குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
பொருள்
களவினால் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
ஆகிய - ஆக்கம் ; உருவாகிய
ஆக்கம் - ākkam n. ஆக்கு-. [M. ākkam.]1. See ஆக்கக்கிளவி செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல் (தொல். சொல் 20). 2. Creation;சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல் (சி.சி. 1, 37). 3. Increase, development; விருத்தி தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி. 301). 4. Gain,profit; இலாபம் ஆக்கங் கருதி முதலிழக்குஞ்செய்வினை (குறள், 463). 5. Accumulation; ஈட்டம் அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள்,755). 6. Wealth, prosperity, fortune; செல்வம் மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457). 7. Gold; ākkam n. ஆகு-. 1. Achievement, accomplishing; கைகூடுகை. (பு. வெ. 1, 4,உரை.) 2. Auspiciousness; மங்களகரம். Loc.
அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி
இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்
ஆவது - ஆகவேண்டியது; விகற்பப்பொருள்தரும்ஓரிடைச்சொல்; விவரம்பின்வருதலைக்குறிக்குஞ்சொல்; எண்ணொடுவருஞ்சொல்.
போல - pōl போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ.
கெடும் - கெடுநினைவு; கேடு
முழுப்பொருள்
பிறரை வஞ்சித்தோ அல்லது பிறரிடம் இருந்து திருடியோ சேர்த்த (நற்பெயர், புகழ், உறவுகள், அந்தஸ்து, பொருள், பொன்) செல்வம் ஆனது அளவுக்கு மிகுந்து உயர்வதுப் போல உயர்ந்தாலும் பின்பு ஒன்றும் இல்லாத நிலைமைக்கு நம்மை தள்ளி நமக்கு கேட்டை கொடுக்கும்.
பழமொழிப் (173) பாடலொன்று “தீயன, ஆவதே போன்று கெடும்” என்று சொல்லுகிறது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும். இது பொருள் நிலையாதென்றது
மு.வரதராசனார் உரை
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
Thirukkural - Management - Ethical Behavior
There are innumerable cases of people who had become rich by improper means and lost their riches overnight. The wealth that someone gets by cheating or deceiving others or by resorting to unethical means disappears quickly at one point, though that wealth appears to be increasing largely, predicts Kural 283.
Stolen wealth may seem to swell
But in the end will burst.
A thing that does not belong to you will never belong to you. The wise proverb 'Things easily got
are easily lost’ is in line with Valluvar's thought. This sort of wealth will inflate like a balloon and appear big, but will burst suddenly and unexpectedly leading to nothing. Undeserved wealth is a big bubble.
No comments:
Post a Comment