Skip to main content

Posts

Showing posts with the label புல்லறிவாண்மை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

  குறள் 850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உலகத்தார் -  உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார். உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு என்பான் - என்று சொல்லப்படுபவன், அப்பட...

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

குறள் 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் காணுதல் -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் காணாதான் - அறிவிலிக்கு, பேதைக்குப் காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல். காட்டுவான் - ஈதறிவு என்று காட்டி போதிப்பவன் (தம்மை எல்லாமும் அறிந்தவன் என்று நினைப்பதால்) தான்காணான் -  தானே அறிவிலியென்றாவன், அதாவது பேதையாவான் காணாதான் - அவ்வறிவிலியோ கண்டானாம் - தான் எவ்வாறு காணுகிறானோ, அதையே அறிவென்று தான்கண்டவாறு -  நினைத்து பாசாங்கிலோ, அறிவு மயக்கத்தின் போதையிலோ இருப்பான் முழுப்பொருள் அறிவில்லாதவன் ஒன்றையும் அறிந்து உணர்ந்துக்கொள்ளாதவன். அவன் தானும் அறியமாட்டான் (காணமாட்டான் / காணாதான்), அவனுக்கு தெரிந்ததையே அறிவென நம்பி பிறருக்கு உரைப்பான் (காட்டுவான்). ஆனால் பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டான்/அறிந்துக்கொள்ளமாட்டான் (தான்காணான்). அத்தகைய அறிவில்லாதவன் (காணாதான்) தான் கண்டதையே (கண்டானாம்)...

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

  குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் ஏவவும் - ஏவுதல் - கட்டளையிடுதல்; தூண்டிவிடுதல்; செலுத்துதல்; சொல்லுதல்; அனுப்புதல். செய்கலான் -  செய்யவதற்கறியான்; செய்யாதவன் தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். தேறான் -  தேற மாட்டான் ; தெளிய மாட்டான் ; துணிய மாட்டான்  அவ் - அந்த  உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்; நீண்டுசெல்லுதல்; தகுதியாதல்; நெடுமையாதல்; நேர்மையாதல்; பரத்தல்; நிரம்புதல்; மேற்படுதல்; ஓங்குதல்; நன்குபயிலுதல்; கூடியதாதல்; பிரிதல்; ஒழிதல்; நீங்குதல்; கழிதல்; மறைதல்:காணாமற்போதல்; மாறுதல்; கழிக்கப்படுதல்; வகுக்கப்படுதல்; சாதல்; முடிவாதல்; ஒலியடங்குதல்; தொடங்குவதைக்குறிக்கும்துணைவினை; பகுதிப்பொருளையேவற்புறுத்தும்துணைவ...

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

குறள் 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அரு - உருவமற்றது; கடவுள் மாயை சித்தபதவி; அட்டை புண் அரு - aru   (ம்) rare, dear   மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு. சோரும் - சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல். அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ள...

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குறள் 846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது ; நாய் பொய் உண்மை மறைத்து - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்; ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். மறைத்தலோ - புல்லறிவு - அறியாமை தம் - தன்னுடைய - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. வயின் - இடம்; பக்கம்; வீடு; வயிறு; பக்குவம்; முறை; எல்லை; ஏழனுருபு; ஓர்அசைச்சொல். குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு. மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல். மறையா - மறையாத வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு முழுப்பொருள் ஒருவர் செய்த குற்றத்தால் ஒரு அழிவு / துன்பம் உண்டா...

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

குறள் 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலார் - இல்லாதவர் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. தம்மை ப் - tmmai   s. Mother, தாய். See தம்; ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. பீழிக்கும் - பீழித்தல் - pīẕittl   v. noun. Afflicting, distress ing, paining, வருத்துதல்; [ex பீழை.] (குறள்.) பீழை - துன்பம் செறுதொழில் - தீச்செயல். செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும் செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். அரிது - அரியது, அருமை; பசுமை; குறைவு முழுப்பொருள் அறிவில்லாதவர்கள் பேதையர்கள் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வருத்தம் அளிக்கும் துன்பத்தின் அளவு தெரியுமா? பேதையருக்கு பகைவர் இருப்பாராயின், பகைவர் பேதையருக்கு ஆற்றக்கூடிய துன்பத்தை விட பேதையர் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் துன்பம...

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்

குறள் 842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் புல்லறிவாண்மை - அறிவின்மை அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலான் - இல்லாதவன் நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் பிறிது - வேறானது; மற்றது யாதும் - Anything and everything; anything; எதுவும். இல்லை -உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. பெறுவான் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. முழுப்பொருள் அறிவில்லாதவன் கற்காதவன் மனம் மகிழ்ந்து விரும்பி மற்ற ஒருவ...

அறிவின்மை இன்மையுள் இன்மை

குறள் 841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் புல்லறிவாண்மை -  அறிவின்மை அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று. இன்மையுள் - இல்லாமையில், வறுமையுள் இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று. பிறிது - வேறானது, மற்றது இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று. இன்மையா -இன்மையாக; வறுமையாக வையாது - கருதாது உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று முழுப்பொருள் அறிவு என்ரென்பது அறியாமையில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு ஞான ஒளி ஆகும். அறிவது ஒவ்வொன்றும் அறியாமையே என்று சொல்லுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா ஞானத்தையும் ஒரு மனிதனால் கற்பது என்பது முடியாத செயல். ஆதலால் அறியவேண்டியவற்றை அறிந்துக்கொள்ளவேண...

வெண்மை எனப்படுவ தியாதெனின்

குறள் 844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் வெண்மை -  வெண்ணிறம்; தூய்மை; ஒளி; இளமை; மனக்கவடின்மை; அறிவின்மை; புல்லறிவுடைமை எனப்படுவது - அறியப்படுவது யாது ?' - எது? எனின் - என்றால் ‘ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி ; ஒழுங்கு; நல்லறிவு. உடையம் - உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி. யாம் - தனக்கு என்னும் - என்கிற செருக்கு -  அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம். முழுப்பொருள் அறியாமை (அறிவின்மை, புல்லறிவு) என்பது என்னவென்றால் தனக்கு நல்லறிவு (மிகுதியாகவோ) இருப்பது என்று நினைத்துக்கொள்ளும் மன மயக்கம்  (அகந்தை, மாயை, தற்பெருமை). இவ்வகந்தை மற்றவர்களிடம் காண்பிக்க வேண்டும் என்று இல்லை. தன்னுள் அந்த மயக்கம் இருந்தாலே அது அறியாமை ஆகும். (சில நாட்களில் வெளியேயும் வெளிப்பட்டுவிடும் என்பது வேறு விஷயம்). தன்னுணர்வு இருப்பதில் தவறில்லை. ஆனால் மயக்கம் கொள்ளுதல் அறிவின்மையாகும்.  மேலும் அஷோக் உரை பரிமேலழகர் உரை வெண்மை எனப்படுவது யாது எ...

கல்லாத மேற்கொண் டொழுகல்

குறள் 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற  வல்லதூஉம் ஐயம் தரும். [பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை] பொருள் கற்கை - படித்தல், பயிலுதல் கல்லாத - (முழுமையாக) கற்காத வற்றை (கற்காத நூலினை பற்றி) மேற்கொண்டு - மேலும்; இனிமேல். மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல் பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல். மேற்கொண்டு - மேலோட்டமாக அதைப்பற்றி நன்கு தெரிவது போல்  பேசுவது ஒழுகல் - அவருடைய நடத்தைய பற்றி ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். கசடற - கசடு + அற கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு. அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக. அற - அறவே  வல்லது -  வலிமையுள்ள; திறமையுள்ள வல்லதூஉம் - வலிமையான (நூல்) வற்றின் மீதும் ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர். தரும் - தருதல் முழுப்பொருள் ஒருவர் ஒரு பொருளை பற்றி (...