குறள் 589
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்
[பொருட்பால், அரசியல், ஒற்றாடல்]
பொருள்
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.
உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்
உணராமை - அறியாமல்
ஆள்க - ஆள்(ளு)-தல் - āḷ- 2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.
உடன் - ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு.
மூவர் - பிரமன், திருமால், சிவன்ஆகியமும்மூர்த்திகள்; அப்பர்; சுந்தரர், திருஞானசம்பந்தர்ஆகியமூன்றுநாயன்மார்கள்; காண்க:மூவேந்தர்.
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
தொக்க - tokka adj. part. joined; united; see under தொகு. (தொக்கு+அ), rel. parti. Joined, united, சேர்ந்த; [ex தொகு, v. n.] (p.)
ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க.
தேற - tēṟa adv. தேறு-. Thoroughly;கடைபோக. தேற விசாரிக்கவேணும்.
தேற்று - tēṟṟu III. v. t. console, comfort, ஆற்று; 2. strengthen, invigorate, nourish, பலப்படுத்து; 3. clarify, refine, சுத்தி கரி; 4. clear up, decide, தீர் VI; 5. (for. தேறு) know, know certainly, அறி.
தேற்றுதல் - தெளிவித்தல்; தெளிந்தறிதல்; சூளுறுதல்; ஆற்றுதல்; தேறுதல்கூறுதல்; தூய்மைசெய்தல்; குணமாக்குதல்; பலமுண்டாக்குதல்; ஊக்கப்படுத்துதல்.
படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.
முழுப்பொருள்
ஒற்றாடல் என்பது ஒரு நாடும் அதன் அரசும் செய்யவேண்டிய முக்கியமான ஒரு செயலாகும். அப்பொழுது தான் பகைவரிடத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். சில சமயங்களில் நட்பு நாடுகளும் பகைவராக மாறக்கூடும். நட்புப்போல் தோன்றும் பகைவரும் உண்டு. ஆதலால் உளவறிதல் மிக அவசியம். உளவறிய ஒற்றர்களும் தேவை. அதற்கு ஒரு மிக பெரிய ஒற்றர் வலையினை பின்ன வேண்டியுள்ளது. ஒரு நாட்டிற்கு அல்லது ஒரு நாட்டில் உள்ள முக்கிய நிர்வாக அமைப்புகளில் ஒற்றர்களை வைப்பது அவசியம்.
ஆனால் ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு நிர்வாக அமைப்பிற்கோ ஒரே ஒரு ஒற்றரை நியமிப்பது சற்று ஆபத்தாகும். ஏனெனில் ஒற்றரும் மனிதரே. அவர் பிழை செய்ய நேரிடும் அல்லது பகைவரிடம் விலைக்குப்போய் தவறான செய்தி சொல்லக்கூடும் அல்லது பகைவரிடம் அகப்பட்டு தவறான செய்தி அனுப்பக்கூடும். ஆதலால் குறைந்தது மூன்று ஒற்றர்களை நியமித்து அவர்கள் கூறும் செய்திகளை சரிபார்த்துக்கொள்ளலாம். முரண் இல்லையேல் அது நம்பத்தகுந்த செய்தி என்று நம்பலாம். ஆனால் இம்மூன்று ஒற்றர்களும் ஒருவரை ஒருவர் அறிந்தால் அவர்கள் கூட்டுக்களவானிகளாக மாறி கூட்டுச் சதி செய்யக்கூடும். ஆதலால் ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் உணரா வண்ணம் அவர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, ஒற்றர் தம் தொழிலிலும் முனைப்புடன் இருப்பர். அப்படி நியமித்தப் பின்பு அவர்கள் கூறும் செய்திகளை சேகரித்து சரிபார்த்து நம்புக.
பெருங்கதையும், சீவக சிந்தாமணியும் ஒற்றர்களை ஆள்வது பற்றி விரிவாகவே பேசுகின்றன. இக்குறளின் கருத்தை ஒட்டி அவற்றிலுள்ள பாடல் வரிகள்:
“அறிந்தஒற் றாளர் செறிந்தனர் உரைப்ப
ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா
முன்தனக் குரைத்த மூவர் வாயவும்
ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி” ( பெருங்கதை: 3.25: 47-50)
“ஒன்றிமுன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந்
தின்றி தாற் பட்டதென்றியம்புகின் றார்களே” (சீவக 1829)
“.......ஒற்றாளர்சொல்
கோத்தெனக் கொடுத்தனன் கொழுநிதி’ (சீவக.1845)
குறிப்பாக இரண்டு பாடலுமே மூன்று ஒற்றர்கள் கண்டு சொல்லியதை ஒப்பு நோக்குதலைக் கூறுவதைக் காணாலாம். மேலும் குமர குருபர சுவாமிகளின் பிரபந்தத் திரட்டிலே வருமொரு பாடல் வரியாம் “வேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல விரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி” (ஒற்றர் மூலம் அறியப்பட்டுப் பொருளால் ஒத்த உண்மைச் சொற்களைப் போல) என்பது எண்ணைக் குறிப்பிடாது ஒத்த கருத்தைக் கூறுவதைக் காணலாம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.).
மணக்குடவர் உரை
ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால். இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.
மு.வரதராசனார் உரை
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
சாலமன் பாப்பையா உரை
ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.
No comments:
Post a Comment