Skip to main content

Posts

Showing posts from February, 2020

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் [அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை] பொருள் சீர்மை - சிறப்பு; புகழ்; கனம்; அளவிற்படுகை; வழவழப்பு; காண்க:சீமை; நன்னடை. சிறப்பொடு - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. நீங்கும் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல். பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். இல - இல்லை ; இல்லாதவற்றை நீர்மை - நீரின்தன்மை; தன்மை; சிறந்தகுணம்; எளிமை; அழகு; ஒளி; நிலைமை; ஒப்புரவு. உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங...

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

குறள் 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை] பொருள் அறம்   - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல். சொல்லும்  - சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும். நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு அன்மை  - aṉmai   s. (அல்) negation of a quality, அல்லாமை,  ; தீமை புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a ...

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

குறள் 175 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் [அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அஃகி -  அஃகுதல் -  குறைதல்; சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல் நுணுகுதல் -  நுட்பமாதல்; மெலிதல்; கூர்மையாதல் அகன்ற -  அகலுதல் -  நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல். என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. என்னாம...

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

குறள் 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] பொருள் அழுக்காறு  - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு ஆற்றின் -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள் இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஏதம் - துன்பம், குற்றம், கேடு படு -  கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை....

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

குறள் 155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து [அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை] பொருள் ஒறுத்தாரை - ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல். ஒன்றாக - ஒருபொருளாக;  (Certainly;surely; positively) நிச்சயமாக; ஒருமிக்க. ஒன்றுதல் - பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்; மனங்கலத்தல்; சம்மதித்தல்; உவமையாதல்; ஒருமுகப்படுதல். வைதல் - திட்டல், சபித்தல்; வஞ்சித்தல்; பழித்துரைத்தல் வையாரே - திட்டமாட்டார்கள், சபிக்கமாட்டார்கள் ; வைக்க மாட்டார்கள் வைப்பர் - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல். பொறுத்தாரைப் -...

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

குறள் 145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி [அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] பொருள் எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது. என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. இறத்தல் -  கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறப்பான்   - உயிர் நீப்பான் எய்தும் - நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும் எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்; அழித்தல்; கொல்லுதல்; பேராரவாரஞ்செய்தல் விளியாது - அழியாது நிற்கும் -  நிலைக்கும் பழி  - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன். முழுப்பொருள்  நாம் கேட்கலாம், அறம் கற்க திருக்குறளைக் கற்க வந்தேன்...

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

குறள் 135 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து போன்று - போல இல்லை - இருக்காது, தங்காது ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். இலான் - இல்லாதவன் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். உயர்வு - மிகுதியாதல்; உயர்ச...

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

குறள் 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து [அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எல்லார் -  தேவர். எல்லார்க்கும் -   எல்லோருக்கும் நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல். அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். உள்ளும் -  உள்ளு-தல் -  uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்...

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

குறள் 116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் [அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை] பொருள் கெடு -  கேடு; வறுமை; தவணை; எல்லை. வல்   - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு. யான் - தன்மையொருமைப்பெயர் என்பது - ṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )  அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு. நெஞ்சம் - நெஞ்சு; அன்பு. நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி. ஓரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறை அல்ல  - அது மட்டும் அல்ல செயின் - செய்தால் ...

உதவி வரைத்தன்று உதவி உதவி

குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] பொருள் உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம். வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல் ; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல். அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா? அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை செயப்பட்டார் - செய்தவர் (செயல் புரிந்தவர்) சால்பின் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. வரை -  மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்க...

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் அல்லவை - தீயவை; பயனின்மை. தேய - தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல். அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல். நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு. இனிய - இன்பம் தருவது சொலின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ...

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

குறள் 85 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் வித்தும் - வித்து-தல் - vittu-   5 v. tr. [K. bittu.] 1.To sow; விதைத்தல். வித்திய வுழவர் நெல்லொடுபெயரும் (ஐங்குறு. 3). 2. To spread, broadcast;பரப்புதல். அண்ண லிவனேல் விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே (சீவக. 1611). 3. Toimpress on one's mind; பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206). இடல் - இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை. வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the...

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு [அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை] பொருள் அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி உற்று -  uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).   அமர்ந்த  - அமர்-தல் - amar-   [T. amaru, K. amar.]4 v. intr. 1. To abide, remain, be seated;இருத்தல். (கந்தபு. கடவு 12.) 2. To become still ortranquil; அமைதியாதல். காற்றமர்ந்தது. 3. To rest,repose; இளைப்பாறுதல் 4. To settle, be deposited, as a sediment, become close and hard,as sand by rain; படிதல் 5. To rest upon, asa javelin on the person; பொருந்துதல் (பு. வெ 4, 5.) 6. To flourish, to be abundant; பொலிதல் (திவா.) 7. To be extinguished, as a lamp;அணைதல். விளக்கானது . . . காற்றினால் அமருமாபோலே(குருபரம். 305). 8. To be suitable; ஏற்றதாதல்.குலத்...

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து தீண்டல் - - தீண்டுதல்; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு; மாதவிடாய்; வயல். தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல். உடற்கு - உடல் -  உடம்பு; மெய்யெழுத்து பிறவி உயிர்நிலை சாதனம் பொன் பொருள் ஆடையின்கரையொழிந்தபகுதி; மாறுபாடு இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல...

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் [அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்] பொருள் பெண்ணின் - பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை. பெருந்தக்க - பெருந்தகை - மிக்கபெருமையுடையவர்; காண்க:பெருந்தன்மை; மிக்கஅழகு. யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம். உள - யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் கற்பு - மகளிர்கற்பு; களவுக்கூட்டத்துக்குப்பின்தலைவன்தலைவியைமுறைப்படிமணந்துஇல்லறம்புரியும்ஒழுக்கம்; கற்பின்அடையாளமானமுல்லை; கல்வி; தியானம்; ஆணை; கதி; உறுதி; புரிசை; மதிலுண்மேடை; நீதிநெறி; கற்பனை. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை. உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல் பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல் மு...

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் தென்புலத்தார் - தென்திசையிலுள்ளபிதிரர்; யமபடர். தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம் விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று. ஒக்கல் - உறவினர், சுற்றத்தார்; குடி, குடும்பம்; மூட்டுகை; இடைப்பக்கம்; ஒக்கலை தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை ஐம்புலம் - ஐந்துபொறிகளுக்குரியஉணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஐம்புலத்து - ஐம்புலத்தவர் - தென்புலத்தாராம்பிதிரர், தெய்வம், விருந்த...