குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]
பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி
உற்று - uṟṟu part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10). uṟu adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).

அமர்ந்த - அமர்-தல் - amar- [T. amaru, K. amar.]4 v. intr. 1. To abide, remain, be seated;இருத்தல். (கந்தபு. கடவு 12.) 2. To become still ortranquil; அமைதியாதல். காற்றமர்ந்தது. 3. To rest,repose; இளைப்பாறுதல் 4. To settle, be deposited, as a sediment, become close and hard,as sand by rain; படிதல் 5. To rest upon, asa javelin on the person; பொருந்துதல் (பு. வெ 4, 5.) 6. To flourish, to be abundant; பொலிதல் (திவா.) 7. To be extinguished, as a lamp;அணைதல். விளக்கானது . . . காற்றினால் அமருமாபோலே(குருபரம். 305). 8. To be suitable; ஏற்றதாதல்.குலத்துக் கமர்ந்த தொழில் 9. To be engaged, settled,as a house; திட்டமாதல். 10. To becomeestablished, as in a work; அமைதல் வேலையில்அமர்ந்தான்.--v.tr. 1. To wish, desire; விரும்புதல் (குறள், 92.) 2. To resemble; ஒப்பாதல் (விதான.குணா. 38.) 3. To do, perform; செய்தல் நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனாட்--. 60). 4.To get close to; நெருங்குதல் அமரப் புல்லும் (திருக்கோ. 372).
வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.
என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்
வையகத்து - வையகம் - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநா
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்
எய்தும் - நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
முழுப்பொருள்
இந்த வையகத்தில் வாழ்ந்து இன்பத்தை அடைந்தவர்கள் அதன் பயனாக அடையும் பெருமை / செல்வம் / வீடுபேறு என்பது யாது ?
வாழும் இவ்வாழ்விலே இந்த உலகத்திலேயே இன்பத்தையும் சொர்க்கத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இந்த உலகத்திலேயே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடிந்தவர்க்கு எந்த உலகத்திலும் சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடியும். இங்கே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடியாதவர் வேறு எங்கும் அமைத்துக்கொள்ள முடியாது.
இல்லறத்தில் தான், மனைவி/கணவன், மக்கள், உறவினர்கள், சுற்றத்தார்கள், விருந்தினர்கள், ஊர் மக்கள், பொதுவாக மனிதர்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்தி பொலிவடைவதை (அல்லது அன்பு செலுத்த விரும்புவதை) வாழ்வில் நெறியாக வழக்கமாக கொண்டவர் இன்பம் எய்துவார். அவர் வையகத்தில் வாழ்ந்த பயனாக வீடுபேறு அடைவார். இல்லையென்றால் அடையமாட்டார்.
ஓரிரு நாள் அன்பு செலுத்துவது அல்ல வாழ்வின் நெறியாக என்பதை தெளிவாக வழக்கு என்னும் சொல் மூலம் அடிக்கோடிடுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.).
மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.
வரதராசனார் உரை
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்ப வாழ்வென்பது அன்பினால் வருவது.
No comments:
Post a Comment