அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை குறள் 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது
குறள் 843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலார் - இல்லாதவர்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

தம்மைப் - tmmai   s. Mother, தாய். See தம்; ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

பீழிக்கும் - பீழித்தல் - pīẕittl   v. noun. Afflicting, distress ing, paining, வருத்துதல்; [ex பீழை.] (குறள்.)

பீழை - துன்பம்

செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அரிது - அரியது, அருமை; பசுமை; குறைவு

முழுப்பொருள்
அறிவில்லாதவர்கள் பேதையர்கள் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வருத்தம் அளிக்கும் துன்பத்தின் அளவு தெரியுமா? பேதையருக்கு பகைவர் இருப்பாராயின், பகைவர் பேதையருக்கு ஆற்றக்கூடிய துன்பத்தை விட பேதையர் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் துன்பம் அதிகமாவே இருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..................காமநோய் கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்ந்த தன்றே” (கம்ப.மாரிசன்.86)

பரிமேலழகர் உரை
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது. (பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல்அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
அறிவில்லாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்தும் இடர்ப்பாடு, பகைவர்க்கும் செய்தல் அரிது. இது மேற்கூறியதனை வலியுறுத்திற்று.

மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain