குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
பொருள்
அஃகி - அஃகுதல் - குறைதல்; சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல்
நுணுகுதல் - நுட்பமாதல்; மெலிதல்; கூர்மையாதல்
அகன்ற - அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல்
அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
என்னாம் - என்ன - என்ன பயன் ?
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
வெஃகி
வெஃகல் - veḵkal n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.
வெறிய - வெறி - பயித்தியம்; மதம்; சினம்; கலக்கம்; ஒழுங்கு; வட்டம்; கள்; குடிமயக்கம்; விரைவு; மணம்; காண்க:வெறியாட்டு; வெறிப்பாட்டு; மூர்க்கத்தனம்; பேய்; தெய்வம்; ஆடு; பேதமை; அச்சம்; நோய்; ஆள்களின்றிவெறுமையாகை.
செயின் - செய்தால்
முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலில் அல்லது ஒரு களத்தில் மட்டும் நுட்பமாக பயின்று இருக்கலாம். அல்லது பல செயல்களில் அல்லது பல களங்களில் பயின்ற அகன்ற அறிவுப் பெற்று இருக்கலாம். அதேப்போல் நுட்பமான அறிவை பல தளங்களில் பெற்று நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருக்கலாம். ஆனால் இவ்வளவு கற்றும் பிறர் பொருள்மீது மயங்கி அதை விரும்பினால் (அல்லது களவாடினால்) அவ்வளவு கற்ற அக்கல்விக்கு என்ன பயன் ? இவர்கள் உயர்ந்தோரிடம் சூழ்ச்சி செய்து வஞ்சித்து களவு செய்வர் எளியோரிடம் கடிந்து களவு செய்வர்.
ஆதலால் களவென்பது எளியோரிடம் தான் இருக்குமென்பது தவறான கருத்தாகும். நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருந்தாலும் ஒருவன் களவு செய்யக்கூடும். படித்தவர்கள் களவு செய்வார்களா? செய்வார்கள். ஏனெனில் மனம் ஒரு பைத்தியம். உதாரணமாக மளிகை கடைகள் (சூப்பர்மார்கெட்/பலப்பொருள் அங்காடி) போன்ற இடங்களுக்குச் சென்றால் அங்குத் திருடும் படித்தவர்களை பணம் படைத்தவர்களை கண்காணிப்பு கேமரா' (CCTV Camera) க்களில் அதிகம் காணலாம்.
பி.கு:
அஃகுதல் என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்ற பொருள், அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற ஒரு வாக்கு உண்டு. படிக்கும் போது உணர்ந்து, ஆழ்ந்து படிப்பதுதான் நுண்ணிய அறிவை வளர்க்கும். ஒருபொருளைப் பற்றி நுணுகிப்படித்து தெரிந்து கொள்ளுவதில், மற்ற துறைகள் என்று கருதப்படும் பல திசைகளிலும் உள்ள பொருள்களும் தானாகப் புலப்படும்.
பரிமேலழகர் உரை
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).
மணக்குடவர் உரை
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
அஃகி - அஃகுதல் - குறைதல்; சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல்
நுணுகுதல் - நுட்பமாதல்; மெலிதல்; கூர்மையாதல்
அகன்ற - அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல்
அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
என்னாம் - என்ன - என்ன பயன் ?
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
வெஃகி
வெஃகல் - veḵkal n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.
செயின் - செய்தால்
முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலில் அல்லது ஒரு களத்தில் மட்டும் நுட்பமாக பயின்று இருக்கலாம். அல்லது பல செயல்களில் அல்லது பல களங்களில் பயின்ற அகன்ற அறிவுப் பெற்று இருக்கலாம். அதேப்போல் நுட்பமான அறிவை பல தளங்களில் பெற்று நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருக்கலாம். ஆனால் இவ்வளவு கற்றும் பிறர் பொருள்மீது மயங்கி அதை விரும்பினால் (அல்லது களவாடினால்) அவ்வளவு கற்ற அக்கல்விக்கு என்ன பயன் ? இவர்கள் உயர்ந்தோரிடம் சூழ்ச்சி செய்து வஞ்சித்து களவு செய்வர் எளியோரிடம் கடிந்து களவு செய்வர்.
ஆதலால் களவென்பது எளியோரிடம் தான் இருக்குமென்பது தவறான கருத்தாகும். நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருந்தாலும் ஒருவன் களவு செய்யக்கூடும். படித்தவர்கள் களவு செய்வார்களா? செய்வார்கள். ஏனெனில் மனம் ஒரு பைத்தியம். உதாரணமாக மளிகை கடைகள் (சூப்பர்மார்கெட்/பலப்பொருள் அங்காடி) போன்ற இடங்களுக்குச் சென்றால் அங்குத் திருடும் படித்தவர்களை பணம் படைத்தவர்களை கண்காணிப்பு கேமரா' (CCTV Camera) க்களில் அதிகம் காணலாம்.
பி.கு:
அஃகுதல் என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்ற பொருள், அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற ஒரு வாக்கு உண்டு. படிக்கும் போது உணர்ந்து, ஆழ்ந்து படிப்பதுதான் நுண்ணிய அறிவை வளர்க்கும். ஒருபொருளைப் பற்றி நுணுகிப்படித்து தெரிந்து கொள்ளுவதில், மற்ற துறைகள் என்று கருதப்படும் பல திசைகளிலும் உள்ள பொருள்களும் தானாகப் புலப்படும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).
மணக்குடவர் உரை
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.
English Meaning - As I taught a kid - Rajesh.
A person might have deep wisdom and broad knowledge from books and experience. But what is the use of it or how does it make sense if that wise knowledge person gets jealous of others wealth and indiscreetly indulges to covet his/her wealth. Jealousy or any act because of jealousy to covet others wealth is not a sensible act.
Questions that I ask to the kid
A knowledgably person is found to be jealous? Remark about it
No comments:
Post a Comment