Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

 

குறள் 1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
[பொருட்பால், குடியியல், கயமை]

பொருள்
அச்சமே - அச்சம் - பயம்; மகளிர்நாற்குணத்துள்ஒன்று; தகடு இலேசு அகத்திமரம்; சரிசமானம் பளிங்கு

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

கயமை - கீழ்மை.

கீழ்களது கீழ்மக்கள், s. Inferiors, low-caste people, the base, the vulgar, the igno rant, இழிந்தோர்.

ஆசாரம்சாத்திரமுறைப்படிஒழுகுகை; நன்னடை காட்சி வியாபகம் சீலை படை அரசர்வாழ்கூடம்; தூய்மை பெருமழை உறுதிப்பொருள் முறைமை

எச்சம் எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

அவா எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

உண்டேல் - உள்ளது என்றால்
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு
- To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும்

உண்டாம்உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers;

சிறிதுஇழிந்தது, அற்பம், சிலபல, சிறுமை

முழுப்பொருள்
கீழ்மக்களான கயவர்களிடம் சிறிதளவாவது நன்னடத்தை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பயமே ஆகும். ஏன் பயப்படுகிறார்கள்? அவர்கள் தண்டிக்கப்படக்கூடும் என்ற பயத்தினால். பயத்தினால் மட்டும் இன்றி சில ஒழுக்கங்களை அவர்கள் பின்பற்றுவது ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்ற கொள்கையாலோ அல்லது ஒழுக்க உணர்வாலோ அல்ல. அவர்கள் வேறு ஏதோ ஒரு பொருளின் மீதோ அல்லது பதவியின் மீதோ அல்லது பலனின் மீதோ கொண்ட அவாவினால் தான் சிறிதளவில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். 

கயவர்கள் கொஞ்சமேனும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது தண்டனையின் மீதுள்ள அச்சத்தினாலும் தங்களுடைய சுயநலத்தின் மீதுக்கொண்ட அவாவினாலும் தான் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம். இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.

மு.வரதராசனார் உரை
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

No comments:

Post a Comment