Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வாய்மை எனப்படுவது யாதெனின்

குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.
எனப்படுவது - என்பது
யாது? எனின் - எதுவென்றால்
யாது  - எது
ஒன்றும் - சிறிதும்
தீமை கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; தீங்கு, கேடு, முதலியன
இலாத - இல்லாத
சொலல் - சொல்

முழுப்பொருள்
பொய் சொல்லாத மெய் (வாய்மை, உண்மை) என்பது என்னவென்றால் எக்காலத்திலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) மனதளவிலோ உடல் அளவிலோ சிறிதும் தீங்கு விளைவிக்காத சொற்களை பேசுதல் என்பதாகும்.

உதாரணம்:
வலைதளங்களில் இப்புராணக் கதையை படித்தேன். இது உண்மையான கதை என்று சொல்ல முடியாது. ஆனால் மைய கருத்து, இக்குறளை ஒத்தியே இருக்கிறது.

ஒரு கிராமத்தில் சன்னியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதுமே உண்மையே பேசுவார். அவர் வசித்த தெருவழியே ஒரு நாள் ஒரு பசுமாடு ஓடியது. சில வினாடிகளில் அந்த வழியே மனிதன் ஒடி வந்தான். ஓடி வந்த மனிதன்,ஐயா,"இந்த வழியே ஒரு பசுமாடு ஓடியதா" என்று கேட்டான். எப்போதும் உண்மையே பேசும் குரு, மாடு இந்த வழியே சென்றது என்பதைச் சுட்டிக் காட்டினார். மனிதனும் மாடு சென்ற வழியே ஓடினான். தொலைவில் மறைந்து கொண்டிருந்த மாட்டைக் கண்டதும் அந்த மனிதன் அதை வெட்டிவிட்டான். காரணம் அவன் ஒரு கசாப்புக்கடைக்காரன். வெட்டுண்டு கீழே விழந்த மாடு இறக்குமுன் கசாப்புக்கடைக்காரன் தப்பிச் சென்ற, தன்னை அவனிடமெ காட்டிக் கொடுத்த சன்யாசியை சபித்தது. பல வருடங்கள் சென்று சன்யாசி மரணமடைந்தான். ஊர் மக்கள் உண்மையே பேசியவர் இவர். இவர் ஆத்மா சொர்க்கத்தில் வாழும் என்று புகழ்ந்தனர். ஆனால், சன்யாசியின் ஆன்மாவை எடுத்துச் சென்றவர்கள் யமதூதுவர்கள்,இது சன்யாசிக்குக் கூடமிகவும் அதிர்ச்சியாக இருந்தது. யமன் முன் நீதி கோரி நின்ற சன்யாசி நான் என்ன பாபம் செய்தேன்? என்றார். நீர் ஒரு பொய் சொன்னீர். அதனால் பாபம் செய்து இங்கு வந்துள்ளீர். ஒரு பசுமாட்டைத் தேடி வந்தவனிடம் அது இருக்குமிடத்தை நீர் காட்டினீர் என்றான் யமதர்மன். நான் பார்த்த உண்மையைத்தானே சொன்னேன். அது எப்படி பொய்யாகும் என்று வாதிட்டார் சன்யாசி. பார்த்ததை எல்லாம் அப்படியே சொல்வது வாய்மை அல்லது உண்மையாகிவிடாது. பிறருக்குத் துன்பம் நேராமல் பேசப்படும் சொற்கள்தான் உண்மை அல்லது சத்யம் எனப்படும் என்றான் யமதர்மன். நீர் பேசிய வார்த்தையால் உயிருக்குத் தப்பிவந்த வாயில்லாத ஜந்து ஒன்று கொடுரமாக மரணமடைந்தது. அதன் சாபம் உம்மைப் பீடித்தது. மாடு எங்கே என்று கேட்டவனிடம் நீ யார்? எதற்காக மாட்டை விரட்டுகிறாய் என்று கேட்டிருந்தால் அது விவேகம். அதைத் தெரிந்து கொண்டு மாட்டுக்குத் தீமை வராமல் பதில் கூறியிருந்தால் அதுவே வாய்மை என்றான் யமதர்மன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது 'கூடா ஒழுக்கம்' , 'கள்ளாமை' களின் பின் வைக்கப்பட்டது.)

வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

Thirukkural - Management - Truthfulness
“Truthful,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 128 1), “is honest in what he or she says, never lying.” Truth does not need any support as it stands on its own. Telling lies is very difficult, as telling lies demands consistency in the person who tells them. Truth has just one form and that is always the same. Lie has many forms. Lie is personal  whereas truth is universal. In spite of the merits of telling the truth, we prefer falsehood to truth. Hence, Valluvar insisted on the need to be truthful. Kurals stresses the merits of  truthfulness with the help of five Kurals.

Truthfulness, according to Valluvar, is speaking words that do not have any malice towards others or do any harm to others. Truthfulness, as suggested in Kural 291, is any speech that does not have any negative impact.

Truthfulness may be described as utterance
Wholly devoid of ill.

Harmful words always hurt. There is a connection between falsehood and harmful words. A person who is truthful never uses harmful words. Speaking without hurting others is truthfulness.

English Meaning - As I taught a kid - Rajesh
The real meaning of Honesty/Integrity are the thoughts, words and deeds(Actions) that doesn't hurt anyone or any organism and negatively affect anything (including environment) in this world. 

Questions that I ask to the kid
What is Integrity?

2 comments: