குறள் 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
பரிமேலழகர் உரை
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.
மு.வரதராசனார் உரை
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
பொருள்
உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை
வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.
வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.
அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா?
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

செயப்பட்டார் - செய்தவர் (செயல் புரிந்தவர்)
சால்பின் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

முழுப்பொருள்
ஒருவர் மற்றோருவர்க்குச் செய்யப்பட்ட உதவியானது உதவியின் அளவுகளான காலம், பொருள், இதற்குமுன் செய்யப்பட்ட உதவி போன்றவற்றின் அளவை பொறுத்ததல்ல. உதவியின் அளவென்பது சிறப்பென்பது அவ்வுதவி யாருக்கு செய்யப்பட்டதோ அவரின் பண்பை / சான்றாண்மையை பொருத்ததாகும்.
இராமாயணத்தில் இராவண வதம் முடிந்தப்பின்பு அனுமன் சீதையை வணங்குகிறான். சீதை (தலைவி) அவனை/அனுமனை (தொண்டன்) தலையில் கைவைத்து வணங்குகிறாள். நீ செய்த உதவி நிலையானது விலையற்றது. அதற்கு பிரதிபுககாரமாக ஏதாவது செய்தால் அதற்கு (அப்பரிசுக்கு)விலையிருக்கும் நிலையிருக்காது. அதனால் தலையினால் தொழ தகும் என்று உணர்ந்து அனுமனை வணங்குகிறாள். ராமனும் அனுமனை தழுவுகிறான். இத்தனைக்கும் அனுமன் வானரங்களின் அரசன் அல்ல (சுக்ரீவன் தான் அரசன்). இது அனுமனின் பண்பிற்கு கொடுக்கப்படும் சிறப்பாகும்.
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்! 15
சேரன் ஒளவையார்க்கு செய்த உதவி இன்று பேசப்படுகிறது. ஏனெனில் அது ஒளவையார்க்கு செய்யப்பட்டது.
சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்புஆடு யான்கேட்கப் பொன்ஆடு
ஒன்று ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாம்அறிவார் தம்கொடையின் சீர்!
(ஒளவையார்)
கம்பராமாயாணப் பாடல் வேள்விப்படலப் பாடலொன்று, மகாபலி சக்ரவர்த்தி வாமனர்க்கு அவர் கேட்ட மூன்றடி நிலத்தை தாரை வார்த்து கொடுத்த மறு வினாடி, வாமனர் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வளர்ந்து நின்றதை இவ்வாறு வருணிக்கின்றது.
“கயந்தரு நறும்புனல் கையிற் றூண்டலும்
பயந்தவர்களும் இகழ்குறளன் பார்த்தெதிர்
வியந்தவர் வெருக்கொண விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே”
தக்காருக்குச் செய்யும் உதவிபற்றி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நன்னெறி நூலும் இதைக்கூறுகிறது.
“தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று
மிக்கார்க் குதவுவார் விழுமியோர் – எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பாரோ போய்”.
இதே கருத்தைதான் “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்றதும்.
இன்றைய காலகட்டங்களில் நாம் பல உண்மை சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். மகாத்மா காந்தி, வினோபா பாவே ஆகியோர் பூமி தானம் திட்டம் மற்றும் சுதந்திர போராட்டம் போன்ற பலவற்றுக்கு பலரிடம் உதவி கேட்டார். உதவி செய்தோர் இன்று அதனை பெருமையாக நினைக்கின்றனர். ஏனெனில் அது மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேவுக்கும் செய்யப்பட்டது. அத்தகைய சான்றோர்களுக்கு செய்த உதவியாகியதாலே அவ்வுதவி சிறப்பு பெறுகிறது. வேறு சராசரிகளுக்கு செய்திருந்தால் இன்று அது இவ்வளவு பேசப்பட்டு இருக்குமா?
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை

“ஞான முன்னிய நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே” (கம்ப.ஆற்றுப்.5)
“பெருந்தவர் கைப்பெய் பிச்சையின் பயனும்...
பெருகிய தென்னப் பெருவளம் சுரப்பு” (மணி.22:229-32)
“வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே” (கம்ப.வேள்வி.35)
பரிமேலழகர் உரை
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.
மு.வரதராசனார் உரை
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உதவியின் சிறப்பு, பெறுபவரின் மனநிறைவில் உள்ளது.
Thirukkural - Management - Helping Others
A help rendered should not be measured by the size or the quantity of help. A help is to be measured by the quality or magnanimity of the person who provides that help, helpfully suggests Kural 105.
Not according to the aid but its giver Is its recompense determined. Therefore, value of a help is not in the help rendered, but it is in the intention of the person
who renders that help. Do not just judge the help provided by someone. Instead, assess whom, when, and how the help is provided.
No comments:
Post a Comment