Posts

Showing posts with the label 00 பாராட்டுகள்

திருக்குறள் இப்ப ஈஈஈஸி! 🤩 - யான் தமிழ்

Image
யான் தமிழ் youtube அன்பர்கள் மற்றும் (வாசிப்பது எப்படி?, பாலைநிலப் பயணம் போன்ற புத்தகங்கள் எழுதிய) எழுத்தாளர் செல்வேந்திரன் திருக்குறளுக்கான இவ்வலைத்தை பற்றி ஒரு பெரும் பதிவை youtube shorts இல் shorts instagram reels இல் ஒரு அறிமுக பாராட்டு காணொளிய பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களின் அன்பிற்கும் சொற்களும் மிக்க நன்றி. Youtube Link: https://www.youtube.com/shorts/xGW9QSl8VdM    Insta Link:  https://www.instagram.com/reel/DKMqM78TfPI/?igsh=Mmoxc2t2ZmJmZXkz   உண்மையை சொல்ல தன்னடக்கம் தடையாக இருக்க கூடாது என்று நூல்கள் சொல்கின்றன Azhagiya Theeye: Its enough its enough ....so romantic .so poetic .Mist, வெள்ளை சுரிதார், பனி சிற்பம், wow! Wow! So romantic! So divine! It is so awesome  Me: Its enough its enough.. திருக்குறள்.. கலைக் களஞ்சியம்.. wow! wow! It is so awesome.

New Project - English Meanings and questions

I have been updated individual Thirukkural posts with English meanings. It is not a planned project. For last couple of years, I have been discussing Thirukkurals (Aram and Porul) with a high school student for whom I give the meanings in English. I had documented some 240 Thirukkural meanings in English. I am slowly bringing them to this blog also. While I revise the Thirukkurals with the high school student I ask questions and follow up questions in order to solidify the understanding of the Thirukkural as much as possible. Hence, those questions are also documented. All the Thirukkurals would have English meanings by end of 2025.  Hopefully this section of English meanings and questions to ask would be helpful to students for deepening their understanding of a Thirukkural.  If you have any thoughts/suggestions that you would like to share with me, please do comment in the respective post.  

1 Million பார்வைகள்

இந்த வலைத்தளம் 1 மில்லியன் பார்வைகளை 6-Oct-2022 அன்று தொட்டது. Stats அப்படித்தான் சொல்கிறது. ஒரு விள்ளல் சந்தோஷம்.  நவம்பர் 2022 இல் 70580 பார்வைகள் பெற்று ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு மாதமும் 45000-53000 பார்வைகள் தான் வரும். பார்வையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் google தேடலில் மேலே வந்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். அன்புடன் ராஜேஷ்

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

Image
நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “ குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் ”  என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்). ஆனால், கடந்த 2.5 வருடங்களாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல். 1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “...

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

  குறள் 758 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை [பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை] பொருள் குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல். யானைப் - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம் போர் - சண்டை; மல்யுத்தம்; இகல்; செறிந்துபொருந்துகை; குவியல்; சாணி; கதிர்வைக்கோல்களின்படப்பு; சதயநாள்; மரப்பொந்து காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் - தன்மை / போன்று  கண்டற்றால் -   காணுவது போலாம் (அதனால் தமக்கு பயமும், வருத்தமுமில்லை) தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு. கைத்து - கையிலுள்ளபொருள்; பொன்; செல்வம்; வெறுப்பு. ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. உண்டாகச் - உண்டாதல் - விளைதல்; ...

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

குறள் 140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் உலகத்தோடு - உலகம் -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல. ஒழுகல் - ஒ ழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். ஒழுக்கம்  -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். பல - ஒன்றுக்குமேற்பட்டவை கற்றும் - கற்கை - படித்தல். கல்லார் - நெறிநூல்கள் கல்லாதவர் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலாதார் - இல்லாதவர் அறிவிலாதார் - அறிவு இல்லாதவர்கள்  முழுப்பொருள் உலகம் என்றால் உயர்ந்தோர் என்று பொருள் கொள்ள வேண்டும்.  "உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்" என்று  திருமுருகாற்றுப்படையிலும் வருகிறது.   ஆதலால் உயர்ந்தோருடன் ஒட்டி அவர்கள்கடைப்பிடிக்கின்ற ஒழுக்கத்தை பின்பற்றி ஒருவர் வாழவேண்டும். அப்படி உயர்ந்தோருடன் ஒட்டி வாழாம...

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

குறள் 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் நாம் - அச்சம்; தன்மைப்பன்மைப்பெயர்; தாங்கள் காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். கொண்டார் - உடையவர் நமக்கு - நம்முடைய, நமக்கு, நம்மை, etc. see நாம். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். செய்பவோ - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். கொள்ளாக் - கொள்ளார் -  koḷḷār   n. id. + id. 1.Envious persons; மனம் பொறாதவர். பொறாதாரைக்கொள்ளாரென்பவாகலின் (தொல். பொ 147, உரை).2. Enemies, foes; பகைவர். கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும் (தொல். பொ 67). கடை - முடிவு; இடம்; எல்லை; ...

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

குறள் 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் உவக்காண்-  uvkkāṇ   adv. At that time, அப் பொழுது. 2. There, in that place, அவ்விடம். (குறள்.) (p.) உவக்காணெங்காதலர்செல்வார். Lately when my husband left me--  ; உங்கே, உவ்விடம்; உங்கேபார் எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. காதலர் - காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன். செல்வார் - பிரிந்து சென்றுவிடுவார் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். இவக்காண் - இங்கே; இந்நேரமளவும் என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்ச...

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

குறள் 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில் [பொருட்பால், குடியியல், இரவச்சம்] பொருள் இரவச்சம் - மானந்தீரவரும்இரத்தலுக்குஅஞ்சுகை. தெண்ணீர் - தெளிந்தநீர் அடு - (வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர் புற்கை - ஒருவிதக்கஞ்சி; சோறு; பற்று அடுபுற்கை - சமைத்த உணவு ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம். தந்தது - கொடுத்தது உண்ணலின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்; உவ்விடம்; விசேடம். இனியது - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக இல் - வேறு இல்லை முழுப்பொருள் தான் சமைத்த கஞ்சி என்ற உணவானாலும் அதில் பெரும்பகுதி தெளிந்த நீராக இருந்தாலும் அது தன்னுடைய முயற்சியால் உழைப்பால் கிட்டியது. (...

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

குறள் 994 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு [பொருட்பால், குடியியல், பண்புடைமை] பொருள் நயனொடு - நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி . நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம் . புரிந்த - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன ...

சென்ற இடத்தால் செலவிடா

குறள் 422 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ  நன்றின்பால் உய்ப்ப தறிவு [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] பொருள் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். சென்ற - (மனம்) செல்லும் / பயணப்படும் / வேண்டுகின்ற / அலைகின்ற இடத்தால் - இடங்களில் எல்லாம் / செலவு - பணவழிவு; போக்கு ; ஓட்டம்; நடை; குதிரைநடை; பயணம்; படையெடுப்பு; ஐந்தொழில்களுள்கொள்ளும்நிலம்அறிந்துகொள்ளுகை; நீட்சியளவு; ஆலாபனம்; வழி; ஒழுக்கம்; தேவை; மொய்; ஆணை; சிறந்தகாலம்; பிரிவு; சாவு; காலங்கழிவு; எலிவளைமுதலியன; வீட்டிக்குவேண்டியஉணவுப்பண்டம் செலவிடாது - செல்ல விடாது - பயணிக்க விடாமல்; போக விடாமல் தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு ஒரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு. நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்ப...

வாய்மை எனப்படுவது யாதெனின்

குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  தீமை இலாத சொலல் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. எனப்படுவது - என்பது யாது ? எனின் - எதுவென்றால் யாது   - எது ஒன்றும் - சிறிதும் தீமை -  கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; தீங்கு, கேடு, முதலியன இலாத - இல்லாத சொலல் - சொல் முழுப்பொருள் பொய் சொல்லாத மெய் (வாய்மை, உண்மை) என்பது என்னவென்றால் எக்காலத்திலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) மனதளவிலோ உடல் அளவிலோ சிறிதும் தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுதல் என்பதாகும். உதாரணம்: வலைதளங்களில் இப்புராணக் கதையை படித்தேன். இது உண்மையான கதை என்று சொல்ல முடியாது. ஆனால் மைய கருத்து, இக்குறளை ஒத்தியே இருக்கிறது. ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார். அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது. சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான். ஓடி வந்த மனிதன...