குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
பொருள்
அல்லவை - தீயவை; பயனின்மை.
தேய - தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல்.
நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.
நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.
இனிய - இன்பம் தருவது
சொலின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
முழுப்பொருள்
அறத்தை (தருமம், புண்ணியம்) பெருக்கக்கூடிய நல்லனவற்றை (நல்ல சொற்கள், எண்ணங்கள், செயல்கள் என்று) மட்டும் பயக்கவற்றை பிறரிடம் நாடிச்சென்று இன்பம் பயக்கும்வண்ணம் இனிய நற்சொற்களை சொல்வார் என்றால் அவரிடம் உள்ள தீயவையும் பயனற்றவையும் பாவங்களையும் குறைந்துக்கொண்டே இருக்கும். அறத்தைப் பேருக்கும் இனியவற்றை நாடிச்சென்றுப் பேசினால் துன்பமெல்லாம் குறையும். அது நம்மை செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கும். அமைதி பிறக்கும் மனம்மகிழும். இதையே இன்று Positivity என்று எல்லோரும் கூறுகின்றனர்.
நல்லவற்றை சொன்னால் மட்டும் போதாது. அதனை இனிய சொற்களில் சொல்வதும் அவசியம் ஏனெனில் நல்லவையானாலும் கடும் சொற்களால் சொன்னால் அது அறமாகாது.
பாவம் தேய்ந்தால் அறம் நிற்கும். மறுமையில் பயனடைவாய்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.
மு.வரதராசனார் உரை
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லதைச் சொன்னால் நல்லது நடக்கும்.
Thirukkural - Management - Communication - Pleasant Speech
If a person researches and searches for pleasing and empowering words and uses them in his conversations with others, all the negative feelings and painful memories will diminish and disappear. Because of this practice, he will have increased virtues, promises Kural 96.
Sweet words well-Chosen diminish ill
And increase virtue.
Choose your words wisely and intelligently, and express them with affection so that that choice will make others happy and make you prosperous as well. Therefore, the benefits are twofold.
No comments:
Post a Comment