ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், கயமை குறள் 1077 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு

 

குறள் 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
[பொருட்பால், குடியியல், கயமை]

பொருள்
ஈர்ங்கை  - உண்டுலரும் ஈரக்கை கொண்டும்
ஈர்ங்கை - உண்டுகழுவியகை.

விதிர்த்தல் - நடுங்குதல்; அஞ்சுதல்; சிதறுதல்; தெறித்தல்; அசைத்தல்; உதறுதல்; பலவாகப்போகவிடுதல்; சொரிதல்.

விதிரார் - உதறிவிடமாட்டார் (எங்கு ஏதேனும் இரந்தார்க்குப் போய்விடுமோ என்று)

கயமை - கீழ்மை.
கயவர் - கீழ்மக்கள்

கொடிறுகதுப்பு; யானைமதச்சுவடு; குறடு; பூசநாள் (cheeks, jaws).

உடைக்கும் - உடைத்தல்uṭai-   11 v. tr. caus. of உடை¹-. [K. oḍe, M. uḍa.] 1. To break into pieces,as a vessel, a lump, a clod, any solid or massivesubstance, teeth; தகர்த்தல் மகுட கோடிக ளுடைத்தலின் (பாரத. காண்டவ. 27). 2. To cuff on another'shead with the knuckles; குட்டுதல் (திவா.) 3. Tosplit, as wood; to fracture, as the skull; பிளத்தல் கட்டையை யுடைத்துக்கொடு. Colloq. 4. To burst,as the bank of a river; கரை உடைத்தல் செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் (நாலடி, 222).5. To open, as a boil; புண் கட்டியுடைத்தல். 6. Tountwist, untwine; முறுக்கவிழ்த்தல். 7. To defeat,rout, put to disorderly flight; தோற்கச்செய்தல்.படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்கும் (நான்மணி. 18). 8. To break, as news; to reveal;வெளிப்படுத்துதல். அவன் அந்த இரகசியத்தை உடைத்துவிட்டான். Colloq. 9. To damage, ruin, impoverish; அழித்தல் பெண்மை யுடைக்கும் படை (குறள், 1258). 10. To trouble, distress; வருத்துதல் பொறாமை யுள்ளுடைக்கு மென்க (இரகு. யாக. 12).  

கூன் வளைவு; உடற்கூனல்; கூனன்; நத்தை; ஆந்தை; பெரும்பாத்திரம்செய்யுளடியில்அளவுக்குமேல்வரும்அசையும்சீரும்.

கையர்
கீழ்மக்கள்; கள்ளர்; வஞ்சகர்; மூடர்.

அல்லாதவர்க்கு கொள்ளாதவர் தவிர, 

முழுப்பொருள்
கீழோர்களான கஞ்சர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தங்களின் தாடைகளை (கன்னத்து கதுப்புகளை) உறுதியான கைகளைக்கொண்டு உடைப்பவர்கள் (வன்முறையாளர்கள்) தவிர மற்ற எவருக்கும் தாங்கள் உண்டு கை கழுவியப்பின்புக்கூட கை விரல்களை உதிறமாட்டார்கள். ஏனெனில் கையில் உள்ள உணவின் மணம் நீரில் இருக்கும். அந்த மணம் கூட பிறருக்கு கிடைக்ககூடாது என்று நினைப்பவர்கள் அவர்கள். 

கஞ்சர்கள் புண்ணியதற்காகவோ புகழுக்காகவோ அல்லது வேறு ஏதாவது பயன் அடையவேண்டியோ கூட பிறருக்கு கொடுத்து உதவ மாட்டார்கள் போலும். அதனால் தான் இவர்களை அடித்து வன்முறை வழியில் சிலர் பொருளை பிடுங்கிக்கொள்வர் போலும்.

பிறருக்கு எத்தருணத்திலும் கொடுத்து உதவாத கஞ்சர்கள் கீழோர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

”ஈர்ங்கை மறந்தவென் இரும்பே ரொக்கல்” (புறநா 393:10)

இதே கருத்தையே, அறநெறிச்சாரப்பாடல் இவ்வாறு கூறுகிறது

இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்–நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.

அதாவது, தம்பால் உள்ள பொருள்களை, நட்பினர்களுக்கும் கொடாமலும், பிச்சையேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் கஞ்சராம் கீழோர் உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும். தடியெடுப்பவனுக்கும் தண்டல்காரனுக்கும் அஞ்சுகிற கீழோர், மற்றபடி, எச்சல் கையால் காக்கைகூட ஓட்டமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.

மு.வரதராசனார் உரை
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain