குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
உலகத்தார் - உலகிலுள்ளோர், உலகமக்கள்; உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்.
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்
என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )
இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு
என்பான் - என்று சொல்லப்படுபவன், அப்படிப் பட்டவர்கள், என்று சொல்பவன், என்கின்றவன்
வையத்து - வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.
அலகை - பேய்; பேய்க்கொம்மட்டிக்கொடி; காட்டுக்கற்றாழை அளவு
அலகையா - உருவிலாத அருவமான பேயாகக்
வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்
வைக்கப்படும் - வணங்கப்படும்
முழுப்பொருள்
சான்றோர்களும் உலகத்தோரும் அறிஞர்களும் அறிந்துணர்ந்த அறிவினை/மெய்யினை ஏற்காமல் அது அறிவில்லை என்பான் அறிவில்லாதவன். அத்தகைய அறிவில்லாதவன் இவ்வையகத்தில் உருவமற்ற பேய் என கருத்தப்படுபவற்றின் வரிசையில் வைக்கப்படுவான்.
தான் கண்டதே அறிவு பிறர் கூறுவது அறிவாகாது எனவும் பிறர் கூறுவதையும் துளியும் செவிக்கொடுத்து கேட்காத தன்மையுடைவர்கள் ஒருவிதத்தில் இறுமாப்பு (தலைக்கனம்) உடன் இருப்பவர்கள். அவர்களும் ஒருவிதத்தில் அறிவில்லாதவர்களே.
கம்பர் இத்தகையோரையே விபீடண சரணாகதி படலத்தில், இவ்வாறு கூறுகிறான்: “
மையற நெறியின் நோக்கி மாமறை நெறியின் நின்ற
மெய்யினைப் பொய்யென்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார்”. (கம்ப.வீபிடணன்,117)
பரிமேலழகர் உரை
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறிவென்றது.
மு.வரதராசனார் உரை
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
English Meaning - As I taught a kid - Rajesh
A person who doesn't accept or who rejects the knowledge or findings of the scholars and experts,who considers his findings as the only knowledge and who doesn't listen to others will be placed in the series of formless brainless ghosts. Because a person who doesn't listen to others knowledge and has the ego to consider his knowledge as the only knowledge is a stupid ignorant person.
Questions that I ask to the kid
Who will be placed in the order of ghosts? Why?
No comments:
Post a Comment