குறள் 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]
பொருள்
ஓர்ந்து - ஓர்-த்தல் - ōr- 11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12).
கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;); இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல்.

கண்ணோடாது - தாட்சிணியம் இல்லாமல்
இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்
புரிந்து - புரிதல் - puri- 4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
தேர்ந்து - தேர்ந்துசெயல் - - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும்
செய்வஃதே - செய்வதே
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
முழுப்பொருள்
அரச நீதி, செங்கோன்மை என்பது யாது எனில் தன் கீழ் வாழும் மக்களின் ஒரு வழக்கில் (அல்லது மக்களுக்காக ஆற்றப்படும் செயலிலோ) அவ்வழக்கை (அல்லது செயலை) நன்கு ஆராய்ந்து, அதனை பற்றி தகவல்களை கூர்ந்து கேட்டு சேகரித்து நீதி நூல்கள் கூறும் அறத்தை பின்பற்றி யாரிடத்திலும் எந்த வித தாட்சிணியமும் (அதாவது ஒரு தலை பட்சமாக, சார்பு) இல்லாமல் ஒரு அரசனாக ஒரு தலைவனாக அச்செயலை தேர்ந்து அற நூல்கள் சொன்னபடி செய்வதே ஆகும். ஒரு வழக்கிற்கு நடுநிலைமையான தீர்ப்பு நீதியாகும். ஒரு செயலுக்கு நடுநிலைமையான அறத்திற்கு புறம்பல்லாத திட்டமும் செயலும் நீதியாகும். அதுவே அரச நீதியாகும்.
இங்கே செங்கோன்மையில் முதலாவதாக அரசருக்கு சொல்லபடும் தலைமைபண்பு நடுவுநிலைமை என்பது முக்கியமாக காணவேண்டியது. ஆதலால் தான் என்னவோ சிலப்பதிகாரத்தில் நன்கு ஆராயாமல் பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் கொடுத்த தவறான தீர்ப்பிற்கு கண்ணகி தலைநகர் மதுரையை எரித்தாள் என்பதை சிலப்பதிகாரத்தில் கண்டோம். “கோனுயரக் குடி உயரும்” என்பதும் சான்றோர் வாக்கே. செங்கோல் தாழ்ந்ததால், மானமுடைய அரசர் உயிர் துறப்பர் என்பதற்கு சிலப்பதிகாரப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனே சான்று.
குற்றங்குணங்களை ஆராய்தல், நடுவு நிலைமை, நம்மவர் என்கிற சார்பின்மை என்பவற்றைப்பற்றி அறத்துப்பாலின் கண்ணும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்று “நடுவு நிலைமை” அதிகாரத்துக் குறளாலும், “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று “மெய்யுணர்தல்” அதிகாரத்துக் குறளாலும், “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று “அறிவுடைமை” அதிகாரத்துக் குறளாலும் ஏற்கனவே இக்குறளின் மொத்தக்கருத்தையும் கூறியிருப்பதை நினைவு கூறலாம். மற்ற யாவரையும் விட, ஆள்வோர்க்கு செங்கோன்மை இன்றியமையாததாகும்.

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”முறைஎனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்” (கலி.133:13)
“கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்” (பழமொழி.93)
”எங்கண் ணனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ணே யானும் தகவில் கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க, ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு” (பழமொழி 322)
”நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக வொறுத்தி” (புறநா.10:3-4)
“ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்” (முதுமொழிக் 10:9)
பரிமேலழகர் உரை
[அஃதாவது , அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறலின் ' செங்கோல் ' எனப்பட்டது. வடநூலாரும் , ' தண்டம் ' என்றார் . அது சோர்வில்லாத அரசனால் செயற்பாலது ஆகலின் , இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது .]
ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
(நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும். யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.
மு.வ உரை
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
சாலமன் பாப்பையா உரை
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
Thirukkural - Management - Leadership
One of the responsibilities of a leader is to meet out proper justice to his followers. Delivering disinterested, means being impartial, justice is a challenge to a leader. A leader who is known for justice is fair and firm. A just leader has three actions to perform as presented in Kural 541.
Searching enquiry, an impartial eye, punishment as
prescribed are the ways of justice.
The three actions are: 1) He has to assess impartially the crime committed by someone, 2) He should not show any leniency after the assessment, and 3) He has to pronounce the decided punishment according to the seriousness of the crime committed.
No comments:
Post a Comment