as a hearing தவணை தள்ளிவைத்தல்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

தெரியா - அறியாத

மன்னவன் - அரசன்

கொற்றம் - வெற்றி; வீரம்; வலிமை; வன்மை; அரசியல்.

கொளகொளத்தல் - தளர்தல்; இளகியிருத்தல்.

கொளக் கிடந்தது - வெற்றியும், சிறப்பும் பெறுவதற்கு எவ்வொரு வழியுமே

இல் - இல்லை

முழுப்பொருள்
ஒரு நாட்டிற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை ஒரு அரசன் அறியவேண்டும். ஏனெனில் ஒரு நாட்டிற்கு வெளியே அந்த நாட்டிற்கு எதிராக சதிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.  அதனை ஒற்றர்கள் துணை கொண்டு அறிந்துணர்ந்து தன ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தெரியாத அரசனுக்கு ஒற்றை அறிந்துகொண்டு செயல்படுவதை தவிர வேறு வழியில்லை.

அதுமட்டும் இன்றி மற்றநாடுகளில் உள்ள நல்லவைகளிலும் தீயவைகளிலும்  பாடம் கற்று அதனை தனது நாட்டிலும் பின்பற்றலாம். (அதற்கு ஒற்று தேவை என்று இல்லை. மற்றவர்களை கவனித்தாலே போதும்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன்னினிதே” (இனியவை 36)

பரிமேலழகர் உரை
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain