குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
இறைமாட்சி - அரசியல்; அரசனின் நற்குண நற்செயல்கள்.
தூங்காமை - செயலில் சோர்வில்லாமை; செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை
கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை
துணிவு - n. துணி¹-. 1. Confidence,boldness, daring, bravery; ஆண்மை. தூங்காமைகல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2.Strength of mind; மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669). 3. Presumption, temerity,audacity; துணிச்சல். 4. Ascertainment, certainty; நிச்சயம். 5. Determination, decision;நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா.214, 3). 6. Conclusion; முடிவு. 7. Opinionfounded on facts, knowledge or evidence;கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18). 8.Belief, trust; நம்பிக்கை. (யாழ். அக.) 9. Branch,department; பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2,29). 10. Purpose, design, aim; நோக்கம். (W.)11. (Mus.) Time-measure; தாளம். தூக்குந் துணிவும் (மணி. 2, 19). 12. (Akap.) Theme in whichthe hero of a poem who meets the heroine forthe first time in a lonely place and doubts thatshe must be a celestial nymph, resolves hisdoubts and finally realises that she is but amortal; தனியிடை எதிர்ப்பட்ட தலைவன்
துணிவுடைமை - மனத்திட்பத்துடன் முடிவு எடுக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், எதைக் கண்டும் உறுதி குலைந்து விடாமல் துணிவுடன் நன்மை செய்கின்ற தெளிவு
இம் மூன்றும் - இம் மூன்று பண்புகளும், ஆற்றல்களும், குணங்களும் உடையவர்
நீங்கு - III. v. i. leave, depart, go off, wear off, பிரி; 2. come off, get out, be released from, விலகு; 3. be expiated, removed, கழி; 4. be turned away, be warded off, மாறு.
நீங்காமை, neg. v. n. that which is inseparable; 2. unchangeableness.
நீங்கா -நீங்காமை, பிரியாமை
நிலன் - நிலம்
ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன்; காலாள்; கணவன்; தொண்டன்; ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம்; அரசு; தொட்டால்வாடி; பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி..
ஆள்பவற்கு - அரசருக்கு, வீரருக்கு
முழுப்பொருள்
நிலத்தை / நாட்டை / மக்களை / நிர்வாகத்தை ஆளும் மன்னருக்கு மூன்று பண்புகள் எக்காலத்திலும் நீங்காமல் இருத்தல் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவை யாதெனின் பார்ப்போம்.
தூங்காமை - காலம் தாழ்த்தாது விழிப்புடன் செயல்களை செய்தல். அதாவது பருவத்தே பயிர் செய், சோம்பித் திரியேல் என்று ஒளவையார் சொன்னது போல். ஏன் என்றால் காலம் தாழ்த்தினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் அல்லது யாருக்கும் பயனில்லாமல் போகும் அதனால் நேரமும் வளமும் விரையம் தான் ஆகும். இதனை Bias for Action என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
கல்வி - நாட்டையோ / நிர்வாகத்தையோ ஆள பல தளங்களில் அறிவு வேண்டும் உதாரணமாக மக்கள் நலன், கல்வி, போர், படை, நிதி, நீதி, சூழல் (குறள் 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்), வெளிநாட்டு உறவு, வர்த்தகம், கலை, இலக்கியம் ஆகிய வற்றில் அடிப்படையைத் தாண்டி அவை மக்களின் நலனுக்கு எவ்வளவு முக்கியம். அவை வாழ்வில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுள்ளது, பிணைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து இருத்தல் வேண்டும். கலை இலக்கியம் மக்களை முன்னேற்ற மனதளவில் மேம்படுத்த எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திருத்தல் வேண்டும். ஆக நாட்டை ஆள பல கல்வி அறிவு முக்கியம்.
துணிவுடைமை - துணிவு என்றால் மனத்திட்பம். மனத்திட்பம் என்பது பல தளங்களில் வேண்டும். நாம் இச்செயலை முடித்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை மிக அவசியம். அதுவே துணிவு. அத்தன்னம்பிக்கை தெளிவில் இருந்து வரும். அத்தெளிவு நாம் ஒரு செயலினை செய்வதற்கு முன்பு செய்யும் ஆராய்ச்சியாலும், திறத்தாலும், அறிவாலும் வரும். இக்கட்டான மோசமான சூழ்நிலைகளில் (போர், இயற்கை பேரழிவு, வர்த்தக சரிவு, நோய்களின் அபாயம்) அதனை கண்டு அஞ்சாமல் இருக்கும் ஊக்கம் வேண்டும். இக்கட்டான நிலை மட்டும் அல்லாது நாட்டின் நலத்திற்கும் வளத்திற்கும் தேவையான முக்கிய முடிவுகளை அச்சமின்றி தீர்க்கமாக முடிவு எடுக்கும் திறன் ஒர் அரசனுக்கு தேவை.
இம்மூன்று பண்புகளும் ஆள்வோருக்கு எக்காலத்திலும் நீங்காமல் இருத்தல் வேண்டும்.
மேலும்: அஷோக் உரை
மேலும்: கோவை வணிகம்
மேலும்: பெட்டகம்
பரிமேலழகர் உரை
நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)
மணக்குடவர் உரை
மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நிலன் ஆள்பவற்கு - நாட்டையாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக்கருமங்களை விரைந்து செய்யுந்தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும்.
கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும் வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புக்களையும் நோக்கியது. ஏனையிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
மு.வ உரை
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை
சாலமன் பாப்பையா உரை
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
நன்றி: தினமணி
சோம்பல் கொள்ளக் கூடாது
காலம் தாழ்த்தக் கூடாது
தூங்கும் ஆசை இல்லாமல்
விழிப்பான செயல்கள் வேண்டுமே
கல்வி அறிவு வேண்டுமே
துணிந்து வாழ வேண்டுமே
நாட்டை ஆளும் மன்னருக்கு
மூன்றும் முக்கியத் தேவையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
நன்றி: Indian Finance Bazaar.com
காலம் தாழ்த்தாமல் வேகமாக முடிவெடுக்கும் குணம், துணிவு, முதலீட்டை பற்றிய தேர்ந்த கல்வி ஞானம் இந்த மூன்று பண்புகளும் அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டில் முதலீடு செய்யும் பொழுது இந்த குணங்கள் நீங்காமல் இருத்தல் வேண்டும்.
அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும், எவ்விதமான சங்கடங்கள் ஏற்படும் என்று உணர்ந்து தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல், விரைவாகத் தீர்மானங்களை இயற்றி அவற்றை செயல்படுத்தவும் வேண்டும். ஆகையால் ஓர் முதலீட்டாளாருக்கு விழிப்புணர்வு, விரைவாக முடிவுகள் எடுக்கும் திறமை இவை கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
Thirukkural - Management - Leadership
Leadership is more than and beyond these qualities. A leader is known for his actions. A leader should never delay in action. Kural 383 presents three actions of a leader.
A ruler should never lack these three:
Diligence, learning and boldness.
A leader must: 1) never delay in taking actions, 2) continue to possess the right knowledge to take actions, and 3) take decisions courageously. An inspiring leader is known by and for his decision- making skill. The ability to take right decisions at the right time makes a leader an everlasting ruler.
English Meaning - As I taught a kid - Rajesh
Not being lethargic or not procrastinating, education, courage are three things a king / leader should always posses.
1. Lethargy is the root for procrastination. If one is lethargic, one does things late. A work will not have desired impact if not started and completed on appropriate time.
2. Education is an important things in learning about various stuffs, planning and executing things. Only then a work can be done effectively. Only then one can prevent bad things
3. Courage is essential because if one fears then it leads to inaction which impacts the results. Courage comes form learning and researching about stuffs. I.e. courage comes from being prepared.
Questions that I ask to the kid
What are three things a king / leader should always posses?
No comments:
Post a Comment