Wednesday, February 26, 2020

உதவி வரைத்தன்று உதவி உதவி

குறள் 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை

வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.

வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா?

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை

உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை

செயப்பட்டார் - செய்தவர் (செயல் புரிந்தவர்)

சால்பின் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.

வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா?

முழுப்பொருள்
ஒருவர் மற்றோருவர்க்குச் செய்யப்பட்ட உதவியானது உதவியின் அளவுகளான காலம், பொருள், இதற்குமுன் செய்யப்பட்ட உதவி போன்றவற்றின் அளவை பொறுத்ததல்ல. உதவியின் அளவென்பது சிறப்பென்பது அவ்வுதவி யாருக்கு செய்யப்பட்டதோ அவரின் பண்பை / சான்றாண்மையை பொருத்ததாகும்.

இராமாயணத்தில் இராவண வதம் முடிந்தப்பின்பு அனுமன் சீதையை வணங்குகிறான். சீதை (தலைவி) அவனை/அனுமனை (தொண்டன்) தலையில் கைவைத்து வணங்குகிறாள். நீ செய்த உதவி நிலையானது விலையற்றது. அதற்கு பிரதிபுககாரமாக ஏதாவது செய்தால் அதற்கு  (அப்பரிசுக்கு)விலையிருக்கும் நிலையிருக்காது.  அதனால் தலையினால்  தொழ தகும்  என்று உணர்ந்து அனுமனை வணங்குகிறாள். ராமனும் அனுமனை தழுவுகிறான். இத்தனைக்கும் அனுமன் வானரங்களின் அரசன் அல்ல (சுக்ரீவன் தான் அரசன்). இது அனுமனின் பண்பிற்கு கொடுக்கப்படும் சிறப்பாகும்.

உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்! 15

சேரன் ஒளவையார்க்கு செய்த உதவி இன்று பேசப்படுகிறது. ஏனெனில் அது ஒளவையார்க்கு செய்யப்பட்டது.
சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்புஆடு யான்கேட்கப் பொன்ஆடு
ஒன்று ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாம்அறிவார் தம்கொடையின் சீர்!
 (ஒளவையார்)

கம்பராமாயாணப் பாடல் வேள்விப்படலப் பாடலொன்று, மகாபலி சக்ரவர்த்தி வாமனர்க்கு அவர் கேட்ட மூன்றடி நிலத்தை தாரை வார்த்து கொடுத்த மறு வினாடி, வாமனர் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வளர்ந்து நின்றதை இவ்வாறு வருணிக்கின்றது.
“கயந்தரு நறும்புனல் கையிற் றூண்டலும் 
பயந்தவர்களும் இகழ்குறளன் பார்த்தெதிர் 
வியந்தவர் வெருக்கொண விசும்பின் ஓங்கினான் 
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே”

தக்காருக்குச் செய்யும் உதவிபற்றி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நன்னெறி நூலும் இதைக்கூறுகிறது.
“தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று 
மிக்கார்க் குதவுவார் விழுமியோர் – எக்காலும் 
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி 
புல்லுக் கிறைப்பாரோ போய்”. 

இதே கருத்தைதான் “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்றதும்.

இன்றைய காலகட்டங்களில் நாம் பல உண்மை சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். மகாத்மா காந்தி, வினோபா பாவே ஆகியோர் பூமி தானம் திட்டம் மற்றும் சுதந்திர போராட்டம் போன்ற பலவற்றுக்கு பலரிடம் உதவி கேட்டார். உதவி செய்தோர் இன்று அதனை பெருமையாக நினைக்கின்றனர். ஏனெனில் அது மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேவுக்கும் செய்யப்பட்டது. அத்தகைய சான்றோர்களுக்கு செய்த உதவியாகியதாலே அவ்வுதவி சிறப்பு பெறுகிறது. வேறு சராசரிகளுக்கு செய்திருந்தால் இன்று அது இவ்வளவு பேசப்பட்டு இருக்குமா?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஞான முன்னிய நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே” (கம்ப.ஆற்றுப்.5)

“பெருந்தவர் கைப்பெய் பிச்சையின் பயனும்...
பெருகிய தென்னப் பெருவளம் சுரப்பு” (மணி.22:229-32)

“வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே” (கம்ப.வேள்வி.35)


பரிமேலழகர் உரை
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

மு.வரதராசனார் உரை
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உதவியின் சிறப்பு, பெறுபவரின் மனநிறைவில் உள்ளது.

Thirukkural - Management - Helping Others
A help rendered should not be measured by the size or the quantity of help. A help is to be measured by the quality or magnanimity of the person who provides that help, helpfully suggests Kural 105.

Not according to the aid but its giver Is its recompense determined. Therefore, value of a help is not in the help rendered, but it is in the intention of the person 
who renders that help. Do not just judge the help provided by someone. Instead, assess whom, when, and how the help is provided.

Tuesday, February 25, 2020

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
அல்லவை - தீயவை; பயனின்மை.

தேய - தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல்.

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

இனிய - இன்பம் தருவது

சொலின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
அறத்தை (தருமம், புண்ணியம்) பெருக்கக்கூடிய நல்லனவற்றை (நல்ல சொற்கள், எண்ணங்கள், செயல்கள் என்று) மட்டும் பயக்கவற்றை பிறரிடம் நாடிச்சென்று இன்பம் பயக்கும்வண்ணம் இனிய நற்சொற்களை சொல்வார் என்றால் அவரிடம் உள்ள தீயவையும் பயனற்றவையும் பாவங்களையும் குறைந்துக்கொண்டே இருக்கும். அறத்தைப் பேருக்கும் இனியவற்றை நாடிச்சென்றுப் பேசினால் துன்பமெல்லாம் குறையும். அது நம்மை செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கும். அமைதி பிறக்கும் மனம்மகிழும். இதையே இன்று Positivity என்று எல்லோரும் கூறுகின்றனர்.

நல்லவற்றை சொன்னால் மட்டும் போதாது. அதனை இனிய சொற்களில் சொல்வதும் அவசியம் ஏனெனில் நல்லவையானாலும் கடும் சொற்களால் சொன்னால் அது அறமாகாது.

பாவம் தேய்ந்தால் அறம் நிற்கும். மறுமையில் பயனடைவாய்.

மேலும்: ஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லதைச் சொன்னால் நல்லது நடக்கும்.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
If  a person researches and searches for pleasing and empowering words and uses them in his conversations with others, all the negative feelings and painful memories will diminish and disappear. Because of this practice, he will have increased  virtues, promises Kural 96.

Sweet words well-Chosen diminish ill 
And increase virtue.

Choose your words wisely and intelligently, and express them with affection so that that choice will make others happy and make you prosperous as well. Therefore, the benefits are twofold.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
வித்தும் - வித்து-தல் - vittu-   5 v. tr. [K. bittu.] 1.To sow; விதைத்தல். வித்திய வுழவர் நெல்லொடுபெயரும் (ஐங்குறு. 3). 2. To spread, broadcast;பரப்புதல். அண்ண லிவனேல் விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே (சீவக. 1611). 3. Toimpress on one's mind; பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206).

இடல் - இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

கொல்லோ -  கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

மிச்சில் - எஞ்சியபொருள்; எச்சில்; கரி.

மிசை - உணவு; சோறு; உயர்ச்சி; மேலிடம்; மேடு; வானம்; முன்னிடம்; ஏழனுருபு.

மிசைவான் -  மிசைஞர் - உண்பவர்.


புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

முழுப்பொருள்
நம் வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களுக்கு முதலில் வயிராற உணவளித்து எவ்வித வருத்தமும் வராமல் போற்றி உபசரித்து பின்பு மிச்சம் இருப்பதை நாம் உண்ணுவதே விருந்தோம்பல் ஆகும். அப்படி ஒருவர் விருந்தோம்பல் செய்து பழகுவார் என்றால் அவருடைய வயலில் (வீட்டில்) விதைக்க வேண்டுமா என்ன? விதைக்காமலையே செடிகள் வளரும். வளம் பெருகும். அதாவது அவர் வேறு செயல்களில் செய்து புண்ணியத்தை ஈட்டவேண்டும் என்றில்லை. விருந்தோம்பலை சரியாக செய்கிறமைக்காக அவருக்கு பலன் தானாக கிட்டும்/விளையும். 

ஒருவர் வீட்டிற்கு வருகிறார் என்றால் முதலில் எல்லாவற்றையும் தின்றுவிட்டு மீதம் இருப்பதை (அது வருபவர்களுக்கு தேவையான அளவு இருப்பினும்) வருபவர்களுக்கு கொடுத்தால் அது விருந்தோம்பல் ஆகாது. அதுமட்டுமில்லாது திருவள்ளுவர் மிச்சம் இருப்பதை உண்ணவேண்டும் என்கிறார். குறைவாக இருந்தால் புதிதாய் சமைக்கக்கூடாது என்று சொல்லவில்லையென்றாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் வீட்டில் உள்ளோருக்கு உணவு பற்றாக்குறை ஆகிவிட்டதே என்று விருந்தினர் மனம் வருந்த நேரும். அந்த வருத்தத்தையும் அவர்களுக்கு கொடுக்க கூடாது. மிச்சத்தை உண்டு மகிழ வேண்டும். ஒரு வேலை குறைவாக சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது அல்லவா.

ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்றான மணிமேகலையில் (13:113-4)  ‘யாவரும் வருகவென்றிசைத்துடன் ஊட்டி, உண்டெழு மிச்சில் உண்டு’ என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து, விருந்து புறத்திருக்க தான் உண்ணா நெறியோடு, அவர்களை உண்ணுவித்து, பின்பு தான் உண்ணுதலை சிறப்பித்திருப்பதைக்காணலாம். சங்க இலக்கியங்களான குறுந்தொகை, குறிஞ்சிப் பாட்டு இவற்றிலும், இக்குறள் கருத்தை அடியொட்டிய வரிகள் இருப்பதைக் காணலாம்

மேலும் 
விச்சதின்றியே விளைவு செய்குவாய்
விண்ணு மண்ணக முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனையுன் கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்
குரியனாக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரமாயினுங் கொலார்
நானும் அங்கனே யுடைய நாதனே
–திருச்சதகம், திருவாசகம், பாடல் 96

 பொருள்:-
விதை இல்லாமலே செடிகொடிகளை வளரச் செய்பவன் நீ; விண்ணுலகம், மண்ணுலகம் ஆகியவற்றை நிலைபெறச் செய்து, உரிய காலத்தில் அவைகளை, அழிப்பவனும் நீயே; புலையனைப் போன்ற என்னையும் உன் கோவிலின் முன்னே வைத்துப் பித்தனாக்கினாய் —அடியார்களுக்கு உரியவானாக ஆக்கிவைத்தாய்.  உலகத்தார் தாமே வளர்த்த மாமரங்கள் நச்சுத்தனமை எய்தினாலும் கொல்ல மாட்டார்கள்— என்னை அடிமையாக உடைய தலைவனே! யானும் அத்தகையேன் ஆவேன்.

“மரம் சா மருந்தும் கொள்ளார்”– என்று தமிழ் நூல்கள் பகரும். மருந்தே வேண்டினும் அந்த மரம் சாகும் அளவுக்கு அதன் பட்டைகளைத் தோலுரிக்க மாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“.... ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வாந்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொ டுண்டலும் புரைவதென் றாங்கு
அறம்புணை யாகத் தேற்றி” (குறிஞ்சிப் 204-8)

“உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில்’ (குறுந் 233.4-5)

“யாவரும் வருகவென் றிசைத்துடன் ஊட்டி
உண்டெழு மிச்சில் உண்டு” (மணி 13:113-4)


பரிமேலழகர் உரை
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.

மு.வரதராசனார் உரை
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சலிக்காமல் உபசரிப்பவன் நிலம், விதைக்காமலே விளையும்.

Monday, February 24, 2020

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

உற்று -  uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).  


அமர்ந்த  - அமர்-தல் - amar-   [T. amaru, K. amar.]4 v. intr. 1. To abide, remain, be seated;இருத்தல். (கந்தபு. கடவு 12.) 2. To become still ortranquil; அமைதியாதல். காற்றமர்ந்தது. 3. To rest,repose; இளைப்பாறுதல் 4. To settle, be deposited, as a sediment, become close and hard,as sand by rain; படிதல் 5. To rest upon, asa javelin on the person; பொருந்துதல் (பு. வெ 4, 5.) 6. To flourish, to be abundant; பொலிதல் (திவா.) 7. To be extinguished, as a lamp;அணைதல். விளக்கானது . . . காற்றினால் அமருமாபோலே(குருபரம். 305). 8. To be suitable; ஏற்றதாதல்.குலத்துக் கமர்ந்த தொழில் 9. To be engaged, settled,as a house; திட்டமாதல். 10. To becomeestablished, as in a work; அமைதல் வேலையில்அமர்ந்தான்.--v.tr. 1. To wish, desire; விரும்புதல் (குறள், 92.) 2. To resemble; ஒப்பாதல் (விதான.குணா. 38.) 3. To do, perform; செய்தல் நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனாட்--. 60). 4.To get close to; நெருங்குதல் அமரப் புல்லும் (திருக்கோ. 372).

வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்

வையகத்து - வையகம் - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநா

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

உற்றது - நேர்ந்தது,  நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்

எய்தும் -  நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
இந்த வையகத்தில் வாழ்ந்து இன்பத்தை அடைந்தவர்கள் அதன் பயனாக அடையும் பெருமை / செல்வம் / வீடுபேறு என்பது யாது ? 

வாழும் இவ்வாழ்விலே இந்த உலகத்திலேயே இன்பத்தையும் சொர்க்கத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இந்த உலகத்திலேயே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடிந்தவர்க்கு எந்த உலகத்திலும் சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடியும். இங்கே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடியாதவர் வேறு எங்கும் அமைத்துக்கொள்ள முடியாது. 

இல்லறத்தில் தான், மனைவி/கணவன், மக்கள், உறவினர்கள், சுற்றத்தார்கள், விருந்தினர்கள், ஊர் மக்கள், பொதுவாக மனிதர்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்தி பொலிவடைவதை (அல்லது அன்பு செலுத்த விரும்புவதை) வாழ்வில் நெறியாக வழக்கமாக கொண்டவர் இன்பம் எய்துவார். அவர் வையகத்தில் வாழ்ந்த பயனாக வீடுபேறு அடைவார். இல்லையென்றால் அடையமாட்டார்.

ஓரிரு நாள் அன்பு செலுத்துவது அல்ல வாழ்வின் நெறியாக என்பதை தெளிவாக வழக்கு என்னும் சொல் மூலம் அடிக்கோடிடுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

வரதராசனார் உரை
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்ப வாழ்வென்பது அன்பினால் வருவது.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து

தீண்டல் - - தீண்டுதல்; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு; மாதவிடாய்; வயல்.

தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல்.

உடற்கு - உடல் -  உடம்பு; மெய்யெழுத்து பிறவி உயிர்நிலை சாதனம் பொன் பொருள் ஆடையின்கரையொழிந்தபகுதி; மாறுபாடு

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

செவிக்கு - செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

முழுப்பொருள் 
பருவம் அடைந்தபின்பு (அல்லது திருமணம் முடிந்தபின்பு) ஆணும் பெண்ணும் உடலை தழுவிக்கொள்வது, தீண்டிக்கொள்வது உடலினால் காமத்தினால் ஏற்படக்கூடிய ஒன்று. சிறிது காலம் இருக்கும். பிறகு இருக்காது. 

தன்னுடைய குழந்தைகளை ஆரத்தழுவுதல் இயல்பாய் மனதில் இருந்து நடக்கக்கூடிய ஒன்றாகும். அது எல்லாக்காலங்களிலும் இருக்கும். அது நம் உடலுக்கு தருவது இன்பமாகும். அதே குழந்தைகள் வளரும் பொழுது ஓசைகளையும் சொற்களையும் கேட்பதும் வளர்ந்தபின்பு செறிவான பேச்சுக்களாக கேட்பதும் செவிகளுக்கு இன்பத்தை தரும்.

'அள்ளி அணத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே’, ‘உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கிவளருதடி’, ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி’ என்றெல்லாம் பாரதியார், உள்ளத்தில் பொங்கிவரக்கூடிய தாயன்பிலே (வாத்ஸல்யம்), கண்ணனை, கண்ணம்மாவாக பாடியிருப்பார். உன்மத்தம் என்பது சாதாரண வழக்கிலே கூறுவதுபோல ஒரு கிறக்கதையும், மயக்கத்தையும் கொடுப்பது. தன்படைப்பைத் தானே உச்சிமுகந்துகொள்ளும் ஒரு அனுபவம். இது பெற்றோர்களுக்கே உண்டான ஒத்துக்கொள்ளக்கூடிய, தற்பெருமை என்று சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சி நிலை! தத்தித் தளர்நடையிட்டு வரும் குழந்தைகளை, வாரியணைத்து நெஞ்சாரத் தழுவுதல், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கும், பெற்றோர்களுக்கு பாச நெகிழ்வைத்தரும்.

ஒப்புமை
”அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது” (கலி 80:14-5)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.).

மணக்குடவர் உரை
தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.

மு.வரதராசனார் உரை
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
குழந்தைகள் ஓர் இன்பப் பொதி.

Sunday, February 23, 2020

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொருள்
பெண்ணின் - பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெருந்தக்க - பெருந்தகை - மிக்கபெருமையுடையவர்; காண்க:பெருந்தன்மை; மிக்கஅழகு.

யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

உள - யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

கற்பு - மகளிர்கற்பு; களவுக்கூட்டத்துக்குப்பின்தலைவன்தலைவியைமுறைப்படிமணந்துஇல்லறம்புரியும்ஒழுக்கம்; கற்பின்அடையாளமானமுல்லை; கல்வி; தியானம்; ஆணை; கதி; உறுதி; புரிசை; மதிலுண்மேடை; நீதிநெறி; கற்பனை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்

முழுப்பொருள்
ஒரு பெண்ணுக்கு எது மிகுந்த பெருமை சேர்க்கும் ? கற்பு எனப்படும் நீதிநெறி, மன உறுதி ஒரு பெண்ணிடம் இருந்தால் அவளை திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்யப்போகும் தலைவனுக்கு அதைத் தாண்டி வேறு ஏதும் தேவையில்லை.

எனக்கு தோன்றுவது என்னவென்றால் பல குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் இடையே சிக்கல்கள் வருவது இருவருக்கும் இடையே நேர்மை இல்லாமல் இருப்பதால் தான்.  அந்த நேர்மையில்லையெனில் மற்றவர்களை தவறாக சித்தரித்து சிக்கல்களை உண்டாக்குவார்கள். வெறுப்பு, பொறாமை, ஆசை, மனதழுக்கு, கீழ்மையான சொற்கள் போன்ற தீயொழுக்கங்கள் வந்து சேரும். இறுதியில் உறவு முறியும் அல்லது வருந்திக்கொண்டே மன அமைதி இழந்தே வாழவேண்டியது இருக்கும். நேர்மை இருந்தால் இந்த பிரச்சனையெல்லாம் வராது. ஆதலால் நேர்மையிருந்தால் வேறு என்ன வேண்டும்?  நேர்மையிருந்தால் மற்ற செல்வங்கள் எல்லாம் தானாக வரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

சாலமன் பாப்பையா உரை
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தூயமனம் கொண்ட பெண்ணினும் சிறந்தது ஏதுமில்லை.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
தென்புலத்தார் - தென்திசையிலுள்ளபிதிரர்; யமபடர்.

தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஒக்கல் - உறவினர், சுற்றத்தார்; குடி, குடும்பம்; மூட்டுகை; இடைப்பக்கம்; ஒக்கலை

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

ஐம்புலம் - ஐந்துபொறிகளுக்குரியஉணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

ஐம்புலத்து - ஐம்புலத்தவர் - தென்புலத்தாராம்பிதிரர், தெய்வம், விருந்து, சுற்றத்தவர், தான்.

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு

முழுப்பொருள்
1) தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர்கள், 2) தெய்வங்கள், 3) விருந்தினர்கள், 4) உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள் 5) தான் என்னும் தன்னை ஆகிய ஐவரையும் பேணி வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி வாழ்வதே சிறப்பாகும். அதுவே இல்வாழ்க்கையின் அறமாகும் (கடமையாகும்).

ஒருவன் தன்னை அறவழிகளில் நிறுத்திக்கொள்ளாவிடில், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அறவழிக் கடமைகளை ஆற்றமுடியாது என்பதால், “தான்” என்று இல்லத்தோரையும் சேர்த்து சொல்லப்பட்டது.

தன்னை மட்டும் பேணிக்கொள்ளாமல் தன்னை சார்ந்துள்ள அனைவரையும்  தெய்வங்களையும் மூதாதையர்களையும் பேணி கடமையை ஆற்றுவதால் தான் இல்வாழ்க்கை இல்லறம் என்னும் அறமாக மாறும்.

சிலப்பதிகாரம் 14:11, உரை,  இவ்வாறு கூறுகிறது ‘இல்லறமென்பது கற்புடைய மனைவியோடு, இல்லின் கண் இருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னை ஒழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலம் காத்தல் முதலியனவும், அருளும் அன்பும் உடையன ஆதலும், பிறவும்’

மேலும்: அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 


ஒப்புமை
”அரசுகொள் கடன்க ளாற்றி மிகுதிகொண்ட டறங்கள் பேணிப்
பரவரும் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள்ள பதிகள் எங்கும்” (பெரிய. திருநாட் 26)

பரிமேலழகர் உரை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.).

மணக்குடவர் உரை
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

மு.வரதராசனார் உரை
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிறர் நலம் காத்தலே சம்சாரியின் முதற்பணி.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமனன்)
ஒழுக்கத்துக்கு முதன்மை
ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத்தின் கடமை என்பதையும், தெய்வங்களுக்கு வருணன் வழங்கப்பட்ட முதன்மையையும் வேதம் கூறுவதாக அறிவோம்.  இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமைகளை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம், ஞானிகள், பிதிரர், உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்குமட்டுமின்றிப் பிராணிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு மனிதனும் கடமைப்பட்டுள்ளான் என்பது வேதவாக்கு. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்க ஐம்புலத்தா றோம்பல்தலை” என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கடமையைக் செய்வது ஒருவனுக்கு அறம் என்பதே இக்குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. வேதமும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென்புளத்தார் தெய்வம் விருந்து ஆகிய மூவரையும் பேண வேணுமென்பது இரண்டுக்கும் பொதுவாயுள்ளது. ஆனால், குறள் ஒருவன் தன்னையும் தன் உறவினரையும் பேணவேணுமெனக் கூரியதற்கும் பதிலாக, வேதங்கள் ஞானிகளையும், மக்கலாலாத ஏனைய பிராணிகளையும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்கது. ஒருவன் தன்னைப் பேணுவதை ஓர் அறமாக வேதங்கள் கருதாதது இங்குச் சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிறரைப் பேணுவதற்குத் தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே, தன்னைப் பேணுவதும் ஒரு அறமாகுமென வாதாடலாம். எனினும், சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். சதபத பிராமணத்தில் ஒருவன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடுபேற்றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை, தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கியமான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல், பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெரும்பாவங்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. 

எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையில் இருந்து (ஒக்கலை ஏறிய உலகளந்தோன்)
ஒக்க என்றால் இணையாக என்று பொருள். இணைந்து என்றும் வரும்.ஒக்கடித்தல் என்றால் சேர்ந்து தாளமிடுதல் என்று வையாபுரிப்பிள்ளையின் அகராதி சொல்கிறது. ஒக்க நோக்குதல் என்றால் சமமாக பாவித்தல். ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்று தேவாரம்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ என்று வள்ளுவர். மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர், தான் என்று ஐந்து பேரையும் பேணுவது கடமை. ஒக்கலித்தல் என்றால் பேணுதல் என்ற பொருள் இதிலிருந்து வந்திருக்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகனின் “தத்துவம் மேற்கும் கிழக்கும்” எனும் கட்டுரையில் இருந்து
இந்திய தத்துவநூல்கள் பெரும்பாலும் சூத்திரங்கள் என்னும் ஒற்றை வரிகளாக இருப்பதைக் காணலாம். அவை இருபட்டை அணுகுமுறை வழியாக அறியப்பட வேண்டியவை. அவற்றைத் தர்க்கபூர்வமாக விளக்கி விரித்து எழுதும் உரைகள் வழியாக அறியும் முறை ஒருபட்டை. அவை தத்துவத்துக்குள் வருகின்றன. அவற்றை தியான மந்திரங்களாக ஆக்கி தியானித்து உபாசித்து அறியும் முறை இன்னொரு பட்டை. அது தத்துவமே அல்ல

உதாரணமாக திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்ற குறள் இந்திய தத்துவநூல்களுக்குரிய சூத்திர வடிவில் ஒரு தொன்மையான தரிசனத்தை முன்வைக்கிறது. தென்புலத்தார் என்றால் மூதாதையர். மூதாதையர், தெய்வம், விருந்து ,ஒக்கல் அதாவது சொந்தபந்தங்கள், தான் என ஐந்தையும் பேணவேண்டியது ஒருவனின் கடமை என்கிறது இக்குறள்

உரைகளின் வழியே விதவிதமாக இந்த ஒன்றரை வரி விரியும். தெய்வத்திற்கும் முதலாக தென்புலத்தாரை ஏன் வைத்தார் வள்ளுவர்? ஏனென்றால் அவர்கள்தான் ஆதிதெய்வங்கள். வழிபாட்டின் தொடக்கமே மூதாதையர் வழிபாடுதான். தெய்வம் என பன்மையில் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கலாம்.

விருந்து என்ற சொல் விருந்தினரை அல்ல சான்றோரையே குறிக்கிறது என விளக்கங்கள் உண்டு. ஒக்கல் என்பது உறவினரை மட்டும் சொல்லவில்லை. அச்சொல் சார்ந்திருப்பவர்களைச் சொல்கிறது. பழைய இல்லறவாழ்க்கையில் பல்வேறு சிறுகைத்தொழிலளர்கள் மற்றும் நாடோடிகள் இல்லறத்தானைச் சார்ந்திருந்தனர். வீட்டு மிருகங்களையும் இதில் சேர்க்கலாமென விளக்கப்படுவதுண்டு

சிந்திக்கும்தோறும் இந்த வரி விரிந்தபடியே போகும். இப்படி சுருக்கமாக, சூத்திரவடிவில் எழுதும் வழக்கம் மேலைச்சிந்தனை மரபில் பிற்காலத்தில்தான் தத்துவ அங்கீகாரம் பெற்றது. நீட்சேயின் ‘இவ்வாறு பேசினான் ஜரதுஷ்டிரன்’ என்ற நூல் முக்கியமான முன்னுதாரணம். பின்னர் விட்ஜென்ஸ்டீனின் நூல்கள்.

இந்த வரியை ஒரு தியானமந்திரமாக கொள்ளும்போது அதையொட்டி ‘சிந்திக்கும்’ பயிற்சியை நாம் திட்டமிட்டு ரத்துசெய்கிறோம். அதைவெறும் சொல்லாட்சிகளாக மட்டுமே எடுத்துக்கொண்டு அச்சொற்கள் நம் அகத்தை ஊடுருவி கனவுத்தளத்தை ஆழத்து அமைதியையும் தீண்ட அனுமதிக்கிறோம்.

எனக்குத்தெரிந்த ஒரு துறவி இவ்வரியை அவரது குருவிடமிருந்து மந்திர உபதேசமாகப்பெற்றார். நாளடைவில் ‘தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்’ என்ற ஒற்றைவரியாக அது மாறியது. அவர் அதைச் சொல்லும்போது நான் மனம் அதிர்ந்தேன். தென்புலத்தவரே தெய்வமும் விருந்தும் சொந்தமும் ஆகிறார்கள் என்றும் தென்புலத்தாரின் தெய்வம் விருந்தும் சொந்தமும் தான் என்றும், தென்புலத்தார் விருந்தும் தெய்வமும்போன்றவர்கள் என்றும் விதவிதமாக அர்த்தம்கொடுக்க ஆரம்பித்தது அவ்வரி.


சங்கர நாராயணன் என்பவர் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் (குரு: கடிதங்கள்) இவ்வாறு குறிப்பிடுகிறார்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்று வள்ளுவர் சொல்கிறார். தென்புலத்தார் என்றால் பெற்றோரும் மூதாதையரும். தெய்வம் அதன் பின். விருந்து, சுற்றம், தான் என ஐது தரப்பையும் பேண வேண்டும். சரி, மாதாபிதாகுருதெய்வம் என்னும் கணக்கில் குரு வரவேண்டுமே எங்கே? என்று கேட்டேன். ஒரு நல்ல மாணவர் உடனே பதில் சொன்னார். குருவை நம் ஓம்பவேண்டியதில்லை, குருதான் நம்மை ஓம்புகிறார் என்றார்.

உங்கள் குறிப்பு மிகமிகச் சிறப்பானது. ஏன் குரு உறவு முக்கியமானது? அம்மா நம் உடலை நினைக்கிறாள். அப்பா நம் மரபை நினைக்கிறார். தெய்வம் நம் ஆத்மாவை நினைக்கிறது. நம் ஞானத்தை நினைப்பவர் குரு மட்டும்தான்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...