A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.
Search This Blog
Disclaimar
Wednesday, January 24, 2018
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
031 வெகுளாமை
இயல் - துறவறவியல்
அதிகாரம் - வெகுளாமை
சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)
குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
குறள் 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
சினத்தைப் பொருளென்று கொண்டவன்
”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-19 இல் ஒரு வரி இப்படி வருகிறது
பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.
“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.
“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர்.
Tuesday, January 23, 2018
பொய்மையும் வாய்மை யிடத்த
தீர் - tīr VI. v. t. finish, complete, முடி; 2. accomplish, perfect, பூர்த்தியாக்கு; 3. settle, decide, தீர்மானி; 4. expiate (as sin), cure (as sickness), allay (as thirst) நீக்கு.
தீர்-தல் - tīr- 4 v. [T. tīru, K. tīr, M.tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire,vanish; உள்ளதொழிதல். 2. To be completed,finished, consummated; முற்றுப்பெறுதல் வேலைதீர்ந்துவிட்டது. 3. To separate; to leave; tocease, as pain or disease; to be cleared up, as adoubt; to be freed, as from a curse or its effects;நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள்482). 4. To go, proceed; போதல் (பிங்.) 5.To be absent, non-existent; இல்லையாதல். பாய்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 6. To die, perish;அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 7. To pass; tobe spent; கழிதல் சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா.திருவவ. 43). 8. To be exhausted, used up;செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது.ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45). 9.To belong absolutely; உரிமையாதல். திருமகட்கேதீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 10. Tobe determined, decided; நிச்சயித்தல் தீர்ந்த
பயக்கும் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.
எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.
வாய்மை என்றால் உண்மை. வாய்மைக்கு நேர் எதிர்ச்சொல் என்றால் அது பொய்மையாகும். வாய்மை என்றால் எத்தகைய நிலையிலும் உண்மையை சொல்வது, உண்மையை அறத்தை கடைப்பிடிப்பது. அறத்தை பின்பற்றினால் வாழ்வில் சிறப்பு. அதனுடைய பலனும் நல்லவையாக இருக்கும். ஆதலால் வாய்மை சிறந்தது.
ஆனால் பொய்மையும் (பொய் சொற்களும், மாயச் சொற்களும்) வாய்மையின் சிறப்பை பெறும் ஒரு தருணம் ஒன்று உண்டு. அது எதுவெனில் எவ்வித குற்றமும் தராத (யாருக்கும் தீங்கு தராத) நன்மையை பயக்க சொல்லபடும் பொய். குறிப்பாக தீமையைப் போக்கி நன்மையை தரவேண்டும்.
இக்குறளில் முக்கியமான சொல்லாட்சி என்றால் “புரைதீர்ந்த நன்மை”. குற்றம் அல்லாத நன்மை என்பது முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு நன்மையும் பிறருக்கு தீமையும் விளைவிக்குமாயின் அதனை செய்யக்கூடாது. மற்றொன்று வாய்மை யிடத்த என்று சொல்கிறார். வாய்மை தரும் சிறப்பை அத்தகைய பொய்யும் தரும். அவ்வளவே. வாய்மையும் பொய்யும் ஒன்றாகிவிடாது. பொய் அறமாகிவிடாது.
மேலும்: அஷோக் உரை
030 வாய்மை
இயல் - துறவறவியல்
அதிகாரம் - வாய்மை
சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)
குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வரின் தலை
குறள் 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
Monday, January 22, 2018
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
029 கள்ளாமை
இயல் - துறவறவியல்
அதிகாரம் - கள்ளாமை
சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)
குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்
குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
குறள் 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு
திருக்குறள்
Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்
வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...

-
குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals g...
-
குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in...
-
மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்க...