குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
உள்ளத்தால் - (வெளிக்காட்டிக்கொள்ளாமல், ரகசியமாக) மனதால் கூட
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.
உள்ளலும் - நினைத்தலும்;
உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல்.
தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.
தீதே - தீங்கே; தவறே, தீமை
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
பிறன்பொருளைக் - மற்றவர் பொருள்கள் மீது உடைமைகள் மீது
கள்ளம் - வஞ்சகம்; பொய்; களவு; குற்றம்; அவிச்சை; புண்ணிலுள்ளஅசறு.
கள்ளத்தால் - சூழ்ச்சியால் / வஞ்சனையால்
கள்வேம் - அடையவேண்டும்
எனல் - என்ற எண்ணம் கூட
முழுப்பொருள்
பிறர் பொருள்கள், உடைமைகளை அடையவேண்டும்; வஞ்சித்து அடையவேண்டும்; களவு/சூழ்ச்சி செய்து அவருக்கு தெரியாமல் அடைய வேண்டும் என்று தன்னுடைய மனதினால் உள்ளூர ரகசியமாய் நினைத்தலும் கூட தீதே என்றுரைக்கிறார் திருவள்ளுவர்.
இது மனதை தூய்மையாய் வைக்கும் பொருட்டு துறவறவியலில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
மேலும்: அஷோக்
ஆத்திச்சூடி
கொள்ளை விரும்பேல்
சூது விரும்பேல்
தீவினை அகற்று
துன்பத்திற்கு இடம் கொடேல்
நுண்மை நுகரேல்
மனம் தடுமாறேல்
ஆத்திச்சூடி
கொள்ளை விரும்பேல்
சூது விரும்பேல்
தீவினை அகற்று
துன்பத்திற்கு இடம் கொடேல்
நுண்மை நுகரேல்
மனம் தடுமாறேல்
பரிமேலழகர் உரை
உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்து கொள்வோம் என்று கருதற்க.
விளக்கம்
('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம், அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உள்ளத்தால் உள்ளலும் தீதே - தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம் ; பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் - ஆதலால் , பிறன் பொருள் எதையேனும் அவனறியாமற் கவர்வேம் என்று கருதற்க.
'உள்ளத்தால்' என்னும் வேண்டாச் சொல் துறவியரின் உள்ளம் தூய்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நின்றது. ' உள்ளலும்' இழிவு சிறப்பும்மை. 'அல்' இங்கு எதிர்மறை வியங்கோளீறு. இனி, கள்வேமெனல் உள்ளலுந்தீதே எனினுமாம்.
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பிறன் பொருளை கள்ளத்தால் கொள்வேம் என - பிறனுடைய பொருளைத் திருட்டுத்தனத்தால் கொள்வேம் என, உள்ளத்தால் உள்ளலும் தீதே- மனத்தால் நினைத்தலும் தீதே.
அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. கள்ளம்-திருட்டுத்தனம். தருமர், மணக்குடவர் பாடம் ‘கள்ளத்தாற் கள்வேமெனல்’. நச்சர், பரிமேலழகர் பாடம் ‘கள்ளத்தாற் கொள்வேமெனல்’. தாமத்தர் பாடம் ‘கள்ளத்தாற் கொள்வோ மெனல்’. ‘என’ என்பதே போதிய தாகலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. உள்ளத்தால் என வேண்டாது கூறினார்.
கருத்து: களவு செய்ய நினைத்தலும் தீது.
மணக்குடவர் உரை
பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக. இது களவு தீதென்றது.
மு.வரதராசனார் உரை
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
Thirukkural - Management - Ethical Behavior
Kural 282 is a sequel to Kural 281. Even if you desire to covet someone's possession,
that act of thinking itself is an unethical one.
The very thought of robbing another
Is evil.
English Meaning - As I taught a kid - Rajesh
Even (discreetly) thinking about by cunningly or tactfully or strategically stealing others properties/materials (even if within the law or rules) is evil and dangerous. Because such dangerous thoughts are like seeds. It would germinate and destroy later at some point in time. It can lead us to dissatisfaction, anger, jealousy and lead us to steal. It will make us restless and we will get distracted. Hence, one should focus on keeping their heart, mind and all the thoughts pure and does not give any room for even tiny dirt.
Questions that I ask to the kid
What are the things that are dangerous even at thought level?
No comments:
Post a Comment