குறள் 1080 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து [பொருட்பால், குடியியல், கயமை] பொருள் எற்றிற்கு - எற்றித்தல் - இரங்குதல் (Totake pity, have compassion;) எற்றிழிவு - உயர்வுதாழ்வு; பெருமைசிறுமை; மேடுபள்ளம். உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர் எற்றிற்குரியர் – வேறு எத்தொழிலுக்குத்தான் ஏற்றவர் (எதற்கும் இல்லை என்பது உள்ளுரை) கயமை - கீழ்மை. கயவர் - கீழ்மக்கள் ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். உற்றக்கால் - நேர்ந்த பொழுது விற்றற்கு - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல் உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர் விற்றற்கு உரியர் – அதற்காக தம்மையே அடிமையாக விலை கூறி விற்கவும் செய்வர் விரைந்து - உற்றுழி துன்பம்நேர்ந்தகாலம்; துன்புற்றஇடம். மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல். முழுப்பொருள் தமக்கு லாபம் என்றாலோ அல்லது குறிப்பாக தமக்கு ஒரு நட்டம் அல்லது துன்பம் என்றாலோ தன்னை...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.