Posts

Showing posts with the label Management_Leadership

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

Image
குறள் 667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் உருவு - உருவம்; வடிவு அழகு அச்சம் உருவு -  (வி)உருவுஎன்னும்ஏவல்; ஊடுருவு. கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல். எள்ளாமை - இகழ்ச்சி வேண்டாம் வேண்டும் -  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். உருள் - தேருருளை; வண்டி உரோகினி; வட்டம் உருள் -  (வி)புரள்; உருட்டு திரள் அழி பெருந் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத., பெரியது; மிகவும். தேர்க்கு - தேர் - இரதம்; சிறுதேர்; காண்க:கொல்லாவண்டி; உரோகிணிநாள்; கானல்; பௌத்தமுனிவர். அச்சு - அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம் ஆணி - இரும்பாணி; அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு; எல்லை அச்சாணி - கடையாணி, ஊர்திகளின்இருசில்சக்கரம்கழலாமல்செருகப்படும்ஆணி. அன்னார் - Such pe...

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

Image
குறள் 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி [அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சமன் -  ஏற்றத்தாழ்வின்மை; இசைநூலில்வரும்தானநிலைமூன்றனுள்ஒன்று; ஆண்மை; யமன்; நீதிமன்றஅதிகாரியின்அழைப்புக்கட்டளை. செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு தூக்கும் -  தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல். சீர்தூக்கும் - சீர்தூக்குதல் - ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; வரையறுத்தல் கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கட...

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

குறள் 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  குறித்தது - குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல். கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது கொள் - கற்றுக்கொள்ளுதல் கொள்வாரொடு - கொள்வார் - அறிந்து கொள்ளுவார் ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன். உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல். அனை - அன்னை; அந்த ஒருவகைமீன். உறுப்பு  ஓரனையர் - பல உறுப்புகள் கொண்ட ஓர் உடல் போன்று ஒத்தவராய் இருத்தல் வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிற...

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

குறள் 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். ஒழுகான் - ஒழுகாதவன் ; ஒத்து போகாதவன் அளவு  - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அறியான் - அறியாதவன் தன்னை -  தன்னைப் பற்றி வியந்தான் - வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். விரைந்து - மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல். கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்;கெடுநினைவு; கேடு கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்த...

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

குறள் 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] பொருள் காட்சிக்கு - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல். எளியன் - வறியவன்; இலகுவாய்அடையப்படுபவன்; வலியில்லாதவன்; அறிவில்லாதவன்; குணத்தில்தாழ்ந்தவன். கடுஞ்  - கடுமை - கொடுமை; கண்டிப்பு; கடினம்; வன்மை; மிகுதி; விரைவு; வெம்மை; மூர்க்கம்; சினம். சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். அன் - ஆண்பால்வினைவிகுதி; தன்மையொருமைவிகுதி; ஆண்பால்பெயர்விகுதி;...

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்

குறள் 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] பொருள் இயற்றலும் - இயற்றல் - செய்தல்; முயற்சி ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல் ஈட்டலும் -  ஈட்டல் - īṭṭal   n. ஈட்டு-. Amassing wealth,a desirable quality of character in merchants;வணிகர்குணங்களு ளொன்று. (பிங்.)  காத்தலும் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல் காத்த - பாதுகாத்தவை வகுத்தலும் - வகுத்தல் - கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல். வல்லது - வல்ல - வலிமையுள்ள; திறமையுள்ள. அரசு - அரசன்; இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரசநாயனார். முழுப்பொருள் எது வலிமையான திறமையுடைய அரசு ? 1. பொருளை ஈட்டும் வழிகளை வகுத்தல்/இயற்ற வேண்டும் 2. இயற்றிய வழிகளில் (தொழில்களை செய்து, அதற்கு தேவையானவற்றை செய்து) பொருள்களை ஈட்டவேண்டும் 3. ஈட்டிய பொருளை காப்பாற்ற வேண்டும் - தேவையில்லாம...

செய்வினை செய்வான் செயன்முறை

குறள் 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை  உள்ளறிவான் உள்ளம் கொளல். [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள் செய்வினை -  வினை முதல் வினை; முற் பிறப்பில் செய்த கருமம்; பில்லி சூனியம்; செய்யுந் தொழில்; cey-viṉai   n. id. +. 1. Work,undertaking; செய்யுந் தொழில் செய்வினை தூய்மை(குறள், 455). 2. Karma; முற்பிறப்பிற் செய்த கருமம் சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1). 3. (Gram.) Verbin active voice; வினைமுதல்வினை. (இலக். கொத்.67.) 4. Witchcraft, sorcery; பில்லிசூனியம் Colloq. செய்வான் - செய் வான் முறை  - muṟai   s. manners, morals, legality, ஒழுக்கம்; 2. order, regularity, கிரமம்; 3. good disposition, குணம்; 4. relationship by blood or marriage, உறவு; 5. repetition, number of times repeated, தரம்; 6. turns by which duty or work is done, வரிசை; 7. complaint, முறைப்பாடு; 8. a book, புத்த கம்; 9. antiquity, பழமை. செயல்முறை - ஒரு செயலை செய்ய வேண்டிய ஒழுங்கு அவ் வினை - அச்செயலை உள் - உள்ளிடம...

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து

குறள் 541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்  தேர்ந்துசெய் வஃதே முறை. [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் ஓர்ந்து - ஓர்-த்தல் - ōr-   11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12). கண்ணோட்டம் -  கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;); இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல். கண்ணோடாது - தாட்சிணியம் இல்லாமல் இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன...

தூங்காமை கல்வி துணிவுடைமை

குறள் 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்  நீங்கா நிலனான் பவர்க்கு [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறைமாட்சி - அரசியல்; அரசனின் நற்குண நற்செயல்கள். தூங்காமை - செயலில் சோர்வில்லாமை; செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை துணிவு - n. துணி¹-. 1. Confidence,boldness, daring, bravery; ஆண்மை. தூங்காமைகல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2.Strength of mind; மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669). 3. Presumption, temerity,audacity; துணிச்சல். 4. Ascertainment, certainty; நிச்சயம். 5. Determination, decision;நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா.214, 3). 6. Conclusion; முடிவு. 7. Opinionfounded on facts, knowledge or evidence;கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18). 8.Belief, trust; நம்பிக்கை. (யாழ...

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்

குறள் 631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்  அருவினையும் மாண்டது அமைச்சு. [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள் கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள். கருவியும் - ஒரு செயலை செய்வதற்கு தேவையான கருவிகள், துணை கருவிகள் - அறிவு, திறன் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். காலமும் - சரியான நேரத்தில் சரியான ஒரு செயலை ஆற்றும் திறன் செய்கை -  தொழில்; செயல்; மனஉடல்செய்கைகள்; வேலைப்பாடு; ஒழுக்கம்; உடன்படிக்கை; செயறகைப்பொருள்; காண்க:செய்கைச்சூத்திரம்; பில்லிசூனியம்; வேளாண்மை; அரசாங்கஅனுமதிபெற்றுப்புதிதாகப்பண்படுத்தியநிலம். செய்கையும் - ஒரு செயலை செய்யும் விதம்/வகை செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்யும் - தான் செய்கின்ற செயலின்  அரு - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற...