Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்

குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள்
கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்.

கருவியும் - ஒரு செயலை செய்வதற்கு தேவையான கருவிகள், துணை கருவிகள் - அறிவு, திறன்

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

காலமும் - சரியான நேரத்தில் சரியான ஒரு செயலை ஆற்றும் திறன்

செய்கை - தொழில்; செயல்; மனஉடல்செய்கைகள்; வேலைப்பாடு; ஒழுக்கம்; உடன்படிக்கை; செயறகைப்பொருள்; காண்க:செய்கைச்சூத்திரம்; பில்லிசூனியம்; வேளாண்மை; அரசாங்கஅனுமதிபெற்றுப்புதிதாகப்பண்படுத்தியநிலம்.

செய்கையும் - ஒரு செயலை செய்யும் விதம்/வகை

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செய்யும் - தான் செய்கின்ற செயலின் 

அரு - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

அருவினையும் - அருவினைகளை களைந்து; ஒரு செயலில் உள்ள ல் அச்செயல் உருவாக்கக்கூடிய உருவாக்கிய உபாயங்களையும், இடையூறுகளையும் நீக்கி அச்செயலை செய்ய தக்க

மாண்டது - மகிமைப்பட்டது
மாண்பு, v. noun. Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectability, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.
மாண்டார், appel. n. [pl.] The illustrious, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.

அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்.
அமைச்சு - அச்செயலை மகிமைப் பட செய்யவேண்டும் என்று எண்ணி அச்செயலை முடிக்கத்தக்கவன் அமைச்சன்

முழுப்பொருள்
இக்குறளில் ஒரு சிறந்த அமைச்சர் எவ்வாறு செயல்படுவான் என்பதற்கான இலக்கணத்தை கூறுகிறார் திருவள்ளுவர்.

சிறந்த ஒரு அமைச்சர் தான் செய்யும் செயலின், இயல்புகள், பயன்களை, அது விளைவிக்க கூடிய தீங்குகளை பற்றி நன்கு ஆராய்வார். இதை தெரிந்திதெளிதல் அதிகாரத்தில் ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்று கூறியிருப்பார். பின்பு தான் கொண்ட அறிவு, திறன், அனுபவம் கொண்டு அதனை சிறப்பாக முடிப்பதற்கான வழிகளை ஆராய்வார். செயலை செய்து முடிப்பதற்கான நிர்வாக திறமையை கொண்டவராவார். (எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு; எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.)

பின்பு அச்செயலை செய்வதற்கான சரியான நேரத்தை ஆராய்ந்து, அந்த நேரத்தில் செயல்படுத்துவார். செயப்படுத்தும் பொழுது வரும் இடையூறுகளை முன்பே ஆராய்ந்து இருப்பார். இடையூறுகள் வந்தாலும் அதனை கடந்து செல்ல தக்க வழிகளை ஆராய்ந்து செயல்படுத்துவார்.

அப்படி ஒரு செயலை எடுத்து மாண்புற (நீதி, மாட்சிமை, பெருமையோர்) செய்து முடிக்க தக்க மாண்பு கொண்டவர் அமைச்சர் ஆவார்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு
பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்” (கம்ப.மந்திரப்.8)

பரிமேலழகர் உரை
கருவியும்-வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும்-அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும்-அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். 

விளக்கம் 
(கருவிகள்-தானையும் பொருளும். காலம்-அது தொடங்கும் காலம். 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கருவியும் - வினைக்கு வேண்டுங் கருவிகளும்; காலமும் - அதற்கேற்ற காலமும், செய்கையும் - அதைச் செய்யும் வகையும்; செய்யும் அருவினையும் - அவ்வகையிற் செய்யும் அரிய வினையும்; மாண்டது அமைச்சு - வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.

'கருவிகள்' படையும் படைக்கலமும் பொருளும் துணையும். 'காலம்' தொடங்கி முடிக்குங் காலங்கள். 'செய்கை' நால்வகை ஆம்புடையும் (உபாயமும்), தொடங்கும் வகையும், கையாளும் விரகும் (தந்திரமும்), இடையூறு நீக்கும் வழியும் ஆம். பெரும் பயன்தரும் சிறந்த வினையென்பார் 'அருவினை' என்றார். 'அமைச்சு' சொல்லால் அஃறிணையாதலின் அத்திணை முடிபு கொண்டது. இதே பின்னுங் கொள்க.

"இவை யைந்தினையும் வட நூலார் மந்திரத்திற்கங்க மென்ப". என்று பரிமேலழகர் கூறுவதால், வடநூலுக்குத் தமிழ்நூல் முதனூ லானமைதெளிவாம். இக்குறளிற் கூறப்பட்டவை நான்கேயன்றி ஐந்தல்ல. செய்கையைத் தொடக்கமும் முடிவும் என இரண்டாக வட நூலார் பிரித்தது வீணான பிற்கால விரிவுபாடாகும். திருக்குறளை வட நூல் வழியாகக் காட்டல் வேண்டியே, ' செய்கை' எனவே, அது தொடங்கு முபாயமும் இடையூறு நீக்கி முடிபு போக்குமாறும் அடங்கின." என்று பரிமேலழகர் தம் நச்சுக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்க.

மணக்குடவர் உரை
செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். 

மு.வரதராசனார் உரை
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

Thirukkural - Management - Leadership
Valluvar has provided us with the four actions of an excellent minister. A minister is a leader. So, Kural 631 is presented in the Practice on Leadership. A leader has to have knowledge of the right tools, the right time to execute, the right techniques for execution and more importantly the right task to do, advices the Kural.

Call him minister who best Contrives
The means, the time, the mode and  the deed.

Though all the other needs are in right place, if the task to be done is irrelevant, doing that task will result in loss of all the other invaluable resources. Recollect the thought by Warren Bennis “Leaders are people who do the right thing; managers are people who do things right.” Doing 
the right thing is more important  than just doing things right.

There are many examples of exemplary leaders who were and are physically short. Though they were and are short in stature, they were and are tall in their thoughts. That is why they are called tall leaders. They were visionaries.  So, size does not matter for influential leadership.

No comments:

Post a Comment