Posts

Showing posts with the label W - வண்ணதாசன்

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

குறள் 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் உவக்கும் -  உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. அறியார்கொல் -  அறிய மாட்டார்கள்;  அறியாதவர்கள் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை வைத்து - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைம...

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

குறள் 934 சிறுமை பலசெய்து சீர ழி க்கும் சூதின் வறுமை தருவதொன்று இல் [பொருட்பால், நட்பியல், சூது] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. பல - ஒன்றுக்குமேற்பட்டவை செய்து - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு. அழிக்கும் - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல். சூதின் - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி. வறுமை - துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை. தருவது - கொடுப்பது ...

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்

Image
குறள் 932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு [பொருட்பால், நட்பியல், சூது] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஒன்று -  ஒன்று என்னும் எண்; மதிப்பிற்குரிய பொருள்; வீடு பேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை எய்தல் -  அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல் எய்தி - அடைய எண்ணி செல்லுத்துதல் நூறு -  நூறு என்னும் எண்; மா, பொடிமுதலியன; சுண்ணணாம்பு. இழப்பு  - இழக்கை, நட்டம் பொருளழிவு இழக்கும் -  இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல் சூதர் - அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர்; பாணர். சூதர் -  cūtar   s. (sing. சூதன்.) Bards, en comiasts, புகழ்வோர். 2. Charioteers, coach men, தேர்ப்பாகர். 3. Singers, flute players, a caste, பாணர். W. p. 94. SOOTA. 4. The chief disciple of Vyasa, and the com municator of the eighteen Puranas which he received from him, வியாசர்மாணாக்கர். 5. [ex சூது.] Gamblers, players at draught...

தன்னைத்தான் காதல னாயின்

குறள் 209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்  துன்னற்க தீவினைப் பால் [அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தன்னைத், தான் -  சுயம் தன்னைத் தான் - ஒருவன் தன்னையே சுயமாக காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன் ஆயின் - அப்படி ஆனால் எனைத்து   - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு. ஒன்றும் - சிறிதும் துன் - துர் - tur   a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம்,; துன்னாற்றம்). ur துன் - s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR. துன்னற்க - பிறர்க்கு து...

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For English meaning scroll to the bottom of this post) பொருள் அன்று - அந்நாள் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா. அன்று அறிவாம் - அந்நாளில் அறிந்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், செய்துக்கொள்ளலாம் என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express) என்னாது - என்று சொல்லாமல் அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) -  தருமம் ; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம், தன்னறம் - ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம்.   செய்க - செய்ய வேண்டும் மற்று அது - மற்றவை பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வை முதலியன குறைதல். பொன்றுங்கால் - இறுதிக்காலத்தில் பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உத...

குணம்நாடிக் குற்றமும் நாடி

குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்  மிகைநாடி மிக்க கொளல். [பொருட்பால், அரசியல்,தெரிந்துதெளிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு, தெளிவு முதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு. நாடிக் - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். குற்றமும் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். அவற்றுள் - அதனுள் மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு. நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்த...

அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

Image
குறள் 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்  எஞ்சாமை வேந்தர்க் கியல்பு [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] (For English meaning scroll to the bottom of this post) பொருள் அஞ்சாமை - பயப்படாமை, திண்மை (மன உறுதி, வலிமை, கலங்காநிலைமை, பருமன்; உண்மை, நிதானம், பாரம், மெய்), ஒன்றை அஞ்சாமல் எதிர் கொள்ளுதல், ஒன்றை பயம் இல்லாமல் சந்தித்தல்; பயமின்மை, அச்சமின்மை தைரியம், துணிச்சல், துணிவு ஈகை - கொடை; பொன்; கற்பகம்; இண்டு; புலிதொடக்கி; காடை; காற்று; மேகம்; கற்பகமரம்; இல்லாமை; ஈதல்; கொடுத்தல்; பகிர்ந்துகொடு அறிவூக்கம் - அறிவு + ஊக்கம் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல். ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும் இந்நான்கும் - எஞ்சாமை -குறையாமை, ஒழியாமை, முழுமை. எஞ்சு - சுருங்கு, குறை; சேஷமா யிரு;  கட; செய்யாதொழி. ...