Monday, September 25, 2017

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து

குறள் 541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை.
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]

பொருள்
ஓர்ந்து - ஓர்-த்தல் - ōr-   11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12).
கண்ணோட்டம் -  கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;); இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல்.
கண்ணோடாது - தாட்சிணியம் இல்லாமல்
இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்
புரிந்து புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
தேர்ந்து - தேர்ந்துசெயல் - - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும்
செய்வஃதே - செய்வதே
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

முழுப்பொருள்
அரச நீதி, செங்கோன்மை என்பது யாது எனில் தன் கீழ் வாழும் மக்களின் ஒரு வழக்கில் (அல்லது மக்களுக்காக ஆற்றப்படும் செயலிலோ) அவ்வழக்கை (அல்லது செயலை) நன்கு ஆராய்ந்து, அதனை பற்றி தகவல்களை கூர்ந்து கேட்டு சேகரித்து நீதி நூல்கள் கூறும் அறத்தை பின்பற்றி யாரிடத்திலும் எந்த வித தாட்சிணியமும் (அதாவது ஒரு தலை பட்சமாக, சார்பு) இல்லாமல் ஒரு அரசனாக ஒரு தலைவனாக அச்செயலை தேர்ந்து அற நூல்கள் சொன்னபடி செய்வதே ஆகும். ஒரு வழக்கிற்கு நடுநிலைமையான தீர்ப்பு நீதியாகும். ஒரு செயலுக்கு நடுநிலைமையான அறத்திற்கு புறம்பல்லாத திட்டமும் செயலும் நீதியாகும். அதுவே அரச நீதியாகும்.

இங்கே செங்கோன்மையில் முதலாவதாக அரசருக்கு சொல்லபடும் தலைமைபண்பு நடுவுநிலைமை என்பது முக்கியமாக காணவேண்டியது. ஆதலால் தான் என்னவோ சிலப்பதிகாரத்தில் நன்கு ஆராயாமல் பாண்டிய அரசன்  நெடுஞ்செழியன் கொடுத்த தவறான தீர்ப்பிற்கு கண்ணகி தலைநகர் மதுரையை எரித்தாள் என்பதை சிலப்பதிகாரத்தில் கண்டோம்.  “கோனுயரக் குடி உயரும்” என்பதும் சான்றோர் வாக்கே. செங்கோல் தாழ்ந்ததால், மானமுடைய அரசர் உயிர் துறப்பர் என்பதற்கு சிலப்பதிகாரப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனே சான்று.

குற்றங்குணங்களை ஆராய்தல், நடுவு நிலைமை, நம்மவர் என்கிற சார்பின்மை என்பவற்றைப்பற்றி அறத்துப்பாலின் கண்ணும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்று “நடுவு நிலைமை” அதிகாரத்துக் குறளாலும், “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று “மெய்யுணர்தல்” அதிகாரத்துக் குறளாலும், “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று “அறிவுடைமை” அதிகாரத்துக் குறளாலும் ஏற்கனவே இக்குறளின் மொத்தக்கருத்தையும் கூறியிருப்பதை நினைவு கூறலாம். மற்ற யாவரையும் விட, ஆள்வோர்க்கு செங்கோன்மை இன்றியமையாததாகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”முறைஎனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்” (கலி.133:13)

“கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்” (பழமொழி.93)

”எங்கண் ணனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ணே யானும் தகவில் கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க, ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு” (பழமொழி 322)

”நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக வொறுத்தி” (புறநா.10:3-4)
“ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்” (முதுமொழிக் 10:9)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறலின் ' செங்கோல் ' எனப்பட்டது. வடநூலாரும் , ' தண்டம் ' என்றார் . அது சோர்வில்லாத அரசனால் செயற்பாலது ஆகலின் , இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது .]

ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். 
(நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும். யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.

மு.வ உரை
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

சாலமன் பாப்பையா உரை
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

Thirukkural - Management - Leadership
One of the responsibilities of a leader is to meet out proper justice to his followers. Delivering disinterested, means being impartial, justice is a challenge to a leader. A leader who is known for justice is fair and firm. A just leader has three actions to perform as presented in Kural 541.

Searching enquiry, an impartial eye, punishment as
prescribed are the ways of justice.

The three actions are: 1) He has to assess impartially the crime committed by someone, 2) He should not show any leniency after the assessment, and 3) He has to pronounce the decided punishment according to the seriousness of the crime committed.

Saturday, September 23, 2017

இறந்த வெகுளியின் தீதே

குறள் 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]

பொருள்
பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

இறந்த - இற - iṟa   VII. v. i. die, expire, perish, சா; 2. become obsolete, பழமையாகு; 3. pass (as time) செல்லு; 4. exceed the measure or limit, கட; 5. excel, be preeminent, மிகு.
வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.
வெகுளியின்  - சினத்தை விட
தீது - தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன
தீதே - குற்றமே 
சிறந்த - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
உவகை - மகிழ்ச்சி; களிப்பு; அன்பு; காமம்; இன்பச்சுவை
மகிழ்ச்சியின் - மகிழ்ச்சி, உவகை; மகிழ்ச்சியணி; சந்தோஷம் 
சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

முழுப்பொருள்
ஒருவருக்கு சினம் மிகுந்த தீமையை தரும் என்று நாம் முன்னரே  [குறள் 431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து] [குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற] பார்த்தோம். சில சமயங்களில் அளவுக்கு மிகுந்து வரும் கோபத்தினால் நமக்கு மிகுந்த தீமை உண்டாகும். நம் வாழ்விற்கு பங்கமாக அமையும். ஆனால் அதை விட தீது சோர்வாகும். இச்சோர்வினால் நமக்கு பல கேடு உருவாகும். உதாரணமாக மறதி, செயலற்ற தன்மை, தேக்கம் ஆகியவை. ஆதலால் அதீத மகிழ்ச்சியினில் முக்கியமாக நாம் ஒரு சாதனை படைத்த பின்பு வரும் (உதாரணமாக ஒரு மிக பெரிய இடத்தில் வேலை வாங்குவது, ஒரு தொழிலில் அதிகம் லாபம் ஈட்டுவது) சோர்வென்பது நம்மை அழிக்கும். நமக்கு மறதியை கொடுக்கும். நம் வாள்கள் துரு பிடிக்கும். அறிவு மங்கும். உடல் தளர்ச்சி பெரும். புகழ் குன்றும். மொத்தத்தில் தேக்கம் உண்டாகும். இது நல்லது கிடையாது. இது நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் முழுமையை நோக்கி கொண்டு செல்லாமல் கீழ்மை நோக்கி கொண்டு செல்லும்.

மறதி/சோர்வு என்று மட்டும் சொல்லாமல்? ஏன் சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு என்று கூறினார்? இரண்டு வகையாக மனிதர்களை பிரிக்கலாம். ஒருவர் அறிவுடையோர். மற்றொருவர் அறிவில்லாதவர்கள். அறிவில்லாதவர்கள் புற உலக கேளிக்கை அளிக்கும் சந்தோஷங்களில் திளைக்கிறார்கள். அப்படிப் திளைக்கும் பொழுது தங்களது கடமைகளையும் / பொறுப்புகளையும் / செயல்களையும் மறக்கிறார்கள். அறிவுடையவர்களோ தான் பெற்ற வெற்றிகளினால் அக உலகில் சந்தோஷமடைந்து திளைக்கிறார்கள். அப்படித் திளைக்கும் பொழுது தன்னை வளர்த்துக்கொள்ள தன்னைப் புதிப்பித்துக்கொள்ள மறந்துவிடுகிறார்கள். இவையாவும் தேக்கத்தின் துவக்கம். அழிவின் துவக்கம். தீதானது.

வாழ்வு ஒரு ஒட்டம் அல்ல எனினும், முன்னேற்றமும் மேம்படுதலும் ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியம். சாதனைகளில் திளைத்துக்கொண்டு சோர்வு வர வழிவிடாமல் மேன்மேல் வளர தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வுலகத்தில் மனிதர்கள் செய்யக்கூடியவை பல உண்டு. அதனால் தான் வள்ளுவர் சொன்னார்.  

மகாத்மா காந்தியைப் பாருங்கள் அவர் அளவு உழைத்தவர்கள் மிக மிக அரிது. அவர் ஒருப்பக்கம் சுதந்திரப்போரட்டத்திற்கு பாடுபாட்டாலும், அவர் தொடர்ந்து இந்தியா முழுவதும் பயணங்களும், தினமும் பலர் கடிதங்களும் பதில்களும், கிராம முன்னேற்றம், இயற்கை மருத்துவம் போன்ற பலதளங்களில் செயலாற்றிக்கொண்டு இருந்தார். ஒரு மனிதனின் செயலாற்றும் திறன் ஒருவர் நினைத்துப்பார்க்கக்கூடியதைவிட மிக மிக அதிகம். அதற்கு ஒருவர் உணரவேண்டியது வாழ்வில் சோர்வினாலோ எக்காராணத்தினாலோ ஒரு நிமிடத்தையும் வீணடிக்கலாகாது என்பது தான். 

ஓடும் நதியில் நோய் இல்லை என்று நாம் அறிவோம். தேங்கிய நீர் ஆபத்தானது என்றும் அறிவோம். அதனால் தேங்காமல் நதி போன்று சோம்பல் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து தற்காத்தலின் பகையழித்தல் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாரால் பயனுள்ளது இச்சோர்வுஇல்வழியாகலின் , இது சுற்றம் தழாலின் பின் வைக்கப்பட்டது.]

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. 
(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று).

மணக்குடவர் உரை
மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

மு.வரதராசனார் உரை
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

விருப்பறாச் சுற்றம் இயையின்

குறள் 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
விருப்பு விருப்பம் - ஆசை; அன்பு; பற்று
அறாச் - அகலாத
சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரிய துணையில் ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.
இயை - iyai   s. junction, union, இசைப்பு, iyai   II. v. i. (poet, for இசை) join, agree, பொருந்து; be proper for, agreeable to; அழகு; புகழ் இசைப்பு வாழை
இயையின்  -
அருப்பு- அரும்புதல் (துளிர்த்தல்) 
அறா - கருகி ஓயாது
ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து
பலவும் - pala   pron. cf. bahula. [K. hala, M.pala.] Many, several, diverse; ஒன்றுக்கு மேற்பட்டவை.
தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
இக்குறளை இரு இடங்களில் வைத்து பார்க்கிறேன். ஒன்று குடும்பம். மற்றொன்று அலுவலகம் மற்றும் அரசின் அமைச்சகம்.

1) முதலாவதாக குடும்பம். ஒரு குடும்பத்தில் ஓயாது ஆத்மார்தமாக அன்பு செலுத்தும் உறவினர்கள் சுற்றமாக இருந்தால் அவனுக்கு குன்றாத பல வகை செல்வமும் வளங்களும் வாழ்வில் வரும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அறிவு உள்ளவராக இருப்பார்கள். குறைந்தது அதனை பற்றி தெரிந்தவரையாவது தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு அல்லது அப்படி ஒருவரை தேடி கண்டுபிடிக்கும் வல்லமையும் எண்ணமும் உண்டு. இப்படி ஒருவர் இருப்பின் நமது உறவினரே நம்மீது அன்பு கொண்டு நமக்கு உதவுவர். இது நமக்கு வளர்ச்சியை கொடுக்கும். ஒரு விதத்தில் இது ஒரு உலகியல் லாபம். இன்னொரு விதத்தில் நம்மை நல்ல நிலையில் காண வேண்டும் என்று நினைப்போர் நம்மை அன்பால் நல்வழி படுத்துவார்கள். நாம் தீய பழக்கங்களில் சிக்கினால் கூடா நட்பில் இருந்தால் நம்மை நல் வார்த்தை பேசி திருத்துவர். நாம் சோர்வாக இருக்கும் நேரங்களில் நம்மை உத்வேக படுத்தவர். இவையெல்லாம் நம்மை நல்வழியில் செலுத்தி நமக்கு செல்வங்களை கொடுக்கும். சுறுக்கமாக சொன்னால் நிபந்தனையற்றை அன்புக்கொண்ட அன்பர்கள் நம்மை சுற்றி இருந்தால் நம் வாழ்வு சற்று இலகுவாக்கிவிடும். 

2) இரண்டாவதாக அலுவலகம்/அமைச்சகம். ஒரு வேலை செய்யும் இடத்தில் சுற்றம் மிக முக்கியம். கூட வேலை செய்வோர் விருப்பத்துடன் ஆசையாக வேலை செய்தால் தான் அந்த சக்தி (energy), புத்துணர்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டு நம்மையும் உத்வேகத்துடன் வேலை செய்ய வழி வகுக்கும். அப்படி ஆசைக்கொண்டவர்கள் நாம் தவறு செய்தால் அதனை திருத்தி நம்முடைய ஆற்றலை கூட்டுவர். நம்மை மெருகேற்றுவர். அது ஒரு மிகப்பெரிய செல்வமாகும். எல்லா நல்ல புத்துணர்ச்சிகளும் (positive energy) நம்மை அடுத்த இடத்திற்கு கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

உதாரணமாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை சுற்றி உள்ளவர்கள கொடுக்கும் உத்வேகம் தன்னை மெருகேற்றுகிறது என்று கூறி உள்ளார். 

https://youtu.be/a44vlfpnBvU?t=11m37s   (ஏ.ஆர். ரஹ்மான் உடன் நேர்காணல்)

சுறுக்கமாக சொன்னால் நிபந்தனையற்றை அன்புக்கொண்ட அன்பர்கள் நம்மை சுற்றி இருந்தால் நம் வாழ்வு சற்று இலகுவாக்கிவிடும். 
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
(உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.

மு.வரதராசனார் உரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

நன்மையும் தீமையும் நாடி

குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

பொருள்
நன்மையும் - நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.

தீமையும் - தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடி - அவற்றை நோக்கி

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

புரிந்த - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.

தன்மை - குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி.

தன்மையான் - அத்தன்மை உடையவன்

ஆளப்படும் - ஆளுகை - ஆட்சி; ஆளுதல்; உரிமை; ஆளுகை அதிகாரம் ஆன்றோர்வழக்கு; அனுபவம் தாயமுறையில்வந்தஉரிமை; மக்கள்அணையலாகாதெனக்கட்டளையிடப்பட்டஇடம்; கோள்நிலை; கிழமை

முழுப்பொருள்
ஒரு செயல் என்பது பல ஆற்றலை எடுத்துக்கொள்ளும். ஆதலால் அதனை செய்வதில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். அச்செயலின் நன்மை தீமைகளை நன்கு ஆராய வேண்டும். நன்மை தீமைகளை ஆராய்ந்து பின்பு நலம் அதிகம் பயக்கும் எனில் அத்தகைய செயலை செய்ய வேண்டும். அதுவே சிறப்பாகும்.

பழமொழி நானூற்றுப் பாடலொன்று இக்கருத்தை ஒட்டியது, இவ்வாறு செல்கிறது.

நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு. (பழமொழி 104)

நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து இரண்டு காளைகள் ஒன்றுகொன்று முரண்படாமல், ஒன்றாக சேர்ந்து ஒரு வண்டியை இழுப்பதைபோல, அரசனும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து செயலாற்றினால் செய்யும் வினைகள் செம்மையாகும் என்ற கருத்தைக் கூறுகிறது இப்பாடல்

கம்பராமாயணம் மகேந்திரப்படலப் (11)  பாடல் ஒன்று, ஜாம்பவான் அனுமனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.

நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர்; காரியம் நீரே துணிவுற்றீர்;
வெல்லவும் வல்லீர்;

நல்லனமட்டுமன்றித் தீயவற்றையும் நாடி, குற்றம் தீரும்வரையில் தீர்வுகூறும் திறம் அனுமனிடம் உண்டு; தவிர செயலை செய்யும் துணிவும், வெற்றியுடன் முடிக்கும் வல்லமையும் உடையவன் அனுமன் என்று ஜாம்பவான் வாய்மொழியாக அனுமனிடம் வீரமும் விவேகமும் ஒருங்கே இருந்ததைச் சொல்லுகிறார் கம்பர்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , அத் தெளிப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளை அறிந்து , அவற்றின்கண்ணே ஆளும்திறம் , அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]

நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
(தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.).

மணக்குடவர் உரை
நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.

மு.வரதராசனார் உரை
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம்

குறள் 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]

பொருள்
அறம் - நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்;
பொருள் - பொருள் / செல்வம் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன்; ஆதன்; ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து; ஓசை; ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்.
அச்சம் - பயம்; மகளிர் நாற் குணத்துள் ஒன்று; தகடு இலேசு அகத்திமரம்; சரிசமானம் பளிங்கு
நான்கின் - நான்கிளும்
திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.
தெரிந்துவினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.
தெரிந்து - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.


தேற - tēṟa   adv. தேறு-. Thoroughly;கடைபோக. தேற விசாரிக்கவேணும்.  
தேற்று - tēṟṟu   III. v. t. console, comfort, ஆற்று; 2. strengthen, invigorate, nourish, பலப்படுத்து; 3. clarify, refine, சுத்தி கரி; 4. clear up, decide, தீர் VI; 5. (for. தேறு) know, know certainly, அறி.

தேற்றுதல் - தெளிவித்தல்; தெளிந்தறிதல்; சூளுறுதல்; ஆற்றுதல்; தேறுதல்கூறுதல்; தூய்மைசெய்தல்; குணமாக்குதல்; பலமுண்டாக்குதல்; ஊக்கப்படுத்துதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
ஒருவரை நாம் ஒரு பதவியில் அமர வைக்கிறோம். அப்பதவி ஒரு முக்கியமான பொறுப்பாகும். ஆகையால் அப்பதவியில் ஒருவரை அமர வைப்பதற்கு முன்னர் நமக்கு அவர் அப்பதவிக்கு தகுதியானவரா என்ற தெளிவு மிக அவசியம். ஆகையால அவரையும் அவரை பற்றியும் நன்கு ஆராய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். எவற்றை ஆராயவேண்டும்? நான்கு திறன்களை.

1) அறம் - ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும். அது இன்றியமையாதது. ஒருவர் வாழ வகுக்கபட்ட நெறிகளை பின்பற்றுபவரா என்று பார்க்க வேண்டும். ஒருவர் தருமம் புண்ணியங்களை செய்கின்றவரா என்று பார்க்க வேண்டும்

2) பொருள் - அறிவு ஒரு பொருள் என்று அகராதி கூறுகிறது. ஆதலால் ஒருவர் இவ்வேலைக்கு தேவையான அறிவுச்செல்வம் உள்ளவரா என்று ஆராய வேண்டும்.  அது மட்டும் இன்றி அவரிடம் பொருள் மீது அதீத பற்று இல்லாமலும் பார்க்க வேண்டும். ஏன் எனில் பொருளின் மீது உள்ள பற்றினால் அறம் மீது களவு செய்ய தூண்டக்கூடும்

3) இன்பம் - ஒருவர் மனமகிழ்ச்சியுடன் இருக்கின்றாரா என்று பார்க்க வேண்டும். அப்படி ஒருவர் மனமகிழ்ச்சியுடன் ஒரு வேலையை செய்ய வில்லை என்றால் அவருக்கு அவ்வேலை பிடிக்கவில்லை அல்லது நாட்டம் இல்லை என்றே அர்த்தம். அத்தகைய போக்கு உடன் வேலை செய்வோரிடமும் தொற்றிக்கொள்ளும். அது தீமையை விளைவிக்கும். அது மட்டும் இன்றி ஒருவருக்கு சிற்றின்பங்களில் திளைப்பவராக இருக்க கூடாது. உதாரணமாக பெண்கள் மீது கொள்ளும் மோகம். சிறிய செயல்களில் கிடைக்கும் இன்பத்தில் திளைப்பவர் பெரிய காரியங்களில் ஈடுபட முடியாது

4) உயிர் அச்சம் - ஒருவருக்கு உயிரச்சம் முக்கியம் என்றே (நானும்) கருதிகிறேன். ஒருவர் இவ்வேலை சரியாக முடிக்க வில்லை என்றால் அது அவர் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்ற அச்சம் இருக்க வேண்டும். இக்காரியம் பலருடைய உயிரை பாதிக்கும் என்ற அச்சம் இருக்க வேண்டும்.

ஆதலால் ஒரு தலைவன் அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் என்ற நான்கு திறன்களையும் ஒருவரிடத்தில் நன்கு ஆராய்ந்து தெளிவுப் பெற்ற பின் அவரை பணியில் அமர்த்த வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

 “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு” என குரு சொன்னதையே தானும் உரைத்தாள்

பரிமேலழகர் உரை
[அஃதாவது , அமைச்சர் முதலாயினாரைப் பிறப்புக் குணம் அறிவு என்பனவற்றையும் , செயலையும் ,காட்சி கருத்து ஆகமம் என்னும் அளவைகளான் ஆராய்ந்து தெளிதல். வலி முதல் மூன்றும் அறிந்து பகைமேற்செல்வானுக்குத் தானை வினையுற்றுச் செய்தற் பொருட்டும் அறைபோகாமைப் பொருட்டும் இது வேண்டுதலின் , அவற்றின் பின் வைக்கப்பட்டது. ]
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும். 
(அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்துஎன்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்பஉபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும்என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப்பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச்சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒருநிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான்எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல்ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை?எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும்திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக்கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையைஉட்கொண்டு இவர் ஓதியது அறியாது,பிறரெல்லாம் இதனைஉயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத்தோன்றியவாறே உரைத்தார்.).

மணக்குடவர் உரை
அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார்.

மு.வரதராசனார் உரை
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

Friday, September 22, 2017

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா

குறள் 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
[பொருட்பால், அரசியல், இடனறிதல்]

பொருள்
அஞ்சாமை - பயப்படாமை, திண்மை
அல்லால் - இல்லாமல்
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
துணைவேண்டா - துணை தேவையில்லாமால்
எஞ்சாமை - குறையாமை, ஒழியாமை, முழுமை.
எண்ணி - எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்
இடத்தால் - இடத்தில் / இடத்திற்கு தகுந்தாற்ப்போல்
செயின் - செய்தால் / செய்ய வேண்டும்

முழுப்பொருள்
ஒரு செயலை முழுமையாக எல்லா கோணங்களிலும் நன்கு ஆராய்ந்து திட்டமிட்டு அச்செயலை செய்வதற்கான தக்க இடத்தில் அல்லது அவ்விடத்திற்கு தகுந்தாற்ப்போல சரியாக செய்தால் எதற்கும் அஞ்சாத மன உறுதியுடன் யாருடைய துணையும் நாடாமல்/ வேண்டாமல் அக்காரியத்தை செவ்வென செய்யலாம்.

உதாரணமாக
என் வாழ்வில் சில சமயங்களில் இதனை யாராவது எனக்கு முன்னமே கூறி இருந்தால் நான் இதை முன்பே செய்து இருப்பேன் அல்லது தவறை இழைத்திருக்க மாட்டேன் என்று மனதிற்குள் கூறியது உண்டு. ஆனால் யோசித்து பார்த்தால் சோம்பலால் அக்காரியத்தை செய்யாது இருந்து இருக்கிறேன். அதனை நானே இணையதளத்தில் ஆராய்ந்து கற்றுக்கொண்டு இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இப்போது தான் புரிகிறது திருவள்ளுவர் ”எண்ணி இடத்தால் செயின்” என்று கூறியதை.

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.
('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.

மு.வரதராசனார் உரை
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

ஊக்க முடையான் ஒடுக்கம்

குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற் கொண்ட எண்ணம்; உண்மை.
உடையான் - உடையவர்கள், உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
ஒடுக்கம் - அடக்கம்; குறுக்கம்; சுருக்கம்; புழுக்கம்; சிறிதுசிறிதாகக்குறைதல்; நெருக்கமானஇடம்; பதுக்கம்; மறைவிடம்; தனியிடம்; வழிபாடு; முடிவு; ஒன்றில்அடங்குகை; இடைஞ்சல்.
பொரு - ஒப்பு; உவமை; எதிர்த்தடை; poru   I. v. i. fight, போர்செய்; 2. compete; 3. come in collision with, தாக்கு; 4. quarrel, வாதாடு; 5. resemble, ஒப்பாகு; 6. join, unite with, be combined, பொருந்து; 7. dash together as waves, be ruffled, அலைமோது.
தகர் - பொடி; தகர்ந்ததுண்டு; ஆட்டுப்பொது; செம்மறியாட்டுக்கடா; வெள்ளாடு; யாளியின்ஆண்; ஆண்யானை; ஆண்சுறா; மேட்டுநிலம்; பூமி; பலாசுமரம்.
தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை.
தாக்கற்குப் - தாக்குவதற்கு - 
பேரும் - பெரிதாக
தகைத்து - tkaittu   A symbolic verb, third per son neuter. It is of a similar nature, it is like, it is fit, தன்மையுடையது. (p.) மன்னுயிரோம்புந்தகைத்தே. It is calculated to protect living souls.
தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு; அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.
தகையாற - to take rest.

முழுப்பொருள்
மனதில் ஊக்கம் உடையவர்கள், ஒரு செயலை செய்ய தேவையான வலிமை உடையவர்கள் ஒரு காரியத்தை தேவையில்லாமல் தள்ளிப்போட மாட்டார்கள். ஆனால் ஒரு தேவையுடனும் தள்ளிப்போடுவார்கள். அவர்கள் அக்காரியத்தை செவ்வென செய்ய ஒரு தக்க காலத்திற்காக அடக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று பொருளாகும். இது ஒரு ஆட்டுகடா தன் எதிரியை தாக்க சற்று பின்வாங்கும். அவ்வாறு பின்வாங்குவது என்பது முன்னே பாய்ந்து எதிரியை வீழ்த்த தான். 

சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது. அதனால் தான் அதனை இங்கு உதாரணமாக கூறுகிறார் திருவள்ளுவர். 



இதையே கொங்குவேளிர் தாம் இயற்றிய பெருங்கதையில் (3.1:30-31), 
“பாடுபெயர்ந்து இடிக்கும் மேடகம் போல 
அகன்றுபெயர்ந்து அழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி” என்கிறார்.

“அடங்கவும் வல்லீர் காலம தன்றேல் அமர்வந்தால்
மடங்கல் முனிந்தா லன்ன வலத்தீர்” (கம்ப.மகேந்திரப்.17)

பொதுவாக புழக்கத்தில் உள்ள மற்றொரு சொலவடை, “புலி பதுங்குவது, பாய்வதற்காகத்தான்”. திறமையுள்ளவர்கள், திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் ஊக்கமிருந்தாலும், தகுந்த நேரத்திலேதான் செயலாற்ற முனைவர். அதற்கு முன்பாக ஒடுக்கத்துடன் அடங்கியே இருப்பர். காண்பவர்களுக்கு, இவர்கள் செயலாற்றப் போகிறார்கள் என்னும் எண்ணம்கூட இருக்காது.

மேலும்: அஷோக் உரை

கீழ்காணும் கந்தர் அனுபூதி பாடல் இக்குறளுக்கு ஏற்ற பாடல் இல்லை என்றாலும் தேவையில்லாமல் நல்ல நேரம் கேட்ட நேரம் (அஷ்டமி, நவமி, பிரதமை, கரிநாள், இராகு காலம், எம கண்டம், சந்திராஷ்டமம்) என்று பல செயல்களை தள்ளிபோடுவதை பற்றி பேசும் பாடல் இது. முழுமையான இறை நம்பிக்கை உள்ளவர்கள் தேவையில்லாமல் காலம் தாழ்த்தமாட்டார்கள் என்று இப்பாடல் கூறுகிறது. 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

“பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்” என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான்.

பரிமேலழகர் உரை
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் ஆண்டு வருமானம் 960 கோடி என்கிறார்கள். பெரிய விலையுள்ளது எப்படி விளையாட்டாக இருக்க இயலும். நம்மைப் பொறுத்தவரை தொலைக் காட்சிப் பெட்டிமுன் உட்கார்ந்து சமயம் கொல்வதும் சாராயக் கடைக்குப் போவதும் ஒன்றேதான். அரசியல் செய்திகளோ, இழவுக்கு வந்தவளைத் தாலி அறுக்கச் சொல்கிறது. சூதும் வஞ்சனையும் கொள்ளையும் குரல்வளை அறுத்தலும் குலத் தொழில் என்றானபிறகு, அவர் வலத்தே போனாலும் இடத்தே போனாலும் அவர் குறியை நம் வாயில் செருகாமற் போனால் போதும் என்றாயிற்று.

பிறகு வேறென்ன செய்வது? திருக்குறளுக்கு எம்மிடம் முப்பது பதிப்புக்களும் உரைகளும் உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்பாக ஜி.யு.போப், வ.வே.சு. ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஜி.வி. பிள்ளை என்றும் அறியப்பட்ட கோ.வன்மீகநாதன் நூல்கள் உண்டு.

புத்தக வாசிப்பு என்பது ஒரு Ohsessive Compulsive Disorder போலாயிற்று நமக்கு. Cronical Disease எனவும் கொள்ளலாம். யாம் பிறப்பால் நேர்ந்ததுவும் மனதால் தேர்ந்ததுவும் தமிழ் ஒன்றுதான். தமிழனாய்ப் பிறந்தாலும் வேறொரு மொழிமேல் காதலும் பக்தியும் கள்ளப் புருச வெறியும் நமக்கு இல்லை.

திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட, ‘திருக்குறள் சொல் அகராதியும் மூலமும்’ என்றொரு நூலுண்டு எம்மிடம். நூலைத் தேடி வாங்கக் காரணம், திருக்குறளின் 1330 குறட்பாக்களும் பயன்படுத்திய 4310 சொற்களின் பட்டியல் உண்டு அதில், அகர வரிசைப்படி. சொல்லிருக்கும் ஆனால் பொருள் இருக்காது. இஃதோர் அகராதி அல்ல, சொல்லடைவு, சொற்றொகை, அர்த்தமாகவில்லை என்றால் Word Index. இந்த நூலில் திருவள்ளுவர் பயன்படுத்திய அனைத்துச் சொற்களும், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்களும் இருக்கும். சொற்களின் தொகையுடன் திருக்குறளின் மூலப் பாடல்களும் சொற்களுக்குப் பொருள் பாடல்களுக்கு உரையும் இருக்காது.

எடுத்துக்காட்டுக்கு, புழுதி என்ற சொல் 1037வது குறளில் கையாளப்பட்டுள்ளது. பழம் என்ற சொல் 1120 வது குறளில் உண்டு. முலை என்ற சொல் 402 மற்றும் 1087 வது குறள்களில். அனிச்சம் எனும் சொல் 90வது, 1111வது, 1115 வது, 1120 வது திருக் குறள்களில் உண்டு. பாடலின் முதல்தொடர் தெரிந்தால் பாடலைத் தேடிவிடலாம் என்பதல்ல இங்கு. சொல் ஒன்று பாடலில் எங்கேனும் ஆளப்பட்டிருக்கலாம், சொல் தெரிந்தால் பாடலைத் தேடிப் போய்விடலாம். இதைப் போல, சங்க இலக்கியங்கள் என்ற தீவிரமான பொருளில் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினெட்டு நூல்களுக்கும் சொல்லடைவு உண்டு. A word Index For Cankam Literature என்று Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. Institute of Asian Studies வெளியீடு. சங்க இலக்கியச் சொல்லடைவு என்று முனைவர் பெ. மாதையன் தொகுத்த இன்னொரு நூலும் உண்டு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

இவ்வளவு இருந்தும் தமிழனுக்கு அதனால் என்ன? சூப்பர் ஸ்டாரின், உலக நாயகனின் ஒரு சினிமாவின் பெயர் சொன்னால் போதும், தரவுகளைக் கூடை கூடையாகக் கொட்டுவான். எங்களூரில் கொச்சையாக வழங்கப்படும் பழமொழி ஒன்றை இலக்கியத் தரத்தில் சொல் மாற்றி எழுதலாம். கலவி செய்ய அறியாதவனுக்கு ஒன்பதங்குல நீளத்தில் குறி அமைந்து என்ன பயன்?
திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்டுள்ள ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்று தனித்தனியாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று நூல்கள் உண்டு. இந்தப் பதிப்பின் சிறப்பு என்ன என்பீர்களேயானால், இது உரைக்கொத்து என்று கூறப்பட்டதால், பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதிலார், காளிங்கர் ஆகிய மூன்று முதன்மை உரையாசிரியர்களின் உரைகள் உண்டு. மேலும் ஜி.வி. பிள்ளை என்ற கோ. வன்மீகநாதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர் Random Rambbings என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலொன்று எழுதியவர். இன்று அது பதிப்பில் இல்லை. திருச்சி மோத்தி ராஜகோபால் அன்பளிப்பாகத் தந்த படி ஒன்று உண்டு என்னிடம்.

‘திருக்குறள் உரைக்கொத்து’ வாங்க வேண்டுமானால் நீங்கள் திருப்பனந்தாள் காசித்திருமடம் போய்த்தான் ஆகவேண்டும். ஒரு புத்தகம் தேடுவது என்பது சரவண பவனில் காப்பிக் குடிப்பது போன்றதல்ல.
திருக்குறள் பொருட்பாலின் ‘காலமறிதல்’ எனும் அதிகாரத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இந்த அதிகாரத்தில் சில நல்ல குறட்பாக்கள் உண்டு, எல்லாமே நல்லவையே , என்றாலும். திரும்பத் திரும்பச் செவி மடுக்கும் குறள்கள். சொல் வணிகம் செய்வோர் ஓயாமல் பயன்படுத்துபவை. ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை!’, ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘கருவியால் காலம் அறிந்து செயல்’, ‘ஞாலம் கருதினும் கைகூடும்’, ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ முதலாயச் சொற்றொடர்கள் இந்த அதிகாரத்தின் குறள்களின் பகுதிகள் என்பதறிக. .

இந்த அதிகாரத்தின் ஆறாவது குறள் வாசித்தபோது, புதியதாய்ப் படிப்பது போலிருந்தது.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
என்பதந்தக் குறள். அடிக்கடி சொல்லக் கேட்டிராத இந்தக் குறளின் பொருள் கீழ்வருமாறு.

பரிமேலழகர்: வலி மிகுதியுடைய அரசன் பகைமேற் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு, பொருகின்ற தகர் தன் பகை கெடப் பாய்தற் பொருட்டுப் பின்னே கால்வாங்கும் தன்மைத்து என்றவாறு.

மணக்குடவர்: மன மிகுதியுடையவன் கால வரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும் என்றவாறு.

பரிப்பெருமாள்: மணக்குடவர் உரையைப் போன்றே.

பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.

காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.

 ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
 தாக்கற்குப் பேரும் தகைத்து’
என்ற மேற்சொன்ன குறளின் உரைகள் மேற்கண்டவை. உரையாசிரியர்களின் காலம் அவர்தம் மொழியையும் தீர்மானிக்கிறது. ஐந்து உரையாசிரியர்களிலும் யாவர்க்கும் முன்னவர் மணக்குடவர். அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிப்பெருமாள் காலம் பதினோராம் நூற்றாண்டு. பரிதியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. காலிங்கர், பரிமேலழகருக்கும் முந்தியவர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு. பரிமேலழகரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்மனார் அறிஞர்.

நாமிங்கு கையாளும் குறளில், பொரு தகர் என்ற சொற்றொடர் எனக்கு அர்த்தமாகவில்லை. முதலில் பொரு எனில் போர் என்பது தெரிகிறது. தகர் எனும் சொல் மிகப் புதிய சொல்லாக இருந்தது. ஆனால் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள் என்போர் தகர் என்றால் தகர் என்றே கையாண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் அல்லது புழங்கு மொழியில் தகர் என்ற சொல் இயல்பாக எங்கும் வழங்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். ஆனால் பரிதியாரும், காலிங்கரும் தகர் எனும் சொல்லுக்குக் கிடாய் என்று பொருள் எழுது கிறார்கள். கிடாய் என்ற சொல்லே கடா என்றும் கிடா என்றும் வழங்கப் பெறுகிறது. ஆட்டுக் கடா, எருமைக் கடா என்பன வழக்கில் உண்டு. கூழைக்கடா என்பதோர் வலசை வரும் பறவை என்பதால் குழப்பிக் கொளல் வேண்டா.

மேலும் தெளிவுக்காக, அண்மைக் காலத்து உரைகள் சிலவும் காணலாம்.

சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.

நாமக்கல் கவிஞர்: ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.

மேற்கண்ட இரு உரையாசிரியர்களும் தகர் என்ற சொல்லுக்கு ஆட்டுக்கடா என்ற தெளிவான பொருள் தந்துவிடுகிறார்கள். என்றாலும் இன்னும் சில உரையா சிரியர்களிடம் கேட்கலாமே என்று தோன்றியது.

வ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.

தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

தற்போது தெளிவாகத் தெரிகிறது 486 ஆம் திருக் குறளின் பொருள் என்ன என்பது. எளிய மொழியில் சொன்னால் பதுங்குவது பாய்வதற்கே! ஆனால் என் ஈடுபாடு, இங்குத் தகர் எனும் சொல்லின் மீது. கடாய் என்றும் ஆட்டுக் கடா என்றும் குறிப்பாகச் செம்மறி ஆட்டுக் கடா ‘ என்றும் பொருள் தெளிவாகிறது. ஆடுகளில், எனக்குத் தெரிந்து, வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பை ஆடு, கம்பளி ஆடு எனச் சில இனங்கள் இருக்கின்றன. கிடாய் அல்லது கடா என்றால் எந்த ஆட்டினத்தின் கடாவாகவும் இருக்கலாம். தேவநேயப் பாவாணர், மொழி ஞாயிறு என அறியப்படுகிறவர். அவர் தகர் எனும் சொல்லுக்குச் செம்மறியாட்டுக் கடா என்று பொருள் கொள்கிறார் எனில் அது சாதாரணக் காரியமல்ல. Give the Devil its due என்பார்கள் ஆங்கிலத்தில் செல்லமாக. இனிச் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் காண்போம்.

Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping hack in order to charge its opponent.

Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy.

மேற்சொன்ன நான்கு மொழிபெயர்ப்புக்களிலும், தகர் எனும் திருக்குறள் சொல்லின் ஆங்கிலப் பதமாக Ram எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்து ‘ஆங்கிலம் – தமிழ்ச் சொற் களஞ்சியம்’, 1963-ம் ஆண்டில் முதற்பதிப்புக் கண்டது. தலைமைப் பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். அதன்கண், Ram எனும் சொல்லுக்கு ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறி ஆட்டின் ஆண் எனும் பொருளே தரப்பட்டுள்ளது. எனவே

தேவநேயப் பாவாணரின் துல்லியம் நம்மை வியக்க வைக்கிறது. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் மரபியல்
நூற்பா ,

‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின் கண்ணே !’

என்கிறது. நூற்பாவின் பொருள், ஆட்டினத்தின் ஆண் பாலுக்கு, கிடாய், கிடா, கடா ஆகியனவற்றுக்கு, மோத்தை, தகர், உதள், அப்பர் எனும் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று இந்தச் சொற்கள் எதுவும், . எந்தப் பிராந்தியத்திலாவது, ஆட்டுக்கடாவைக் குறித்துப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தேடிக் கண்டடைய வேண்டும். தொல்காப்பியத்துக்குப் பேரா சிரியர் உரை, மேற்சொன்ன நூற்பா வரிகளுக்கு, ‘இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய’ என்கிறது.
மோத்தை எனும் சொல்லுக்கு Tamil Lexicon, ஆட்டுக்கடாய், Ram, வெள்ளாட்டுக் கிடாய், Goat எனப் பொருள் தரும். தகர் எனும் சொல்லுக்கோ 1. Sheep, ஆட்டின் பொதுச்சொல் (திவாகர நிகண்டு), 2. Ram, செம்மறியாட்டுக் கடா (திவாகர நிகண்டு), 3. Goat, வெள்ளாடு, 4. ஆண் யாளி, 5. ஆண் யானை, களிறு (பிங்கல நிகண்டு ), 6. Male Shark, ஆண் சுறா (சூடாமணி நிகண்டு) எனப் பொருள் தருகின்றது.

மேலும் தகர் எனும் சொல்லுக்கு, இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத வேறு சில அர்த்தங்களும் உண்டு. உதள் எனும் சொல்லுக்கு Ram, He – goat, ஆட்டுக் கடா, Goat, Sheep, ஆடு எனும் பொருள்களே குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பர் எனும் சொல்லுக்கும் Tamil Lexicon, Ram, He-goat, ஆண் ஆடு, ஆண் குரங்கு எனப் பொருள் தருகிறது.

என்ன தெரிகிறது என்றால், மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற சொற்கள் ஆட்டுக்கடாவை – வெள்ளாடோ, செம்மறியாடோ – குறித்தன என்பது. நான்கு சொற்களுக்குமே Lexicon தொல்காப்பிய நூற்பாவை மேற்கோளாகத் தருகின்றது. வெள்ளாட்டுக் கடாக்கள் சண்டையையும், செம்மறிக் கடாக்களின் சண்டையையும் கவனித்துப் பார்த்தவர் அறிவார், செம்மறிக் கடாக்கள் எத்தனை மூர்க்கமாகக் கால்களைப் பின்வாங்கி, முன் பாய்ந்து மண்டையில் மோதும் என்பதை. எனவே தகர் எனில் செம்மறிக் கடா என்பதே பொருத்தமாகத் தெரிகிறது.

இன்று வழக்கொழிந்து போயின எல்லாம். ஆடு எனும் சொல்லும் மாய்ந்து மட்டன் எனும் சொல் ஆட்சிக்கு வந்துவிடும் போலும். மலையாளி, எருமைக்கடாவைப் போத்து என்கிறார். ஆண் யானையைக் களிறு என்கிறார். பசுவின் ஆண்பாலை நாம் காளை என்போம். எருது எனும் சொல் ஒன்றுண்டு. இடபம் எனும் சொல்லோ ரிஷபம் எனும் வடசொல்லின் தமிழாக்கம். எருமை ஒரு இனம் என்றாலும் பெரும்பாலும் பெண்பாலை எருமை என்றும் ஆண்பாலை எருமைக்கடா என்றும் சொல்கிறோம். இனத்தின் பெயரைக் குறித்து, ‘யே எருமை’ என்று வசை விளிப்பதும் உண்டு.

திருக்குறளின் தகர் எனும் சொல் குறித்து இத்தனை எழுத வேண்டியிருக்கிறது. நாளை எவனுமோர் அரை வேக்காட்டு அறிஞன் தக்ரா எனும் சொல்லில் இருந்தே தகர் வந்தது, அது பக்ரா எனும் சொல்லின் திரிபு என்பான், இங்குச் சிலர் மண்டையும் ஆட்டுவார்கள்.

தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பல சுவையான தகவல்கள் தருகின்றன. பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் இளமைப் பெயர்கள் என்கிறது நூற்பா 1500. ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பால் பெயரென மொழிப என்கிறது நூற்பா 1501.
மேற்சென்று, விளக்கமாகவும் சொல்கிறார் தொல்காப்பியர். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை, தவழ்வனவற்றுக்கும் அது பொருந்தும். சங்க இலக்கிய நூல்கள் என்று இன்று சொல்லப்படும் நாற்பத்து ஒன்றில் ஒரு நூல் முத்தொள்ளாயிரம். அதன் பாடல்களில் ஒன்று –

 ‘அள்ளல்ப் பழனத்(து) அரக்காம்பல் வாய் அவிழ,
வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப், புள்ளினம் தம்
கைச்சிறகால்ப் பார்ப்பொடுக்கும்’

என்று நீளும். நீர் நிறைந்த வயல்களில் செவ் வாம்பல், சேதாம்பல், அரக்காம்பல் பின்மாலைப் பொழுதில் மலர்ந்து விரிகின்றன, பறவைகள் வெள்ளம் தீப்பட்டனவோ என மருண்டு தங்கள் குஞ்சுகளைச் சிறகினுள் அணைத்து ஒடுக்கிக்கொண்டன என்பது பொருள். இங்குப் பெறப்படுவது, புள்ளினங்களின் குஞ்சுகளைக் குறிக்கப் பார்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது.

‘பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே ‘ என்பது நூற்பா 1502. பெண் பாலைக் குறிக்க 13 சொற்கள். அன்னப் பேடை கேட்டிருக்கிறோம். பெண் யானையைக் குறிக்க, பிடி எனும் சொல்லை மலையாளம் இன்றும் ஆள்கிறது. ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி. வானரம் எனில் ஆண்குரங்கு, மந்தி எனில் பெண்குரங்கு.

மூங்கா, வெருகு, எலி, அணில் இவற்றின் இளமைப் பெயர் குட்டி. அவற்றின் குட்டியைப் பறழ் என்றும் சொல்லலாம். புலிப் பறழ் என்கிறது புலிக்குட்டியை சங்க இலக்கியம். எலிக்குஞ்சு என்கிறோம். பறவைகளின் பார்ப்புகளைக் குஞ்சு என்கிறோம். கிளிக்குஞ்சு, கோழிக் குஞ்சு, எலிக்குஞ்சு. அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என்கிறோம். தென்னம்பிள்ளை என்றும் சொல்வதுண்டு. பிள்ளை என்பதால் அவை வெள்ளாள இனம் என்று கொண்டாடப்படுகிறது என்பது பொருளில்லை.

வெருகு என்றால் பூனை. வெருகுப் பூனை, புனுகுப் பூனை, கடுவன் பூனை என்கிறோம். பூனையைப் பூசை என்கிறது சங்க இலக்கியம். கம்பனும் பூசை என்பான். மலையாளமும் நாஞ்சில் நாடும் பூச்சை என்னும். மூங்கா என்றால் கீரி. கீரியின் ஆங்கிலச் சொல் Mongoose.

ஆந்தை எனும் பறவையையும் மூங்கா என்பதுண்டு. மூங்கா – Mongoose எனும் பெயர்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

எலி போன்ற, ஆனால் எலி அல்லாத, உயிரினம் ஒன்றை மூஞ்சூறு என்பார்கள். யானைமுகனின் வாகனம். எலி வீட்டில் புகுந்தால் கண்டதையும் கரம்பிச் சேதம் செய்யும் என்று முனைந்து துரத்துவோம், பொறி வைத்துப் பிடிப்போம், விடமிட்டுக் கொல்வோம். ஆனால் மூஞ்சூறை எதுவும் செய்வதில்லை.

‘மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய’
என்பது தொல்காப்பிய நூற்பா 1505. ‘பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை’ என்பது அடுத்த நூற்பா. அஃதாவது மேற்சொன்ன நான்கின் குட்டிகளைப் பறழ் எனச் சொன்னாலும் மாறுபாடு இல்லை என்பது.

நாயும் பன்றியும் புலியும் முயலும் ஆயும் காலை குருளை என்பர் என்பதும் மரபியலே! நரிக்குட்டியையும் குருளை என்று சொல்லலாம் என்கிறார். கம்பன், பால காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், இராமனை வனம் ஏகவும் பரதனை முடிசூட்டவும் பணிக்கும் கைகேயியை இகழ்ந்து இலக்குவன் கொதித்துப் பேசும்போது,
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை
வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!’
என்பான். அதாவது சிங்கக் குட்டிக்கு இடும் உணவை, நாய்க்குட்டிக்குப் போட எண்ணினாளே என்பது பொருள்.

விரிவாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நரிக்குட்டியையும் குருளை எனலாம். மேற்சொன்ன ஐந்தின் குட்டிகளைக் குட்டி எனலாம், குருளை எனலாம், பறழ் எனலாம். நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றாலும் தவறில்லை என்கிறார். இன்று தொல்காப்பியர் இருந்தால் இலக்கணம் யாத்திருப்பார், குற்றம், கொலை, வஞ்சம், சூது, வழிப்பறி, வன்புணர்ச்சி செய்வோரையும் தலைவர் என்று சொல்லலாம் என.

ஆடு, குதிரை, மான் இனங்களாகிய நவ்வி, உழை என்பனவற்றின் குட்டிகள் மறி எனப்படும். நாஞ்சில நாட்டில், புதியதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிகளைத் துள்ளுமறி என்பார்கள். மரக்கிளைகளில் வாழும் குரங்கின் பிள்ளையைக் குட்டி எனலாம். மேலும் குரங்குக் குட்டியை மகவு, பிள்ளை , பறழ், பார்ப்பு என்றும் கூறலாம் என்கிறார். யானை, குதிரை, கழுதை, கடமை, பசு இவற்றின் குட்டியைக் கன்று எனலாம் என்றார்.

எருமைக்கன்று, மரைக்கன்று எனலாம். கவரிமான், கரடி இவற்றின் குட்டிகளைக் கன்று எனலாம். ஒட்டகக் குட்டியை ஒட்டகக் கன்று என்றும், யானைக்குட்டியை யானைக் குழவி என்றும், பசு எருமை இவற்றின் கன்றுகளைக் குழவி என்றும் சொல்லலாம் என்கிறார். கடமை மானின் குழவி, மரைமானின் குழவி எனலாம். ஆனால் மக்களின் இளமைப் பெயராக, குழவி, மகவு என்ற இரண்டு சொற்களுமே வரும், பிற வராது என்கிறார்.

மொழிக்குள் எவ்வளவு சுதந்திரம் பாருங்கள். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. கடற்புரத்தில், அருவிக்கரையில், ஆற்றோரத்தில், மலை முகட்டில், அடர் வனத்துள் நின்று ஆழ்ந்து மூச்சு இழுப்பது போல ஆசுவாசமாக இருக்கிறது.

வைக்கோல் படப்பில் நாய் கிடந்தாற்போல, தானும் கல்லாமல், நமக்கும் கற்றுத்தராமல் கெடுப்பார் இல்லாமலே கெடுத்துவிட்டார்களே மாபாவிகள்!

English Meaning - As I taught a kid - Rajesh
A tenacious person, unnecessarily, would not procrastinate a task. However, even such an ardent and might person too can restrain a while from doing a task like a rampant ram (ram is Bighorn sheep. goat like animal) that withdraws before it pounces. Because certain tasks would need right time to succeed (or else it can lead to failure or can be disastrous). Also, remember this restraining is not to take rest, it is only a preparatory step to defeat the opponent and succeed in the task.  

Questions that I ask to the kid
Why sometimes we should be like a ram (bighorn sheep)? 
Can you restrain a while from doing a task? Why?

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...